Gift Shop Business Plan in Tamil
படித்துக்கொண்டு இருக்கும் மாணவர்களுக்கும், சொந்தமாக தொழிலில் தொடங்க வேண்டும் என்பவர்களுக்கும் இந்த பதிவு உதவியாக இருக்கும்..! அப்படி என்ன பதிவு என்று தானே கேட்கிறீர்கள்..! நாம் அனைவரும் யாராவது ஒருவரிடம் தொழிலாளியாக தான் இருப்போம். ஆனால் அது தவறு இல்லை. ஒரு சிலருக்கு நாமும் முதலாளியாக இருக்கலாம் என்று ஆசை இருக்கும் அல்லவா..! அப்படி இருக்குபட்சத்தில் நாம் அனைவருக்கும் ஒவ்வொன்றின் மீது ஆர்வம் அதிகம் இருக்கும்.
அதனை தொடங்கி லாபம் பெறலாம் என்று ஒரு எண்ணம் இருக்கும். ஆனால் ஒரு சிலருக்கு என்ன தொழில் தொடங்குவது அதற்கு ஏற்ற பணம் இல்லை என்றும் ஒரு குழப்பம் இருக்கும். அவர்கள் துவங்கும் தொழிலை பற்றி தான் இந்த பதிவு. இந்த தொழிலுக்கு அதிக முதலீடு தேவை இல்லை ஓரளவு முதலீடு இருந்தால் போதுமானது அப்படி என்ன தொழில் என்று பார்க்கலாம் வாங்க..!
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl
Gift Shop Business Plan in Tamil:
நாம் அனைவருமே யாராவது ஒருவரின் விழாவிற்கு செல்வோம். அது உறவினர்களுக்காக இருந்தால் அவர்களுக்கு பணமாக மொய் போடுவோம். அதே நண்பர்களாக இருந்தால் அவர்களுக்கு ஏதாவது பரிசு கொடுக்க தான் நினைப்போம். ஆனால் இப்போது அனைவருமே பரிசுகளை தான் கொடுக்கிறார்கள். காலப்போக்கில் இனி யாரும் மொய் எழுதுவதை விரும்ப மாட்டார்கள்.
அனைவருமே பரிசு வாங்க தான் செல்வார்கள். முன்பு தான் என்ன வாங்கி பரிசளிப்பது என்று குழப்பம் இருக்கும். இப்போது நிறைய விதமான பரிசுகள் உள்ளது. அதனை வாங்கி நாமும் விற்பனை செய்தால் அதன் மூலம் நல்ல லாபம் பார்க்க முடியும். அதேபோல் தினமும் நல்ல வருமானம் கிடைத்தது போல் இருக்கும். சரி அதனை தொடங்க எவ்வளவு முதலீடு தேவை என்பதை பார்க்கலாம் வாங்க..!
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
முதலீடு வெறும் ரூ.2000, வருமானம் தினமும் ரூ.5000, போட்டியே இல்லாத புதுமையான தொழில்
முதலீடு:
இந்த தொழிலுக்கு மொத்தமாக 1 லட்சம் ரூபாய் மட்டும் இருந்தால் போதுமானது. இதை தவிர கடை வாடகை, கண்ணாடி என மற்ற பொருட்களுக்கு 1 லட்சம் இருந்தால் போதுமானது. கடை சொந்தமாக இருந்தால் இன்னும் நன்மையாக இருக்கும்.
லாபம்:
குறைந்தது 500 ரூபாயிலிருந்து 10,000 வரை பொருட்கள் இருக்கும். ஆனால் மக்கள் அனைவரும் குறைந்த விலையில் தான் பொருட்களை வாங்குவதற்கு விரும்புவார்கள். ஆகவே அவர்களுக்கு ஏற்ற விலையில் பொருட்கள் விற்பனை செய்தால் நல்லது ஒரு நாளுக்கு குறைந்தது 5,000 ஆயிரம் வரை விற்பனை செய்யலாம்.
இதையும் கிளிக் செய்து படியுங்கள்👉👉 கையில் இருக்கும் காசை முதலீடு செய்தால் அதனுடன் வட்டியும் கிடைக்கும் நல்ல வருமானமும் கிடைக்கும்
எங்கு துவங்காலம்:
கடையை மக்கள் அதிகம் உள்ள இடத்தில் துவங்குவது நல்லது. ஆனால் உங்கள் கடையில் இருக்கும் பொருட்கள் அழகாகவும், விலை குறைவாகவும் இருந்தால் நீங்கள் எங்கு கடையை வைத்தாலும் உங்களை தேடி மக்கள் வருவார்கள். ஆகவே இந்த தொழிலை தொடங்கி நல்ல வருமானத்தை பார்க்கலாம்..!
இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில் போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | siru tholil ideas in tamil |