லாபத்தை அள்ளி தரும் தொழில்
அனைவருக்கும் வணக்கம் இன்றைய பதிவில் அனைவருமே செய்யக்கூடிய தொழிலை பற்றி தான் இந்த இப்பதிவில் தெரிந்துகொள்ள போகிறோம். இன்றைய காலகட்டத்தில் உள்ள இளைஞர்கர்களும் இந்த தொழிலை செய்யலாம். ஏனென்றால் வருக்காலத்தில் உள்ள அனைவருக்கும் விவசாயம் என்பது மிகவும் முக்கியமான ஒன்றாகும். இப்போது இருக்கும் இளைஞர்கள் அனைவரும் விவசாயம் என்றால் என்ன என்பதைகூட அறியாமல் இருக்கிறார்கள். அப்படி ஆர்வம் இருந்தாலும் அவர்களின் பெற்றோர்கள் நாங்கள் பாடுபட்டது போதும் நீயும் ஏன் அதனை படிக்கவும் கற்றுக்கொள்ளவும் ஆசைபடுகிறாய் என்று சொல்லி அவர்களை வேறு எதை பற்றியாவது படிக்க வைக்கிறார்கள். அதற்கும் இந்த பதிவிற்கும் என்ன இருக்கிறது என்று கேட்கலாம்? விவசாயம் நமக்கு என்ன லாபத்தை தருகிறது என்று அதனை முற்றிலும் தவிர்க்கலாம். எந்த தொழிலாக இருந்தாலும் நாம் செய்வதில் தான் உள்ளது. முழு நேரம் இதற்காக செலவழிக்க வேண்டாம். இந்த தொழிலை அம்மா அப்பா கல்லூரியில் படிக்கும் மாணவர்கள், பள்ளியில் படிக்கும் மாணவர்களும் இந்த தொழிலை செய்யலாம் அப்படி என்ன தொழில் என்று தெரிந்துகொள்ள முழுமையாக படியுங்கள்.
Flower Plant Business in Tamil:
என்ன இது பூச்செடி வளர்த்தால் லாபம் எப்படி கிடைக்கும் என்று நினைப்பீர்கள். கண்டிப்பா கிடைக்கும். உங்களுக்கு பூச்செடி வளர்ப்பது பிடிக்கும் என்றால் அதன் மூலம் நிச்சயம் சம்பாதிக்கலாம்.
பூச்செடி என்றால் பூக்கள் மட்டும் வளர்க்க வேண்டிய அவசியம் இல்லை நிறைய வகை தாவரங்கள் வளர்க்கலாம். என்றால் வீட்டில் மரங்கள் வளர்க்க முடியவில்லை என்றாலும் அவர்கள் வீட்டின் முன்புறம் இருக்கும் சின்ன சின்ன இடத்தில் கூட நிறைய வகையான பூச்செடிகள் வளர்க்கிறார்கள்.
பூச்செடி வளர்ப்பதோடு அதன் கூடவே துளசி, தூதுவளை, ஓமம் செடி மற்றும் பிரண்டை செடி போன்ற நிறைய வகையான தாவரங்களையும் வளர்த்து வருகிறார்கள்.
அது எப்படி இந்த செடிகள் வளர்ப்பதால் எப்படி பணம் சம்பாதிக்க முடியும் என்று அதற்கு பெரிய இடம் தேவைப்படும். நிறைய பணம் தேவைப்படும், அதிகளவு உரங்கள் தேவைப்படும் இதை அனைத்தையும் செய்வதற்கு பெரியளவில் முதலீடு தேவைப்படும் என்று யோசிப்பீர்கள்.
மாலை நேரத்தில் தினசரி ரூ.3000/- வருமானம் தரும் தொழில் |
இந்த தொழிலை தொடங்க பெரியளவில் இடம் தேவையில்லை. உங்கள் விட்டு மொட்டை மாடியில் கூட இந்த தொழிலை செய்ய தொடங்கலாம். இல்லையென்றால் வீட்டில் பின்புறத்தில் இடம் இருந்தால். அங்கேயும் இந்த தொழிலை தொடங்கலாம்.
இந்த தொழிலை மண்ணில் வளர்க்கலாம் இல்லையென்றால் Flower Pot அதாவது பூத்தொட்யிலும் வளர்க்கலாம்.
நீங்களே விதை போட்டு வளர்பதைவிட செடியாக வளர்ந்து இருக்கும் இடத்திலிருந்து வாங்கி வந்து வளர்ப்பது உங்கள் வேலையை சுலபமாக்கும்.
பேக்கிங் செய்வதன் மூலம் தினமும் ரூ.1200 வரை சம்பாதிக்கலாம்..! |
பூச்செடி தொழில் கிடைக்கும் லாபம்:
நீங்கள் வளர்க்கும் ஒவ்வொரு செடிக்கும் ஒவ்வொரு தனித்துவம் இருக்கும் அதே போல் ஒவ்வொரு செடியையும் ஒவ்வொரு விதமாக பார்த்து கொள்கிறீர்கள். அந்த வகையில் ஒரு செடி விலை 50 ரூபாய் இருக்கும். அதே போல் அனைத்துமே ரோஜா செடியாக வளர்க்க வேண்டாம் உங்களுக்கு பிடித்த செடிகளையும் வளர்த்து அதனையும் விற்கலாம். பிறகு உங்களிடம் எத்தனை வகையான செடிகள் வளர்த்தாலும் உங்களை தேடிவருபவர்கள் அவர்களுக்கு பிடித்த செடிகளை அதிகம் வாங்குவார்கள் அதனை அறிந்துகொண்டு அந்த செடிகளை அதிகம் வளர்க்கலாம்.
நீங்கள் இந்த தொழிலை செய்ய தொடங்கிய கொஞ்ச காலத்தில் அனைவருக்கும் நீங்கள் இந்து போன்ற தொழில்களை செய்து விற்பனை செய்கிறார்கள் என்று அனைவரும் உங்களை தேடி வருவார்கள்.
ஒரு நாளுக்கு நிச்சயம் 10 செடிகள் விற்றாலும் உங்களுக்கு நிச்சயம் 800 ரூபாய் சம்பாதிக்கலாம். இந்த தொழிலை பெரியதாக மாற்றுவதும் உங்களுடைய திறமையில் தான் உள்ளது. இந்த தொழிலை நீங்கள் Whole Sale தொழிலாகவும் செய்யலாம்.
பூ செடி தொழிலுக்கு தேவையான முதலீடு:
- முதலில் தேவையானது மொட்டை மடியோ அல்லது வீட்டில் பின்புறம் எங்கு வேண்டுமானாலும் தொடங்கலாம்.
- நீங்கள் பெரிய பூ செடி கடைகளுக்கு சென்று 50 செடிகளை வாங்கினால் அதன் விலை மிகவும் பெரியதாக இருக்கும். அதே நீங்கள் அவர்களுக்கு முழு விவரத்தை சொல்லி பிறகு 50 செடிகள் வேண்டும் என்று சொன்னால் அவர்கள் மற்றவர்களுக்கு தரும் விலையை விட குறைவாக இருக்கும். மற்றவர்களுக்கு ஒரு செடியின் விலை 50 ரூபாய் என்றால் உங்களுக்கு அதன் விலை 40 அல்லது 35 ரூபாயாக இருக்கும். அப்போ உங்களுக்கு அதிகபட்சமாக 1500 தேவைப்படும்.
- அந்த செடிகளை வளர்க்க நீங்கள் இயற்கை உரங்களை வாங்கிக்கொள்ளலாம். காசு கொடுத்து வாங்க வேண்டும் என்ற அவசியம் இல்லை வீட்டில் சமையலுக்கு தேவைபடும் வெங்காயம் பயன்படுத்திவிட்டு அதன் தோல்களை செடிகளில் போட்டுவிடலாம் அல்லது டீ தூள், முட்டை ஓடு, பூண்டு தோல் போன்றவற்றை பயன்படுத்திக்கொள்ளலாம் அதுவே செடிகள் வளர்வதற்கு நல்ல இயற்கை உரமாக இருக்கும்.
- வீட்டில் மேல் புறத்தில் செடிகள் வளர்க்க இதுவே போதுமான முதலீடு ஆகும்.
இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில் போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Siru Tholil Ideas in Tamil |