Furniture Business Plan in India
குடும்பத்தில் இருவரும் சம்பாதித்தால் தான் பொருளாதாரத்தை சமாளிக்க முடியும். உங்களுக்கு உதவும் வகையில் தினந்தோறும் சுயதொழில் பற்றிய யோசனைகளை பதிவு செய்து வருகிறோம். சுயமாக தொழில் செய்வது முக்கியமில்லை. நீங்கள் தேர்ந்தெடுக்கும் தொழில் வாழ்நாள் முழுவதும் லாபாரகராமன தொழிலாகவும் இருக்க வேண்டும், அழிந்து போகாத தொழிலாகவும் இருக்க வேண்டும். அந்த வகையில் இன்றைய பதிவில் பார்க்க கூடிய என்று மக்களிடம் அழியாத தொழிலாக இருக்கும். அது என்ன தொழில் என்று யோசித்து கொண்டே முழு பதிவையும் படித்து தெரிந்து கொள்ளவும்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl
Furniture Business Plan:
வீடு என்று இருந்தால் அதில் நாற்காலி டேபிள், சோபா, பீரோல் போன்றவை இருந்தால் தான் அழகாக இருக்கும். இந்த பொருட்களை எல்லா மக்களிடையே எப்பொழுதும் Demand இருக்கும். அதனால் இந்த தொழிலை நீங்கள் தாராளமாக தொடங்கலாம். இந்த தொழில் செய்வதற்கு இடம், மூலப்பொருட்கள், முதலீடு போன்றவற்றை தெரிந்து கொள்வோம் வாங்க,..
இடம்:
இந்த தொழிலுக்கு இடம் ரொம்ப முக்கியமானதாக இருக்கும். மக்கள் நடமாட்டம் உள்ள இடமாக பார்த்து வைக்க வேண்டும். நீங்கள் சிறிய அளவில் கடை வைக்க போகிறீர்கள் என்றால் 2000 முதல் 2500 சதுர அடி உள்ள கடை தேவைப்படும். கடை வாடகையாக 25,000 முதல் 30,000 வரை இருக்க கூடும்.
முதலீடு:
இந்த தொழிலுக்கு முதலீடாக 10 லட்சம் முதல் 12 லட்சம் வரை தேவைப்படும்.
எந்த மாதிரியான பொருட்கள் விற்பனை செய்யலாம்:
நாற்காலிகள், சோஃபாக்கள், கை நாற்காலிகள், மேசைகள், படுக்கைகள், மேசைகள், இழுப்பறைகள், அலமாரிகள், டைனிங் செட், ஷூ கேபினட், டிவி ஸ்டாண்டுகள், சுவர் சேமிப்பு, மெத்தைகள், படுக்கை மேசைகள், புத்தக அலமாரிகள், சுவர் அலமாரிகள், படிப்பு விளக்குகள், கண்ணாடிகள், குழந்தைகள் தளபாடங்கள் போன்றவை விற்பனை செய்யலாம்.
தேவையான ஆவணங்கள்:
- கடை பதவு சான்றிதழ்
- வணிக பதிவு
- ஜிஎஸ்டி பதிவு சான்றிதழ்
- வணிக காப்பீடு
போன்ற ஆவணங்கள் பெறுவதற்கு ஆதார் அட்டை, பான் கார்டு, வங்கிக் கணக்கு மற்றும் கடை வாடகை ஒப்பந்தம் போன்ற அடிப்படை ஆவணங்கள் உங்களிடம் இருந்தால், இந்தப் பதிவுகளை எளிதாக வாங்கலாம். இந்த ஆவணங்களைப் பெறுவதற்கு நீங்கள் ஏதேனும் CA அல்லது சட்ட நிறுவனங்களின் உதவியைப் பெறலாம்.
லாபம் மற்றும் வருமானம்:
இந்த தொழிலில் 25% முதல் 30% வரை லாபத்தை பார்க்கலாம். உங்களுக்கு நடக்கும் வியாபாரத்தை பொறுத்து வருமானம் மாறுபடும். இருந்தாலும் தோராயமாக செலவுகள் போக மாதந்தோறும் 40,000 ரூபாய் சம்பாதிக்கலாம்.
யாரும் தொடங்காத இந்த புதுமையான தொழிலை நீங்கள் தொடங்கினால் நல்ல லாபம் கிடைக்கும்..!
இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில் போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | siru tholil ideas in tamil |