இந்த தொழிலை நீங்கள் செய்தால் தினமும் அதிகமான லாபத்தை பெறலாம்

low investment business in tamil

குறைந்த முதலீட்டில் என்ன தொழில் செய்யலாம்

வணக்கம் நண்பர்களே இன்று நம் பதிவில் ஒரு அருமையான தொழிலை பற்றித்தான் தெரிந்துகொள்ளப்போகிறோம். இந்த தொழிலை  தொடங்குவதற்கு குறைந்த முதலீடு இருந்தால் மட்டும் போதும் ஆனால் தினமும் அதிகமான லாபத்தை பெறலாம். இந்த தொழிலின் தேவைகள் அதிகமாக இருப்பதால் இதில் நீங்கள் அதிகமான  லாபத்தையும் எதிர்பார்க்க முடியும். மேலும் புதிதாக தொழில் தொடங்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு இந்த தொழில் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். மேலும் இவை என்ன தொழில் என்றும் இவற்றை தொடங்குவதற்கு தேவைப்படும் முதலீடு, இடவசதி போன்றவற்றை நம் பதிவின் மூலம் தெரிந்துகொள்ளலாம் வாங்க.

பெண்களுக்கான அருமையான தொழில் தினமும் 2000 ரூபாய்க்கு மேல் வருமானம்

Low Investment Business inTamil:

இந்த தொழில் என்னவென்றால் பள்ளி, கல்லூரி, ஹோட்டல், வீடுகள் போன்ற எல்லா இடத்திற்கும் அதிகமாக தேவைப்படும் Despin Cover விற்பனை செய்வது பற்றித்தான்  தெரிந்துகொள்ளப்போகிறோம். இந்த கவர்களை நீங்களே தயாரிப்பது போல் இருந்தால் இதற்கு அதிகமான முதலீடுகள் தேவைப்படும்.  இதை நீங்கள் மொத்த விலைக்கு வாங்கி சந்தைகளில் விற்பனை செய்வதன் மூலம் அதிகமான லாபத்தை பெறலாம்.

தேவைப்படும் இடம்:

இந்த தொழிலை தொடங்குவதற்கு  பெரிதாக இடம் வேண்டும் என்ற அவசியம் இல்லை. உங்கள் வீட்டில் சிறிதாக 10 × 10 இடம் இருந்தால் போதும் நீங்களும் இந்த தொழிலை தாராளமாக செய்து வரலாம்.

குறைந்த முதலீட்டில் அதிக லாபம்:

இந்த தொழிலை நீங்கள் சொந்தமாக தொடங்க வேண்டும் என்று நினைத்தால் அதிகபட்சம் 1,00,000 ரூபாய்க்கு மேல் வரையும் முதலீடு செய்யவேண்டியதாக இருக்கும்.  ஆனால் இதை நீங்கள் மொத்தமாக வாங்கி, விற்பனை செய்யும் பொழுது உங்களுக்கு தேவைப்படும் முதலீடு 1000 ரூபாய் இருந்தால் மட்டும் போதும், இந்த தொழிலை நீங்கள் தொடங்கலாம்.

விற்பனை செய்யும் முறை:

இந்த கவர்களை வாங்கி நீங்கள் மொத்த விற்பனை முறையிலும், சில்லறை விற்பனை முறையிலும் அல்லது ஆன்லைன் மூலமாகவும் விற்பனை செய்யலாம். இந்த கவர்கள் கருப்பு மற்றும் பச்சை நிறத்தில் உள்ளது. இதை நீங்கள் மொத்தமாக 45 ரூபாய்க்கு வாங்குவீர்கள் ஆனால் இதனை நீங்கள் ஆன்லைன் மூலமாக விற்கும்பொழுது 150 ரூபாய்க்கு விற்பனை செய்யலாம்.

இந்த கவர்களை நீங்கள் 10 கிலோ வரையும் வாங்கி அதனை விற்பனை செய்யும் பொழுது தினமும் 1000 ரூபாய் வரையும் வருமானம் கிடைக்கும். நீங்கள் விற்பனை செய்து விற்கும் கிலோ கணக்கை பொறுத்து வருமானத்தை பெறலாம்.

மேலும் இந்த தொழில் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் இந்த தொழில் தொடங்கி நீங்களும் அதிகமான லாபத்தை பெறலாம்.

 

இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில் போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> siru tholil ideas in tamil 2022