போட்டி இல்லாத தொழில்
வணக்கம் நண்பர்களே இன்றைய வியாபார பதிவில் மிகவும் அருமையான பிஸ்னஸ் பற்றித்தான் தெரிந்து கொள்ளப் போகின்றோம். இந்த பிஸ்னஸை யார் வேண்டுமானாலும் செய்து வரலாம். புதிதாக என்ன தொழில் தொடங்கலாம் என்று நினைப்பவர்கள், இந்த தொழிலை செய்வதன் மூலம் அதிகமான வருமானத்தை எதிர் பார்க்கலாம். இந்த தொழில் கிராமத்தில் உள்ளவர்களுக்கு பொருத்தமாக இருக்கும், மேலும் அவை என்ன தொழில் என்றும், அதை செய்வதற்கு தேவைப்படும் முதலீடு எவ்வளவு என்றும் தெரிந்து கொள்வோம்.
வீட்டில் இருந்தபடியே தினமும் 3,000 ரூபாய் வரை சம்பாதிக்கலாம் |
மூலிகை காபித் தூள் தயாரிப்பு:
இன்றைக்கு நாம் தெரிந்துகொள்ளப் போகின்ற பிஸ்னஸ் என்னவென்றால், மூலிகை காபித்தூள் எப்படி தயாரித்து அதனை விற்பனை செய்வது பற்றித்தான் தெரிந்துகொள்ளப் போகின்றோம். இப்பொழுது மழைக்காலம் தொடங்கி விட்டதால், பலருக்கும் சளி, இருமல், காய்ச்சல் போன்ற பிரச்சனைகள் ஏற்படுகிறது, எனவே இயற்கை முறையில் உள்ள பொருட்களை கொண்டு மூலிகை காபி தூள் தயாரிப்பது பற்றித்தான் தெரிந்துகொள்ளப் போகின்றோம். இந்த இயற்கையான காபித் தூள்களை, நீரில் கலந்து குடிப்பதன் மூலம் உடலில் ஏற்படும், காய்ச்சல், சளி போன்றவை எளிதாக குணமாகிவிடும். மேலும் அவற்றை எப்படி தயாரிப்பது என்று பார்க்கலாம்.
தேவைப்படும் இடவசதி:
உங்களுக்கு இந்த மூலிகை காபித் தூள்களை தயாரிப்பதற்கு 10 × 10 இடவசதிகள் இருந்தாலே போதும், மிகவும் எளிதாக தயாரித்து விற்பனை செய்யலாம். இந்த தொழிலில் நீங்கள் நன்றாக லாபம் அடைந்த பிறகு, தனியாக ஒரு கடை அமைத்து கூட செய்யலாம்.
தேவைப்படும் மூலப்பொருள்:
மூலிகை காபித் தூள்களை தயாரிப்பதற்கு தேவைப்படும் பொருட்கள், மிளகு, சுக்கு, மல்லி, திப்பிலி, சீரகம், அஷ்வகந்தா, விளாமிச்சை வேர் போன்ற மூலப்பொருட்கள் தேவைப்படுகின்றன, இந்த மூலப்பொருட்களை வாங்குவதற்கு மட்டும் 20,000 ரூபாய் தேவைப்படுகிறது. மேலும் இதனை தயாரிப்பதற்கு 2 மெஷின்கள் தேவைப்படுகின்றன. அதாவது ஒன்று காபித்தூள் தயாரிக்கும் மெஷின், மற்றொன்று பேக்கிங் செய்யும் மெஷின், இந்த இரண்டு மெஷின்களை வாங்குவதற்கு மட்டுமே 50,000 ரூபாய் தேவைப்படும்.
நீங்கள் இந்த பேக்கிங் மெஷின்களை மற்றும் வாங்கிக் கொண்டு, காபித்தூள்களை மில்லில் அரைத்து கொண்டால் முதலீடு அதிகமாக தேவைப்படாது, எனவே பேக்கிங் மெஷினை மட்டும் வாங்கிக் கொள்ளலாம். பேக்கிங் மெஷினின் விலை 890 ரூபாய் மட்டும்தான்.
இந்த பிஸ்னஸை யார் செய்தாலும் தினமும் 1,000 ரூபாய்க்கு மேல் வரையும் சம்பாதிக்கலாம் |
மூலிகை காபித் தூள் தயாரிக்கும் முறை:
இந்த மூலிகை காபித்தூள்களை தயாரிப்பதற்கு தேவைப்படும் பொருட்கள், மிளகு, சுக்கு, மல்லி, திப்பிலி, சீரகம், அஷ்வகந்தா, விளாமிச்சை வேர் போன்ற ஏழுவகையான பொருட்கள் தேவைப்படுகிறது. நாம் எடுத்து வைத்த ஏழு பொருட்களிலும் தனித்தனியாக ஒரு கிலோ எடுத்துக் கொண்டு, அதனை காயவைத்து அரைத்துக் கொள்ள வேண்டும். நீங்கள் இதனை அரைப்பதற்கு உங்கள் ஊரில் இருக்கும் மில்லில் கூட அரைத்து கொள்ளலாம். பிறகு நீங்கள் இந்த தொழில் நல்ல லாபம் வந்த பிறகு தனியாக ஒரு மெஷின் கூட வாங்கிக் கொள்ளலாம்.
பேக்கிங் செய்யும் முறை:
மூலிகை காபித் தூள்களை தயாரித்த பிறகு பேக்கிங் செய்வதற்கு கவர்கள் தேவைப்படுகின்றன, இந்த கவர்களை நீங்கள் நேரடியாகவும் வாங்கிக் கொள்ளலாம், அல்லது ஆன்லைன் மூலம் கூட வாங்கிக் கொள்ளலாம். நீங்கள் பாக்கெட்டில் பேக்கிங் செய்யும் பொழுது 100 கிராம் அளவிற்கு காபித் தூள்களை பேக்கிங் செய்ய வேண்டும்.
விற்பனை செய்யும் முறை:
தோராயமாக நீங்கள் 100 கிராம் மூலிகை காபித்தூள்களை 55 ரூபாய்க்கு விலை வைத்து, 100 பாக்கெட் ஒரு நாளைக்கு மட்டும் விற்பனை செய்யும் பொழுது 5,500 ரூபாய் கிடைக்கும். ஒரு நாளைக்கு மட்டுமே 5,500 ரூபாய் என்றால் ஒரு வாரத்திற்கு 38,500 ரூபாய் வரை கிடைக்கும்.
மேலும் நீங்கள் தயாரித்த பொருட்களை ஆன்லைன் மூலம் விற்கலாம் மற்றும் நாட்டு மருந்து கடை, சிறிய மல்லிகை கடை, டிபார்ட்மென்ட் ஸ்டோர், வீடுகளுக்கு அருகில் இருக்கும் பெட்டி கடைகள் போன்றவற்றிக்கு விற்பனை செய்வதன் மூலம் அதிகமான லாபத்தை எதிர் பார்க்கலாம்.
வீட்டில் தேவையில்லாத இடத்தில் இந்த தொழிலை செய்தால்..! நல்ல லாபம் கிடைக்கும்..! |
இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில் போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | siru tholil ideas in tamil |