சிறு தொழில் – காடை வளர்ப்பு மாத வருமானம் ரூ.30,000/-

காடை வளர்ப்பு

சிறு தொழில் – காடை வளர்ப்பு (Kadai valarpu business) மாத வருமானம் ரூ.30,000/-

சிறு தொழில் – கால்நடை வளர்ப்பில் இந்தியாவில் பரவலாக வளர்க்கப்படுவது காடை வளர்ப்பு தான், அதிகம் பறக்க இயலாத தரைப்பறவை எது என்றால் அது காடை தான். இந்த வேளாண் சார்ந்த தொழிலை முட்டைக்காகவும், இறைச்சிக்காகவும் நாடு முழுவதும் காடை வளர்ப்பு தொழிலை செய்து வருகின்றன. இந்த காடையின் இறைச்சியும், முட்டையும் மிக சுவையானது மட்டுமல்ல சத்து நிறைந்த உணவாகவும் விளங்குகிறது.

இங்கு காடை வளர்ப்பு பற்றி மிக தெளிவாக தெரிந்து கொள்வோம் வாங்க..!

Kadai valarpu business – காடையின் ரகங்கள்:-

தற்போது 18 காடை இனங்கள், வளர்ப்புக்கு ஏற்றதாகக் கூறப்படுகிறது. இவற்றில், சில இறைச்சி உற்பத்திக்கும், சில முட்டை உற்பத்திக்கும் பயன்படுத்தப்படுகிறது. காடைகள், அதன் உற்பத்தியை அடிப்படையாகக் கொண்டு முட்டைக்கான இனம் என்றும், இறைச்சிக்கான இனம் என்றும் இரு பெரும் பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன.

அவற்றில் முட்டைக்கான இனங்கள் மற்றும் இறைச்சிக்கான இனங்கள் தனித்தனியாக கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

சிறு தொழில் – நமக்கேற்ற நாட்டுக்கோழி வளர்ப்பு..! அதிக லாபம் தரும் சிறு தொழில்

 

முட்டைக்கான இனங்கள்: (Layer)

  • டக்ஸிடோ – Tuxedo
  • பரோ -Pharaoh
  • பிரிட்டிஷ் ரேஞ்ச் – British Range
  • இங்கிலீஷ் ஒயிட் – English White
  • மஞ்சூரியன் கோல்டன் -Manchurian Golden

இறைச்சிக்கான இனங்கள்:- (Broiler)

  • பாப் ஒயிட் – Bob White (American)
  • ஒயிட் ப்ரெஸ்டெட் – White Breasted (Indian)
  • இளம் குஞ்சு பராமரிப்பு (Brooding)

காடை வளர்ப்பு பற்றிய சில ஆலோசனை:

குறிப்பாக  காடை வளர்ப்பு பற்றி நன்கு தெரிந்தவர்களிடம் இருந்து ஆலோசனைகளை பெற்று காடை வளர்ப்பு தொழிலை துவங்குவது சிறந்தது.

குறிப்பாக 500 காடை வளர்ப்பு முறைக்கு தரைப்பகுதில் தங்களை சிமிண்டில் தளங்கள் போட்டு, பின்பு செட் அமைக்க வேண்டும். அலோபிளாக் சுவர் அல்லது கம்பி வலையில் சுவர் எழுப்ப வேண்டும். இவ்வாறு அமைத்தால் தான் காடை வெளியே செல்லாமல் இருக்கும்.

காடைகளை வளர்க்க – முதலீடு:

செட் அமைப்பதற்கு குறைந்தபட்சம் 20,000/- தேவைப்படும். அதன்பிறகு அவற்றில் வளர்ப்பதற்கு காடை வாங்கவேண்டும், காடையை பொறுத்தவரை அனைத்து இடங்களிலும் நிலையாக விற்கப்படும் விலை 1000 காடைகள் வாங்கினால் ஒரு காடையின் விலை 7 ரூபாய்க்கு குறைவாக விற்கப்படுகிறது. அதாவது ஒரு காடையின் விலை 6.50 ரூபாய் அல்லது 6 ரூபாய்க்கு விர்க்கப்படுகிறது.

உதாரணத்திற்கு ஒரு காடையின் விலை 6 என்றால் 1000 காடையின் விலை ரூபாய் 6,000/-, காடை வளர்ப்புக்கான தீவன செலவு ரூபாய் 7,500/- 

ஒரு கடைகள் இதர செலவு ரூ.4,000/-

எனவே காடை வளர்ப்புக்கு குறைந்தபட்சம் 35,000/- தேவைப்படும்.

நல்ல ட்ரெண்டிங்கில் பனை மர இலை தட்டு தயாரிப்பு ..!

காடை இளம் குஞ்சிகள் பராமரிப்பு:-

குஞ்சு பொரித்து வந்தது முதல் மூன்று வாரம் வரை, இளம் குஞ்சு பராமரிப்புக் காலமாகும். கடும் குளிர் காலத்தில் இளம் குஞ்சு பராமரிப்புக் காலமானது, நான்கு வாரம் வரைகூட நீடிக்கலாம். இளம் குஞ்சு பராமரிப்புக் காலத்தில், சராசரி குஞ்சு இறப்பு விகிதம் 6 முதல் 10 சதவீதம் வரைகூட இருக்கும். இறைச்சிக் கோழியின் இளம் குஞ்சுகளை பராமரிப்பதைவிட, காடையின் இளம் குஞ்சுகளைப் பராமரிப்பது கடினம்.

இளம் காடைக் குஞ்சுகள் பராமரிப்பில், குஞ்சுகளுக்கு வெப்பம் வழங்கும் முறையும், ஆள்கூளமும் முக்கியப் பங்கு வகிக்கின்றன. ஆள்கூளமானது, நன்கு காய்ந்த மணல் கீழாகவும், ஈரத்தை உறிஞ்சக்கூடிய காய்ந்த தென்னை நார்க் கழிவு அல்லது நிலக்கடமை தோல் மேலாகவும் பரப்பியதாக இருக்க வேண்டும். சுமார் 5 முதல் 10 செமீ உயரத்துக்கு ஆள்கூளம் இருக்க வேண்டும். காடைகளை கம்பிவலைக் கூண்டுகளில் வளர்ப்பதாக இருந்தால், முதல் வாரத்தில் கூண்டில் அடிப்பகுதியில் கெட்டியான அட்டைகளை விரிக்க வேண்டும்.

இன்குபேட்டரில் இருந்து வெளிவரும் காடைக் குஞ்சுகளுக்கு, முதல் வாரத்துக்கு 35 டிகிரி வெப்பம் இருக்குமாறும், தொடர்ந்து அடுத்த வாரத்தில் 3.5 டிகிரி குறைத்தும் வளர்க்கலாம். நான்காவது வரத்தில் குஞ்சுகளின் இறக்கைப் பகுதி நன்கு வளர்ந்துவிடுவதால், அதன்பின் காடைகளுக்கு அறை வெப்பநிலையே போதுமானது.

முதல் நான்கு வார காலத்துக்கு தீவனத் தொட்டி 2 – 3 செமீ உயரத்திலும், தண்ணீர்த் தொட்டி 1 – 1.5 செமீ உயரத்திலும் இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும். ஒரு குஞ்சுக்கு 7.5 சதுர செமீ பரபரப்பளவு இடம் இருக்குமாறு இட வசதி செய்து தர வேண்டும்.

மூன்று வாரம் வரை இட வசதியை சிறிது சிறிதாக அதிகரித்துக்கொண்டே வர வேண்டும். இப்படி இட வசதியை அதிகரிப்பது என்பது குளிர், வெப்பம், காற்றின் வேகம், ஈரப்பதம், ஆள்கூளத் தன்மை போன்றவற்றை அனுசரித்து மாறுபடும்.

சிறு தொழில் தென்னம் பிள்ளை பிளாஸ்டிக் பைகளில் வளர்ப்பு..!

காடை முட்டை உற்பத்தி:-

அதிகப்படியான முட்டை உற்பத்திக்கு வெளிச்சம் மிகவும் அவசியம். முட்டையிடும் காடையானது 14 முதல் 18 மணி நேரம் வெளிச்சம் இருப்பதை விரும்பும். அதற்கு ஏற்ப, முன் இரவு நேரத்தில் மின்சார வெளிச்சத்தை ஏற்படுத்தி, முட்டை உற்பத்தியை அதிகப்படுத்த வேண்டும்.

பெண் காடையானது, ஏழாவது வாரத்தில் முட்டையிடத் தொடங்கும். எட்டாவது வாரத்தில் 50 சதவீத முட்டை உற்பத்தி துவங்கிவிடும். பெண் காடையானது, 16 – 24 மணி நேரத்துக்கு ஒரு முட்டை வீதம் இடும். 8 – 12 மாதங்களில் அதிகபட்சமாக முட்டையிடும். மலை வேளைகளில்தான் முட்டையிடும் காடைகள், 22 மாத வயது வரை முட்டையிடும்.

காடை சந்தை வாய்ப்பு:

இவ்வாறு 28 நாட்கள் வளரக்கப்பட்ட ஒரு காடையின் சந்தை விலை ரூபாய்.30/- இதை நேரடியாக நுகர்வோரிடம் விற்பனை செய்தால் ரூபாய் 35 என்று கூட விற்பனை செய்யலாம். இதன் மூலம் மாதம் 30,000/- ரூபாய் வரை வருமானம் பெறலாம்.

காடை வளர்ப்பு பொறுத்தவரை நஷ்டம் இல்லாத தொழில் தான். இந்த தொழில் மீது அதிக ஆறுவம் உள்ளவர்கள். இதற்கான ஆலோசனைகளை பெற்று தயக்கம் இல்லாமல் இப்போதே துவங்கலாம்.

 

இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில்  போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> புதிய தொழில் பட்டியல் 2019