Low Cost Business Ideas with High Profit in Tamil
திருமணம் ஆகி குடும்ப வாழக்கைக்குள் செல்லும் பல பெண்களால் வேலைக்கு செல்ல முடிவதில்லை. காரணம் கணவர், குழந்தைகள் என அவர்களை கவனிப்பது, வீட்டு வேலைகள் போன்ற பல குடும்ப பொறுப்புகளை சந்திக்கின்றன. இதனால் அவர்களால் வெளியில் வேலைக்கு செல்லமுடிவதில்லை. இருப்பினும் பல பெண்கள் வீட்டில் இருந்தபடியே ஏதாவது தொழிலை செய்யலாமா என்று யோசிக்கின்றனர்? இப்பதிவு உங்களுக்கு தான்! இந்த காலகட்டத்தில் கணவர் ஒருவரின் சம்பளம் மட்டும் போதாது விலைவாசியானது நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. அதற்கேற்ப ஆண், பெண் இருவருமே சம்பாதித்தால் மட்டுமே பண தட்டுப்பாடின்றி குடும்பத்தினை நடத்த முடியும்.
பெண்கள் மற்றும் ஆண்கள் இருவருக்குமே பயன்படும் வகையில் வீட்டில் இருந்தபடியே இத்தொழிலை செய்யலாம். குறைந்த முதலீட்டில் தற்போது டிரெண்டிங் உள்ள மெஹந்தி தொழிலை பற்றித்தான் இப்பதிவில் தெரிந்துக்கொள்ள போகிறோம்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே: https://bit.ly/3Bfc0Gl
மெஹந்தி பிசினஸின் முக்கியத்துவம்:
பண்டிகை, விஷேக நாட்கள் மற்றும் திருமணம் போன்ற சுபதினத்தில் பெண்கள் மற்றும் ஆண்கள் இருவருமே மருதாணி இட்டு கொள்வது ஒரு மரபாகும். இப்போதெல்லாம் திருமணத்திற்கு முந்தைய ஒருநாள் “மெஹந்தி நாள்” என்றே கொண்டாடுகின்றது. மணப்பெண் மட்டுமா மருதாணி போடுகின்றனர் அனைவருமே போட்டுக்கொள்ளும் வழக்கம் வந்துவிட்டது. அக்காலத்தில் மருதாணி போட வேண்டும் என்றால் மருதாணி இலைகளை பறித்து அம்மியில் அரைத்து போட்டுக்கொள்வோம். ஆனால் தற்போது யாரும் அவ்வாறு செய்வதில்லை. இந்த நவீன காலத்தில் மருதாணியானது கோனில் அடைக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. அதனை தான் பலரும் விரும்பி வாங்குகின்றனர். காரணம் நாம் விரும்பும் டிசைன்களை கை, கால்களில் ஈஸியா வரைந்துக்கொள்ளலாம்.
மெஹந்தி பிசினஸ் தொடங்குவது எப்படி?
மெஹந்தி கலையில் அதிக ஆர்வமுள்ள மெஹந்தி போட தெரிந்த அனைவருமே இத்தொழிலை ஈசியாக உங்கள் வீட்டில் இருந்தபடியே தொடங்கலாம்.
இத்தொழிலை தொடங்க அதிக முதலீடு தேவையில்லை. முதலீடானது ரூபாய் 500-க்கு மேல் போகாது. இத்தொழிலுக்கு இருபொருட்களே போதுமானது மெஹந்தி மற்றும் அதற்கு கோன் வாங்க வேண்டும் அவ்வளவுதான். இதனை நீங்கள் வீட்டில் வாங்கி வைத்துவிட்டால் விஷேக நாட்கள், திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகளுக்கு நீங்களே மெஹந்தி ஆர்டிஸ்டாக செல்லலாம்.
👉எதிர்காலத்தில் இந்த தொழில் தான் அதிக டிமெண்ட்டுடன் வளம் வரக்கூடிய தொழிலாக இருக்க போகிறது..!
நீங்கள் ஒரு மணப்பெண்ணுக்கு மெஹந்தி போடுகிறீர்கள் என்றால் இரு கால்களுக்கு இரு கைகளுக்கு போட்டால் ரூபாய் 2500 வாங்கிக்கொள்ளலாம்.
ஒரு கைக்கு மட்டும் போட்டால் ரூபாய் 600 வாங்கிக்கொள்ளலாம்.
உள்ளங்கை மட்டும் போட்டால் ரூபாய் 150 வாங்கிக்கொள்ளலாம்.
நீங்கள் தெரிந்தவர்கள் மூலமாகவோ அல்லது தொழிலை விளம்பரம் செய்தோ மாதம் 20 ஆர்டர் பிடித்தாலே போதும். மாதம் ரூபாய் 50,000(20X 2500 = 50,000)வரை சம்பாதிக்கலாம்.
நீங்கள் ஆர்டர் பிடிக்க பிடிக்கதான் உங்கள் தொழிலானது நன்கு வளர்ச்சி அடைந்து இலாபத்தினை தரும். அதற்க்கு நீங்கள் பல வழிகளில் உங்கள் தொழிலை promotion செய்ய வேண்டும்.
எவ்வாறு தொழிலை முன்னேற்றம் செய்வது?
நீங்கள் செய்யபோகின்ற இத்தொழிலை முதலில் உங்களுக்கு தெரிந்த அனைவருக்கும் தெரியப்படுத்த வேண்டும்.
பொது இடங்களில் நோட்டீஸ் கொடுத்தால், விளம்பரம் செய்தல், Face Book, Instagram, Twitter போன்ற சமூக ஊடகங்களில் உங்கள் மெஹந்தி டிசைன்கள், அதன் விலை விவரங்கள், உங்களை எவ்வாறு தொடர்புக்கொள்வது போன்ற தகவல்களை பகிருதல் போன்ற பல வழிகளில் தொழிலை promotion செய்ய வேண்டும். அப்போதுதான் உங்களுக்கு ஆர்டர்கள் வர தொடங்கும்.
👉எதிர்காலத்தில் இதன் தேவை அதிகமாக இருப்பதால் இப்போதே இந்த தொழிலை தொடங்குங்கள்..!
மெஹந்தி போட தெரியாதவர்கள் இத்தொழிலை தொடங்குவது எப்படி?
அனைத்து பகுதியிலும் 15 Days மெஹந்தி வகுப்புகள் நடைபெறும். அரேபியன் டிசைன்ஸ், பிரைடல் டிசைன்ஸ், பார்ட்டி டிசைன்ஸ் போன்ற நிறைய மாடல் டிசைன்களை கற்று தருவார்கள். அதில் சேர்த்து மெஹந்தி கலையினை தெரிந்துக்கொண்டு இத்தொழிலை தொடங்கலாம்.
இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில் போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | siru tholil ideas in tamil |