சுயமாக தொழில் தொடங்குவதற்கு என்ன செய்யலாம்..!
வணக்கம் பொதுநலம்.காம் பதிவின் அன்பான நேயர்களே… இன்றைய பதிவில் நாம் சுயமாக தொழில் தொடங்கி வாழ்க்கையில் எப்படி முன்னேறுவது என்பதை பற்றி பார்க்க போகிறோம். இன்றைய சூழ்நிலையில் படித்துவிட்டு வேலைவாய்ப்பு இல்லாமல் மிகவும் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கும் இளைஞர்களுக்கு இந்த பதிவு பயனுள்ளதாக இருக்கும். நீங்களும் கேஸ் ஏஜென்சி தொழில் தொடங்கி அதன் மூலம் நல்ல வருமானமும் பெற முடியும்.
இந்த கேஸ் ஏஜென்சி தொழிலை நீங்கள் உங்கள் ஊரிலே தொடங்கி அதன் மூலம் நல்ல லாபம் பார்க்கலாம். கேஸ் ஏஜென்சி டீலர்ஷிப் எப்படி தொடங்குவது என்று யோசிக்கிறீர்களா..? அப்படி யோசிக்கும் உங்களுக்கு இந்த பதிவு பயனுள்ளதாக இருக்கும். வாங்க நண்பர்களே இந்த பதிவின் மூலம் கேஸ் ஏஜென்சி டீலர்ஷிப் எப்படி தொடங்குவது பற்றிய முழு விவரங்களையும் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
இதையும் கிளிக் செய்து பாருங்கள் ⇒ குடும்ப பெண்கள் வீட்டிலிருந்து பணம் சம்பாதிக்க அருமையான தொழில்கள்
கேஸ் ஏஜென்சி முதலீடு எவ்வளவு..?
இந்த கேஸ் ஏஜென்சி தொடங்குவதற்கு நீங்கள் 10,000 ரூபாய் முதலீடு செய்தால் போதும். இந்த தொழில் தொடங்குவதற்கு 10,000 ரூபாய் போதுமா என்று யோசிப்பீர்கள். 10,000 /-ரூபாய் போதும் காரணம், இந்த கேஸ் ஏஜென்சி பொதுவாக பொதுத்துறை நிறுவனங்களில் இருந்து நேரடியாக மக்களுக்கு சென்றடைவது கிடையாது. அதற்கு பதிலாக பொதுத்துறை நிறுவனம் இந்த கேஸ் சிலிண்டர்களை டீலருக்கு வழங்குகிறது.
கேஸ் ஏஜென்சி டீலர்ஷிப் தொடங்குபவது எப்படி..?
- முதலில் நாம் இந்த கேஸ் சிலிண்டர்களை கேஸ் நிறுவனத்திடம் இருந்து டீலர்ஷிப் பெற வேண்டும்.
- டீலர்ஷிப் பெற்று நீங்களே பல இடங்களுக்கு சப்ளை செய்யலாம்.
- இந்த கேஸ் சிலிண்டர் டீலர்ஷிப் பெறுவதற்கு உங்கள் ஊர் பகுதிகளில் இதற்கான டீலர்ஸ் இருப்பார்கள். அவர்களிடம் கேஸ் டீலர்ஷிப் பெறுவதற்கான படிவத்தை பெற்று அதை பூர்த்தி செய்து அதற்கான டெபாசிட் தொகையை கட்டவேண்டும். இதற்கான டெபாசிட் தொகை குறைந்தது 5,000 முதல் 10,000 ரூபாய் வரை இருக்கும்.
- அதன் பின் நீங்களும் டீலர்ஷிப் பெற்று இந்த தொழிலை தொடங்கி அதன் மூலம் நல்ல லாபம் பார்க்கலாம்.
- நீங்கள் கடைகள், ஹோட்டல்கள் போன்று இன்னும் பல இடங்களுக்கு கேஸ் சப்ளை செய்வதாக ஆர்டர் எடுத்துக்கொள்ள வேண்டும்.
- இதுபோன்று கேஸ் சிலிண்டர் சப்ளை செய்வதன் மூலம் நல்ல வருமானம் பெறமுடியும்.
- ஒரு சிலிண்டர் 1,400 முதல் 1,800 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது.
- அவ்வாறு விற்பனை செய்யும்போது குறைந்தபட்சம் ஒரு நாளைக்கு பத்து சிலிண்டர் விற்பனை செய்தாலே போதும். அதன் மூலம் நல்ல வருமானம் பெற முடியும்.
குறைந்த அளவு முதலீடு செய்தால் போதும் அதிக வருமானம் பெறலாம்..! |
கேஸ் ஏஜென்சி வருமானம் எவ்வளவு..?
நீங்கள் விற்பனை செய்யும் ஒரு சிலிண்டருக்கு 200 ரூபாய் வரை லாபம் கிடைக்கும். அதுவே நீங்கள் ஒரு நாளைக்கு 10 சிலிண்டர்கள் வரை விற்பனை செய்தால் ஒரு நாளைக்கு உங்களுக்கு 2000 ரூபாய் வரை வருமானம் கிடைக்கும். ஒரு நாளைக்கு 2,000 ரூபாய் என்றால் மாதத்திற்கு 40,000 ரூபாய் வரை சம்பாதிக்கலாம்.
இந்த கேஸ் ஏஜென்சி தொழில் தொடங்கி நீங்களும் உங்கள் வாழ்க்கையில் முன்னேறலாம். நல்ல வருமானமும் கிடைக்கும்.
இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில் போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | siru tholil ideas in tamil 2022 |