டெலிவரி பிசினஸ் | Delivery Business Ideas in Tamil
இன்றைய சூழலில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை தொழில் செய்வதற்கு ஆர்வமாகி விட்டார்கள். ஒரு சிலர் படித்து கொண்டே பார்ட் டைமாகவும் வேலை பார்த்து வருகிறார்கள். அந்த அளவிற்கு தொழிலின் முன்னேற்றம் அதிகரித்து விட்டது. இப்போதுள்ள பல இளைஞர்களுக்கு அதிக முதலீடு இல்லாமல் என்ன மாதிரியான தொழிலை தொடங்கலாம் என்ற சிந்தனை அதிகரித்துவிட்டது. முதலீடு இல்லாமல் பல வகையான தொழில்கள் இருக்கிறது, வாங்க நாம் இன்றைய வியாபார பகுதியில் என்ன மாதிரியான டெலிவரி பிசினஸ் இருக்கிறது என்று தெரிந்துக்கொள்ளலாம்..
சைடு பிசினஸில் சம்பாதிக்க சில எளிய வழிகள் |
1. Surprise delivery business ideas:
சர்ப்ரைஸ் டெலிவரி என்பது ஒரு Product-ஐ டெலிவரி செய்ய வேண்டும் என்றால் பொருள் சேர வேண்டியவர்களுக்கு தகுந்த நேரத்தில் அந்த இடத்தில் கிடைக்க வேண்டுமென்று முடிவு செய்திருப்பார்கள். உதாரணத்திற்கு பிறந்தநாள் பரிசு என்றால் 12 மணிக்கு கொடுக்க வேண்டும் என்று முடிவு செய்திருப்பார்கள். என்னுடைய சார்பாக இந்த பரிசினை அந்த நேரத்தில் செலுத்த வேண்டும் என்று கூறுவார்கள். இதுதான் இந்த சர்ப்ரைஸ் டெலிவரி பிசினஸ். பரிசு பொருட்களை கொடுக்க நினைப்பவர்களால் தகுந்த நேரத்தில் அவர்களால் கொடுக்க முடியாத சூழலில் நீங்கள் டெலிவரி செய்வதுதான் இந்த பிசினஸ். இதன் மூலம் நீங்கள் கேட்கும் லாபம் கிடைக்கும்.
2. Pick and Drop Delivery:
இந்த தொழிலை அனைத்து இடங்களிலும் செய்ய முடியாது. தூரம் அதிகம் உள்ள இடங்களில் செய்ய ஏற்ற தொழில். இந்த தொழிலானது ஒரு இடத்தில் உள்ள பொருளை எடுத்து வந்து உரிமையாளரிடம் சேர்ப்பது தான் இந்த பிசினஸ். பொருளை வாங்கிவிட்டு தகுந்த உரிமையாளரிடம் கொண்டுபோய் சேர்ப்பதற்கு ஆட்கள் இருக்கமாட்டார்கள். அந்த நேரத்தில் இது மாதிரியான ஆட்கள் அதிகமாக தேவைப்படுவார்கள். சரியான நேரத்தில் பொருளை சேர்த்த பிறகு இதன்மூலம் உங்களுக்கு ஒரு payment கிடைக்கும்.
3. Shop and Drop Delivery Business:
அடுத்து Shop and Drop Delivery பிசினஸ். உங்களிடம் உரிமையாளர் எந்த மாதிரியான பொருளை வாங்கி வர சொல்கிறார்களோ அந்த பொருள்களை வாங்கி கொடுப்பது. Pick and Drop பிசினஸில் பெரும்பாலும் ஆபிஸ் சம்மந்தமான பொருள்கள் தான் அடங்கும். இந்த தொழிலில் பார்த்தோம் என்றால் வீட்டு சார்ந்த பொருள்கள் தான் அடங்கியிருக்கும். வீட்டிற்கு தேவைப்படும் மளிகை பொருட்கள், பூக்கள், இறைச்சி போன்ற அனைத்து சாமான்களையும் நீங்களே வாங்கி கொடுத்து இதன் மூலம் லாபம் பெறலாம்.
முதலீடு இல்லாமல் பணம் சம்பாதிக்க ஐந்து அருமையான தொழில்கள் |
4. 24 Hours Delivery Service:
இந்த தொழிலுக்கு நேரம் காலம் என்று எதுவுமில்லை. 24 மணிநேரமும் சேவை செய்யும் தொழிலாகும். இதில் முக்கியமாக நீங்கள் உணவு, மருந்து மாத்திரைகள் இரண்டையும் 24 மணிநேரமும் சேவை செய்யக்கூடியவர்களாக இருக்க வேண்டும். உணவானது உங்கள் தயாரிப்பில் இருப்பது இன்னும் சிறந்தது. மருந்துகளை நீங்கள் மருந்து கடை இருக்கும் அருகில் இருந்து தொழிலை செய்தால் உங்களுக்கு மிகவும் பயனாக இருக்கும்.
5. Liquor Delivery Business:
ஐந்தாவதாக Liquor டெலிவரி பிசினஸ். இந்த பிசினஸை பெரும்பாலும் யாரும் செய்வதில்லை. அமேசானில் நாம் Alcohol ஆர்டர் செய்தாலும் Wine மட்டுமே நமக்கு டெலிவரி செய்வார்கள். இந்த Liquor டெலிவரி யாரும் செய்யாததால் நீங்கள் இதனை தொடங்கினால் நல்ல லாபம் பெறலாம்.
இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில் போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | siru tholil ideas in tamil 2022 |