கொடி கட்டி பறக்கும் தொழில் | Upcoming Business Ideas in India
இளைஞர்கள் படித்து முடித்ததும் வேலைக்கு செல்ல வேண்டும் என்று நினைக்கின்றனர். ஆனால் படித்த படிப்பிற்கேற்ற வேலை கிடைப்பதில்லை. படித்த படிப்பிற்கேற்ற வேலை இல்லாமல் ஏதோ ஒரு வேலை செய்வதை விட சொந்தமாக தொழில் செய்யலாம் என்று நினைக்கின்றனர்.
சொந்தமாக தொழில் செய்ய வேண்டும் என்று நினைக்கும் ஒவ்வொருவருக்கும் இந்த பதிவு பயனுள்ளதாக இருக்கும். இந்த பதிவில் கூறியுள்ள இந்த தொழிலுக்கு எதிர்காலத்தில் தேவை அதிகமாக இருக்கும். அதனால் இந்த தொழிலை நீங்கள் தாராளமாக செய்யலாம். அது என்ன தொழில், எப்படி செய்யலாம் என்று முழு பதிவையும் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே: https://bit.ly/3Bfc0Gl
Daycare Business in India:
சொந்தமாக தொழில் செய்ய வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு இந்த தொழில் ரொம்ப ஏற்றதாக இருக்கும். இந்த காலத்தில் பெற்றோர்கள் இருவருமே வேலைக்கு செல்கிறார்கள். இருவரும் வேலைக்கு செல்லும் கட்டாயத்தில் தான் உள்ளார்கள்.
அதனாலேயே குழந்தையை பார்த்து கொள்வதற்கு தனியாக ஒரு ஆலை நியமிக்கின்றனர். அதனால் இந்த தொழிலை நீங்கள் ஒரு மையமாக தொடங்கலாம். கண்டிப்பாக இந்த தொழிலுக்கு எதிர்காலத்தில் Demand அதிகமாக இருக்கும்.
இடம்:
உங்கள் வீடே வசதியாக இருந்தால் வைத்து கொள்ளலாம். இல்லையென்றால் தனியாக இடம் பார்த்து அதில் நீங்கள் கட்டிடத்தை கட்டலாம். நீங்கள் தேர்ந்தெடுக்கும் இடம் Main இடமாக இருத்தல் வேண்டும்.
அதவாது பெற்றோர்களுக்கு குழந்தையை விடுவதற்கு ரொம்ப தூரமானதாக இருக்க கூடாது. நீங்கள் கட்டும் கட்டிடம் சுத்தமாகவும், சுகாதாரகமாகவும் இருக்க வேண்டும்.
இடத்தின் அளவு 2,500 முதல் 3,500 சதுர அடி கொண்டதாக இருத்தல் வேண்டும். பகல் நேரம் மையம் தொடங்குவதற்கு மொத்த செலவு 20 லட்சம் வரை தேவைப்படும்.
இதையும் படியுங்கள் ⇒ மாதச் சம்பளத்திற்கு வேலை செய்யாமல் நீங்களே முதலாளியாக மாற சூப்பர் ஐடியா..!
உரிமம் பெற வேண்டும்:
நீங்கள் வீட்டில் பகல் நேர பராமரிப்பு ஆரமித்தாலும் சரி, தனியாக ஆரமித்தாலும் சரி அதற்கு அதிகாரபூர்வமாக உரிமம் பெற்றிருத்தல் வேண்டும். குழந்தை பராமரிப்பு உரிமம் பெற்றிருக்க வேண்டும்.
விளம்பரம்:
எந்த தொழிலையும் விளம்பரம் செய்வது அவசியமானது. அதனால் இந்த தொழில் செய்வதை செய்தித்தாள், சமூக வலைத்தளம், லோக்கல் சேனல்கள் போன்றவற்றில் விளம்பரம் செய்யலாம்.
இந்த தொழிலுக்கான வளர்ச்சி நாளுக்கு நாள் வளர்ந்து வருகிறது. அதனால் இந்த தொழிலை தயங்காமல் செய்யலாம்.
வருமானம்:
இந்த தொழிலின் வருமானத்தை பொறுத்தவரை தோராயமாக 3000 முதல் 18,000 வரை வசூலிக்கப்படுகிறது. இதுவே நேரத்தை பொறுத்து மாறுபடும்.
இதையும் படியுங்கள் ⇒ தினமும் 1 மணி நேரம் வேலை பார்த்தால் 2,000 ரூபாய் சம்பாதிக்கலாம்..!
இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில் போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | siru tholil ideas in tamil |