சிறு தொழில் – தினமும் வருமானம் தரும் பொம்மை தயாரிப்பு தொழில்..!

Advertisement
  1. சிறு தொழில் – தினமும் வருமானம் தரும் பொம்மை தயாரிப்பு தொழில்..! Low Budget Business Ideas Tamil..!

குடிசை தொழில் / Low Budget Business Ideas Tamil..! Bommai Seivathu Eppadi..?எந்த ஒரு சந்தோஷமான தருணத்திலும், ஒருவருக்கு வழங்கும் பரிசுப்பொருட்கள் அந்த சந்தோசத்தை மேலும் இரட்டிப்பாக மாற்றும். ஒருவருக்கு அன்புடன் வழங்கும் எந்த ஒரு பரிசுபொருளும் விலை உயர்ந்ததாக இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை.

அவற்றை பெறுபவர்களின் மனம் கவர்ந்தாலே போதும். அந்த வகையில் எந்த ஒரு மகிழ்ச்சியான தருணத்திலும் அனைவரும் பொதுவாக ஒருவருக்கு அன்புடன் வழங்கும் பரிசு பொருள்தான் பொம்மை (teddy bear). எப்பொழுதுமே இந்த பொம்மைகள் (teddy bear) மக்களிடம் அதிக வரவேற்பு இருக்கும்.

எனவே சுயமாக தொழில் துவங்க நினைப்பவர்கள் வீட்டில் இருந்தபடியே இந்த பொம்மை தயாரிப்பு (bommai seivathu eppadi) தொழில் செய்து தினமும் வருமானம் பெறலாம். சரி இந்த பொம்மை தயாரிப்பு தொழில் மூலம் எப்படி வருமானம் பெறலாம், பொம்மை செய்வது எப்படி போன்ற விவரங்களை இந்த பகுதியில் படித்தறிவோம் வாங்க…

குடிசை தொழில் – பினாயில் தயாரிப்பு விலை ரூ.1,000/- மாத வருமானம் 20,000/- லாபம்..!

Low Budget Business Ideas Tamil..!

குடிசை தொழில் – பொம்மை தயாரிப்பு தொழில்:-

bommai seivathu eppadi: பொம்மை தயாரிப்பு தொழில் பொறுத்தவரை, கை தையல் மூலமாகத்தான் தயார் செய்யவேண்டியதாக இருக்கும். பெரிய பொம்மைகளை தயார் செய்வதற்கு மட்டும் தையல் மெஷின் மூலம் தைக்க வேண்டியதாக இருக்கும்.

இந்த பொம்மை தயாரிப்பு குடிசை தொழில் பொறுத்தவரை ஒரே மாதிரியான பொம்மைகளை தயாரிப்பதை விட விதவிதமான வடிவங்களில் தயார் செய்து விற்பனை செய்தால் மக்கள் அதிகம் விரும்பி வாங்குவார்கள்.

குடிசை தொழில் (low budget business ideas in tamil) – முதலீடு:

வீட்டின் ஒரு சிறிய அறை இருந்தால் போதுமானது. சார்ட் பேப்பர் (chart paper), வெல்வெட் துணி, துணிகளை வெட்ட ஒரு டேபிள் (ரூ.4,000/-), மூலப்பொருட்கள் மற்றும் தயாரித்த பொருட்களை வைக்க அலமாரி (Rs.5,000/-), பெரிய கத்தரி 1, சிறிய கத்தரி 2 (ரூ.400), பிளாஸ்டிக் டிரே 2 (ரூ.100) , செலோ டேப் ஸ்டாண்ட் (ரூ.150). மொத்தம் ரூ.9,650/- கிட்டத்தட்ட இந்த குடிசை தொழிலை துவங்குவதற்கு குறைந்தபட்சம் ரூ.10,000/- தேவைப்படும்.

குடிசை தொழில் – உற்பத்தி செலவு:-

ஃபர் கிளாத் (Fur cloth), அதன் திடத்திற்கேற்ப மீட்டர் ரூ.400 முதல் ரூ.450 வரை இப்போது அனைத்து ஆன்லைன் ஷாப்பிங் ஸ்டோரிலும் கிடைக்கின்றது அங்கு ஆர்டர் செய்து இவற்றை வாங்கிக்கொள்ளலாம்.

செயற்கை பஞ்சு ( Fiber cotton / பைபர் காட்டன்) கிலோ ரூ.100, (ஒரு மீட்டர் ஃபர் கிளாத், ஒரு கிலோ செயற்கை பஞ்சு மூலம் 100 பொம்மைகள் தயார் செய்யலாம்).

சிறிய பொம்மை செய்ய ரூ.20ம், பெரியவை செய்ய பொம்மை செய்ய ரூ.40 வரை செலவாகும். ஒரு நாளைக்கு (8 மணி நேரம்) சிறிய பொம்மைகள் 40, பெரியவை 20 தயாரிக்கலாம்.

ஒருநாள் உற்பத்தி செலவு ரூ.800/- மாதம் 25 நாளில் 1000 சிறிய பொம்மை அல்லது 500 பெரிய பொம்மை வித விதமாக மற்றும் புதுமையாகவும், கலைநயத்துடனும் தயார் செய்ய உற்பத்தி செலவு ரூ.20,000/- தேவைப்படும்.

சிறு தொழில் – ஊதுவத்தி தயாரிப்பது எப்படி ..? குறைந்த முதலீட்டில் ஒரு கைதொழில்

குடிசை தொழில் – பொம்மை தயாரிக்கும் முறை (bommai seivathu eppadi):-

how to make teddy bear at home in tamil

பொம்மைகளை மார்பு பகுதி வரை தயாரித்தால் போதுமானது. நாய், பூனை, கரடி, குரங்கு குட்டிகள், குழந்தை வடிவங்களில் தேவையான அளவுகளில் பொம்மைகளை தயாரிக்கலாம்.பொம்மையை உருவாக்க, தேவையான தையல் அளவுகளை சார்ட் பேப்பரில் உருவாக்கி கொள்ள வேண்டும்.

அது கை, உடல், முகம் ஆகிய பாகங்களை கொண்டிருக்கும். அவற்றை கொண்டு தைக்க வேண்டிய ஃபர் துணிகளின் பின்புறம் வைத்து மார்க்கர் பேனாவால் அவுட்லைன் வரைந்து வெட்டி கொள்ள வேண்டும்.

வெட்டியவற்றின் உட்புறமாக கை தையல் போட வேண்டும். அதை கெட்டி தையல் என்பார்கள். தைக்காமல் விட்ட பகுதி வழியாக செயற்கை பஞ்சை சமமாக பரவும்படி திணித்து உள்புறத்தை நிரப்ப வேண்டும். பொம்மைக்கு கண், மூக்கு பட்டன்களை பொருத்த வேண்டும்.

சில பொம்மைகளுக்கு கூடுதலாக காது, வாய் பட்டன்களையும் பொருத்தலாம். பொம்மையின் கீழ் பகுதி வட்டமாக திறந்திருக்கும், அதை கூடையின் மேல் திறப்பை மூடும் அளவிற்கு வட்டமாக வெட்டிய சார்ட் பேப்பர் துண்டுகளில் வைத்து, விளிம்புகளில் பசை தடவி ஒட்டி மூட வேண்டும். இப்போது பொம்மை தயார்.

இவ்வாறு பொம்மைகளை தங்களுடைய கலைத்திறனுக்கு ஏற்றவாறு வடிவமைத்து, விற்பனைக்கு அனுப்பலாம்.

குடிசை தொழில் – வருமானம்:-

சிறிய பொம்மைகளை ரூ.100-க்கும், பெரிய பொம்மைகளை ரூ.150-க்கும் விற்பனை செய்யலாம். கலைநயத்துடன் தயார் செய்த சிறிய மற்றும் பெரிய பொம்மைகளுக்கு தனி விலையை நிர்ணகித்து விற்பனை செய்யலாம்.

இதன் மூலம் மாதம் 40,000/- ரூபாய் வரை சம்பாதிக்கலம்.மாத வருமானம் ரூ.40,000-யில் உற்பத்தி செலவு போக 10,000/- போக லாபமாக 30,000/- கிடைக்கும்.

தினமும் ரூ.1000/- வருமானம் கிடைக்கக்கூடிய சிறந்த சுயதொழில்..!

குடிசை தொழில் – சந்தை வாய்ப்பு:-

தற்போது சிறிய ஊரில் கூட நிறைய பேன்சி ஸ்டோர், கிப்ட் கடைகள் வந்து விட்டது. எனவே உங்கள் ஊரில் கூட தயார் செய்த பொம்மைகளை அந்த கடைகளுக்கு சென்று விற்பனை செய்யலாம். இல்லையெனில் தாங்களே நேரடியாக மக்களிடம் விற்பனை செய்யலாம்.

இது ஒரு விலை குறைந்த பரிசுப்பொருள் என்பதால் நிறைய பேர் இவற்றை விரும்பி வாங்குவார்கள். இந்த குடிசை தொழில் பொறுத்தவரை சந்தையில் அதிகமாகவே வரவேற்கப்படுகின்றது.

பொம்மைகளை பல்வேறு ரகங்களில் தயாரித்து விற்கலாம். இதன் மூலம் புதிய வாடிக்கையாளர்கள் கிடைப்பார்கள். இதனால் அதிக லாபமும் கிடைக்கும்.

 

இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில்  போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Suya tholil
Advertisement