யாரும் அதிகம் செய்யாத தொழில் 10 ஆயிரம் முதலீட்டில் 50 ஆயிரம் சம்பாதிக்கலாம்..!

Advertisement

Low Investment Business Ideas in Tamil

வணக்கம் நண்பர்களே.. இன்று நாம் தொழில் பதிவில் ஒரு அருமையான தொழில் வாய்ப்பை பற்றி தான் பார்க்க போகிறோம். குறிப்பாக யாரும் அதிகம் கண்டுகொள்ளாத தொழில் என்றும் இந்த தொழிலை சொல்லலாம். வீட்டில் கொஞ்சம் இடம் இருந்தால் போதும் இந்த தொழிலை செய்யலாம். குறைந்த முதலீடு போதும். ஆண், பெண் இருவருமே வீட்டில் இருந்து செய்யலாம். அது என்ன தொழில் என்றுதானே யோசிக்கிரங்க. ஒன்றும் இல்லை துடைப்பம் தயாரிப்பு தொழிலை பற்றி தான் பார்க்க போகிறோம். துடைப்பத்தால் இரண்டு வகையான துடைப்பான்களை பயன்படுத்துக்கொன்றன.

அவை தென்னைமர ஓலையில் இருந்து கிழித்து எடுக்கும் குச்சியில் இருந்து தயாரிக்கப்படும் துடைப்பத்தை பயன்படுத்துகின்றன, மற்றொன்று ஒரு வகையான புள்ளில் இருந்து தயாரிக்கப்படும் துடைப்பம் ஆகும். இந்த துடைப்பத்தை பெரும்பாலும் கடை மற்றும்  வீட்டிற்கு தான் பயன்படுத்துவார்கள். இந்த இரண்டு துடைப்பத்திற்கும் மக்களிடம் அதிக வரவேற்பு இருக்கிறது. இதனை நாம் தயாரித்து விற்பனை செய்வதன் மூலம் நல்ல வருமானம் பெற முடியும். சரி வாங்க இந்த தொழிலை எப்படி ஆரம்பிக்கலாம் என்றும் பார்க்கலாம்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே: https://bit.ly/3Bfc0Gl

தேவைப்படும் மூலப்பொருட்கள்:

Grass Broom, Coco Stick Broom, கட்டு கம்பி, Plastic Broom Handle இவைகள் தான் இந்த தொழிலுக்கான மிக முக்கியமான மூலப்பொருட்கள் ஆகும். இந்த மூலப்பொருட்களை நீங்கள் ஆன்லைனில் ஆர்டர் செய்தும் வாங்கிக்கொள்ளலாம்.

இதன் விலை நிலவரம் பொறுத்தவரை:

ஆன்லைனில் ஒரு கிலோ Grass Broom மற்றும் Coco Stick Brooms 30 ரூபாய்க்கு கிடைக்கிறது

Plastic Broom Handle ஒன்று 4 ரூபாயில் இருந்து ஆரம்பிக்கிறது. தரத்திற்கு ஏற்றவாறு இதனுடைய விலை மாறுபடும்.

கட்டு கம்பி ஒரு ரோல் தோராயமாக 75 ரூபாய் இருக்கும். ஆக உங்களுக்கு தேவையான அளவிற்கு இந்த பொருட்களை மொத்தமாக வாங்கிக்கொள்ளுங்கள்.

தயாரிக்கும் முறை:Low Investment Business Ideas in Tamil

தென்னைமர குச்சிகளை நீங்கள் 300 கிராம், 500 கிராம் என்று எடை எடுத்து பிறகு அதனை கட்டு கம்பியால் கட்டினால் போதும் துடைப்பம் தயாராகிவிடும்.

புள்ளை கொண்டு தயாரிக்கப்படும்  டைல்ஸ் துடைப்பம் தயாரிக்க  பிளாஸ்டிக் ஸ்டிக்கை எடுத்துக்கொள்ளுங்கள் பின் அதில் புள்ளை செட் செய்தால் போதும். அந்த துடைப்பமும் தயாராகிவிடும். தெளிவான செய்முறை விளக்கத்தை தெரிந்துகொள்ள வேண்டும் என்றால். YouTube-யில் வீடியோ பார்த்து தெரிந்துகொள்ளுங்கள். உங்களுக்கு ஒரு ஐடியா கிடைக்கும்.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
தினமும் 9,250 ரூபாய் சம்பாதிக்க போட்டியே இல்லாத அருமையான தொழில்..!

முதலீடு:

இந்த தொழில் ஆரம்பிப்பதற்கு 10,000 ரூபாய் முதலீடு தேவைப்படும்.

வருமானம்:

சாதாரண துடைப்பம் ஒன்றை நீங்கள் 50 ரூபாய்க்கு விற்பனை செய்யலாம், அதுவே டைல்ஸ் துடைக்கும் துடைப்பமாக இருந்தால் 100 ரூபாய்க்கு விற்பனை செய்யலாம். ஒரு வாரத்திற்கு 100 சாதாரண துடைப்பம், டைல்ஸ் துடைப்பம் 200 விற்பனை செய்தீர்கள் என்றால் உங்களுக்கு

சாதாரண துடைப்பம் 50 X 100 = Rs. 5,000/-

டைல்ஸ் கூட்டும்  துடைப்பம் 200 X 100 = Rs. 20,000/-

25,000 வருமானமாக கிடைக்கும். செலவுகள் 10,000 என்று வைத்துக்கொண்டால் 15,000/- லாபம் கிடைக்கும்.

சந்தை வாய்ப்பு:

நீங்கள் தயார் செய்த துடைப்பத்தை மளிகை கடை, சூப்பர் மார்க்கெட், டிபார்ட்மென்ட் ஸ்டோர், உங்கள் தெரு மற்றும் ஊரில் அனைத்து இடங்களிலும் விற்பனை செய்யலாம்.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
300 ரூபாய் முதலீட்டில் 5000 ரூபாய் வருமானம் தரும் சுயதொழில்..!

இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில் போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> siru tholil ideas in tamil
Advertisement