Mobile Phone Accessories
வணக்கம் நண்பர்களே..! இன்றைய காலகட்டத்தில் மொபைல் போனின் பயன்பாடு எந்த அளவிற்கு முன்னேறி செல்கிறது என்று நம் அனைவருக்குமே தெரியும். மொபைல் போன்கள் நம் அனைவரின் வாழ்விலும் தவிர்க்க முடியாத ஒரு இடத்தை பிடித்து விட்டது என்றே சொல்லலாம். அப்படி இருக்கும் வகையில் நாம் மொபைல் போனில் இருக்கும் பாகங்களை விற்பனை செய்து வரலாம். இதனால் நல்ல வருமானத்தை பெற முடியும். இந்த தொழில் எப்படி தொடங்குவது என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம் வாங்க..!
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே: https://bit.ly/3Bfc0Gl
Mobile Phone Accessories Business in Tamil:
மொபைல் போன் இல்லாமல் இருக்க முடியாது என்று சொல்லும் காலகட்டத்தில் வாழ்ந்து வருகின்றோம். அதனால் இந்த தொழில் என்றுமே அழியாத தொழில். போனில் ஏதாவது பிரச்சனை என்றால் கண்டிப்பாக மக்கள் உங்கள் கடையை தேடி தான் வரவேண்டும். அதனால் நீங்கள் இந்த தொழிலை தொடங்கினால் நல்ல லாபம் கிடைக்கும். நீங்களும் உங்கள் வாழ்க்கையில் முன்னேறலாம்.
உங்களை முதலாளியாக மாற்றக் கூடிய சிறந்த தொழில்கள்..! |
முதலீடு எவ்வளவு:
ஒரு தொழில் தொடங்குவதற்கு எவ்வளவு முதலீடு தேவை என்பது தான் அனைவரின் மனதிலும் எழும் முதல் கேள்வியாக இருக்கிறது. இந்த வணிகம் அமைப்பதற்கு உங்கள் பகுதியில் உள்ள கடையின் விலை மற்றும் எவ்வளவு பணியாளர்கள் தேவைப்படுவார்கள் அதுபோல நீங்கள் வைத்திருக்க விரும்பும் போன் பாகங்கள் இவை அனைத்தையும் சேர்த்து 1 லட்சம் வரை முதலீடு தேவைப்படும்.
செல்போன் ஆக்சஸரீஸ் வணிகத்தைத் தொடங்குவது எப்படி..?
- மொபைல் ஆக்சஸரீஸ் பிசினஸை அமைப்பதற்கு உங்கள் வணிக நிறுவனத்தை பதிவு செய்ய வேண்டும்.
- உங்கள் வணிகத்தை சிறிய அளவிலான வணிகமாகத் தொடங்கினால், நீங்கள் ஒரு தனி உரிமையாளர் என்று பதிவு செய்ய வேண்டும்.
- உங்கள் வணிகத்தை எந்த விதமான தடைகள் மற்றும் சிக்கல்கள் இல்லாமல் நடத்துவதற்கு உங்கள் கடையை சட்டத்தின் கீழ் பதிவு செய்வது மிகவும் அவசியம்.
- நீங்கள் ஒரு கடையை திறப்பதற்கு கட்டாயம் வர்த்தகர் உரிமம் பெற்றிருக்க வேண்டும்.
நீங்கள் திறக்கும் கடை அதிக மக்கள் நடமாட்டம் இருக்கும் இடமாக இருக்க வேண்டும்.
செல்போன் மற்றும் செல்போன் பாகங்கள் பற்றியும் அதுபோல அனைத்து பிராண்டுகள் பற்றியும் நன்கு அறிந்திருக்க வேண்டும். நீங்கள் வணிகத்தில் பயன்படுத்த விரும்பும் மொபைல் போன் பாகங்களை தேர்வு செய்ய வேண்டும்.
பின் அந்த பாகங்களை மொத்தமாக வாங்கி விற்பனை செய்து வரலாம். இந்த வணிகத்தில் புதிய தொழில் நுட்பங்கள் மற்றும் புதிய பாகங்களை வாங்கி விற்பனை செய்யலாம். இதுபோல நீங்கள் மொபைல் பாகங்களை வாங்கி விற்பனை செய்து வருவதால் நல்ல லாபம் கிடைக்கும்.
என்றுமே அழியாத இந்த தொழிலை தொடங்கினால் நீங்களும் உங்கள் வாழ்க்கையில் முன்னேறலாம்.
எப்பொழுதும் Demand உள்ள இந்த தொழிலை தொடங்கி பாருங்க..! தினமும் அதிக லாபம் தான்..! |
இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில் போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | siru tholil ideas in tamil |