ஆண்கள் மட்டும் இல்லை பெண்களும் இந்த தொழிலை செய்யலாம் | Simple Business For Ladies in India in Tamil
எங்களின் அன்பான சகோதர சகோதரிகளே தினமும் உங்களின் பிற்காலத்தில் என்ன செய்ய போகிறோம் என்று அனைவரும் யோசித்து இருப்பீர்கள். அப்படி யாரும் யோசிக்காமல் இருந்திருக்க வாய்ப்பு இல்லை. பொதுவாக ஆண்கள் மட்டும் வேலைக்கு செல்வார்கள் அப்போது இருந்த காலகட்டம் வேறு, இப்போது இருக்கும் காலகட்டம் வேறு. இப்போதெல்லாம் இருவரும் வேலைக்கு சென்றாலும் ஒரு குடும்பத்தை நடத்துவதற்கு தடுமாறுவார்கள். அதனால் தான் இப்போதெல்லம் பெண்களையும் படிக்கவைக்க முன்னுரிமை தருகிறார்கள்.
ஆனால் வீட்டில் இருக்கும் பெண்கள் வேலைக்கு எப்படி செல்வது..? அவர்களுக்கு தான் வீட்டிலில் உள்ள வேலைகளே சரியாக உள்ளதே. எனக்கு பகல் நேரங்களில் நேரம் இருக்காதே என்ன செய்ய முடியும் என்று நினைத்து நினைத்து வீட்டிலேயே இருந்துவிடாதீர்கள். உங்களுக்கத்தான் இது போன்ற சுயதொழில்கள் பொதுநலம்.காம் தினம் தோறும் பதிவிட்டு வருகிறோம். அந்த வகையில் இன்று அதிகாலையில் மட்டுமே 1,000 முதல் 2,000 வரை சம்பாதிக்கும் தொழிலை பற்றி இந்த பதிவில் படித்து தெரிந்துகொள்வோம்.
டீ கடை தொழில்:
தினமும் அதிகாலையில் எனக்கு நேரம் அதிகம் இருக்கும். அந்த நேரத்தில் எனக்கு வேலை கிடைத்தால் போதும் நாம் சம்பாதிக்க நல்ல வழியாக இருக்கும். இந்த தொழில் வீட்டில் இருக்கும் பெண்களும் செய்யலாம் அதற்கான இடங்கள் கிடைத்தால் நன்றாக நீங்களும் செய்யலாம். எந்த தொழிலும் குறைந்தது இல்லை..! டீ கடையில் எப்படி பெண்கள் வேலை பார்க்க முடியும் என்று யோசிக்காதீர்கள். இன்று பெண்கள் இல்லாத வேலைகள் எதுவும் இல்லை. அனைத்து துறைகளிலும் ஆண்களுக்கு ஈடாக அனைத்து இடங்களும் பெண்கள் வேலை செய்து வருகிறார்கள். இந்த டீ கடை தொழிலை வீட்டில் இருக்கும் பெண்கள் தான் செய்ய வேண்டும் என்று கட்டாயம் இல்லை அனைவருமே செய்யலாம்.
ரூ.500 இருந்தால் போதும்.. தினமும் ரூ.1,000/- சம்பாதிக்கலாம்! சூப்பர் பிசினஸ்! |
- படித்துக்கொண்டே வேலை பார்க்கும் இளைங்கர்களை நாம் தினம் தோறும் பார்த்து தான் வருகிறோம். அவர்களும் இந்த தொழிலை செய்யலாம். படிக்கும் போதே முதலாளி ஆகும் ஆசை உள்ளவர்கள் இந்த தொழிலை கையில் எடுத்து தையிரியமாக செய்யலாம்.
- இந்த தொழில் செய்யவதற்கு நல்ல இடம் எதுவென்றால். அந்த இடத்தில் கூட்டம் அதிகம் இருக்க வேண்டும். ஏனெற்றால் காலையில் வேலைக்கு செல்பவர்கள். டீக்கடையில் தான் டீ குடிப்பார்கள். இரவு நேர பணியாளர்கள் அசதியில் வருவார்கள் அவர்களும் அந்த டீயைத்தான் குடிப்பார்கள்.
கல்லூரி செல்லும் மாணவர்கள் பேசி மகிழ்வது டீக்கடையில் தான் அவர்களின் அதிகபட்ச சந்தோசம் ஒரு டீ தான்.
இன்னும் சிலர் இருப்பார்கள் வீட்டிலிருந்து வெளியில் வேலைக்கு வருபவர்கள் நல்ல வீட்டு டீ குடிக்க நினைப்பார்கள், அந்த வகையில் உங்களின் தரம் நன்றாக இருந்தால் அதற்கென்று தனி கூட்டம் உங்களை தேடி வருவார்கள்..!
என்ன இந்த டீக்கடையில் அவ்வளவு என்ன லாபம் இருக்க போகிறது என்று யோசிப்பீர்கள். இந்த தொழிலை முழு நேரமாக செய்பவர்களை கேட்டு அறிந்துகொள்ளுங்கள். அவர்களின் லாபங்கள் எவ்வளவு, இந்த தொழிலை ஏன் தொடர்ந்து செய்து வருகிறார்கள் என்று கேட்டு அறிந்துகொள்ளுங்கள்.
இந்த தொழில் தினமும் 1 மணி நேரம் அல்லது 2 மணி நேரம் வேலைபார்த்தால் 1000 முதல் 2000 ரூபாய் கிடைக்கும்..! அப்படி இருக்கும் பட்சத்தில் முழு நேரம் இந்த தொழிலை செய்பவர்களுக்கு எவ்வளவு லாபம் கிடைக்கும் என்று யோசித்து பாருங்கள்.
இந்த தொழில் செய்வதற்கு தேவைப்படும் பொருட்கள் வாங்குவதற்கு மொத்தமாக Rs.15.000/- ஆகும்.
கடையை வைப்பதற்கு மாதம் Rs.5,000/- வாடகை தேவைப்படும். அட்வான்ஸ் Rs.20,000/- தேவைப்படும். நீங்கள் தேர்தெடுக்கும் இடத்தை பொறுத்து ஒவ்வொரு விதமான செலவுகள் ஆகும்.
இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில் போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Siru Tholil Ideas in Tamil |