வருக்காலத்திற்கும் சேர்த்து இந்த தொழிலை செய்தால்..! இப்போது லாபம் இல்லையென்றாலும் இனி வரும் காலங்களில் ராஜா நீங்க தான்..!

How to Start Electric Vehicle Charge Station in tamil

Electric Scooter Charging Business

முதலீடு போட்டால் லாபம் கிடைக்குமா என்று யோசனையிலேயே தொழில் தொடங்க நினைப்பார்கள். நீங்கள் தொழில் தொடங்க நினைத்தால் இப்போது லாபம் கிடைக்குமா என்று  நினைப்பதை விட வருங்காலத்தில் உங்களுக்கு லாபம் கிடைக்குமா என்று யோசித்து பாருங்கள். அதன் பின் அது என்ன தொழிலாக இருக்கும் என்று முடிவு எடுங்கள்.

அந்த வகையில் தினமும் அருமையாக தொழில்களை பற்றி தெரிந்து கொண்டு வருகிறீர்கள். அதேபோல் இன்றும் அருமையான வருக்காலத்தில் லாபம் கொடுக்கும் தொழிலை பற்றி தெரிந்து கொள்வோம் வாங்க..!

Electric Scooter Charging Business in Tamil:

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே: https://bit.ly/3Bfc0Gl

தினமும் அதிகளவு தேவையாக உள்ளது பைக் கார் தான். அதிலும் இப்போது அனைவரிடத்திலும் பைக் இல்லாமல் இல்லை. மேலும் வருக்காலத்தில் அதிகமாக கார் பைக் தான் அதிகளவு பயன்படுத்துவார்கள்.

இந்தக்காலத்தில் அதிகமாக பெட்ரோல் டீசல் விற்கிறது. ஆகவே அதனை சரி செய்ய நிறைய நிறுவனம் எலெட்ரானிக் பைக் கார் ஸ்கூட்டர் என்று வெளியிடப்பட்டு வருகிறார்கள்.

மக்களின் கவனம் அதிகமாக இப்போது திரும்பவில்லை என்றாலும் வருக்காலத்தில் அதிகமாக மக்கள் அதை தான் வாங்குவதற்கு ஆர்வம் செலுத்துவார்கள். அதற்கு காரணம் பெட்ரோல் விலை தான்.

இன்னும் 10 வருடத்திற்கு மேல் பெட்ரோல் கிடைக்குமா என்பது கொஞ்சம் சந்தேகம் தான். ஆகவே மக்கள் அதிகமாக வருக்காலத்தில் எலெட்ரானிக் சார்ந்த வாகங்களை தான் வாங்குவார்கள். எப்போதும் அதிக தேவை உள்ளதை தொழிலாக செய்தால் தான் லாபம் கிடைக்கும். வாங்க நீங்களும் எலெட்ரானிக் சார்ஜ் தொழில் செய்யலாம். அது எப்படி என்று தெரிந்து கொள்ளலாம் வாங்க..!

Electric Charging Station Business:

இதற்கு அதிக முதலீடு தேவையில்லை, மேலும் வேறு எந்த ஒரு நிறுவனத்தை சார்ந்து இருக்கவும் தேவையில்லை. நீங்கள் வீட்டிற்கு வாங்கும் பொருளை போல் இந்த மிஷினை வாங்க வேண்டும்.

எங்கு தொடங்கலாம்:

 How to Start Electric Vehicle Charge Station in tamil

இந்த தொழிலை எங்கு வேண்டுமாலும் தொடங்கலாம். ஆனால் கார், பைக் வாகனங்கள் வந்து செல்லும் அளவிற்கு இடம் இருந்தால் போதும் எங்கு வேண்டுமாலும் தொடங்கலாம். அதேவிட இன்னும் சிறந்தது Highway ரோட்டில் திறந்தால் லாபம் கிடைக்கும். ஏனென்றால் எப்போதும் மக்கள் நடமாட்டம் உள்ள இடம் என்றால் அடிக்கடி சார்ஜ் செய்து கொள்வார்கள் ஆகவே தேசிய நெடுஞ்சாலையில் திறப்பது சிறந்தது.

இந்த தொழில் செய்யலாமா 👉👉  மாதம் லட்சம் கணக்கில் லாபம் தரக்கூடிய சிறந்த 3 தொழில்

முதலீடு:

 How to Start Electric Vehicle Charge Station in tamil

மிஷின் – 5 லட்சம்

இந்த ஸ்டேஷன் நீங்கள் உங்கள் வசதிக்கேற்ப ஆரம்பம் செய்து கொள்ளலாம். அதாவது, உங்களுக்கு ஒரு மிஷின் போதும் என்றால் ஒன்று வைத்துக் கொள்ளலாம். ஆனால் ஒன்றை விட இரண்டு இருந்தால் மிகவும் நல்லது. ஏனென்றால், ஒரு மிஷினில் 1 வாகனத்திற்கு மட்டுமே சார்ஜ் செய்ய முடியும். ஆகவே இரண்டு இருந்தால் போதும். தேவை அதிகமாக இருக்காது என்றால் ஒன்று மட்டும் போதும் குறைந்தளவு 10 லட்சம் வைத்து இந்த ஸ்டேஷன் ஆரம்பிக்கலாம்.

இதற்கு லைசன்ஸ் தேவையில்லை. அதன் பின் இதற்கு வரி உண்டா என்று  கேட்பீர்கள். இதற்கு Tax உண்டு. அதாவது, வருடத்திற்கு 20 லட்சத்திற்கு மேல் வருமானம் கிடைத்தால் அதற்கு வரி செலுத்த வேண்டும்.

லாபம்: 

ஒரு கிலோ வாட் சார்ஜ் செய்யும் போது 20 ரூபாய் செலுத்த வேண்டும். அப்படியென்றால், உங்கள் ஸ்டேஷன்க்கு எவ்வளவு லாபம் கிடைக்கும் என்பதை கணக்கிட்டு கொள்ளவும். அதன் பின் கரண்டு பில் செலுத்தியத்திற்கு பின்பு அதில் இருக்கும் வருமானம் உங்களுக்கு லாபம் தான். ஆகவே இன்றே தொடங்குங்கள்..!

இதையும் தெரிந்துகொள்ளுங்கள் 👉👉 பெட்ரோல் பங்க் வைப்பது எப்படி?

 

இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில் போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> siru tholil ideas in tamil