இந்தியாவில் eCommerce விற்பனையில் அதிகம் விற்பனையாகும் 10 தயாரிப்புகள்..!

Advertisement

இந்தியாவில் eCommerce விற்பனையில் அதிகம் தேவைப்படும் 10 தயாரிப்புகள்..!

Most Demanded Products in India Online – இந்தியாவில் ஆன்லைன் ஷாப்பிங் என்பது வளர்ந்து வரும் ஒரு சிறந்த Business-ஆக உள்ளது. குறிப்பாக விற்பனை செய்பவர்களும் மற்றும் அதனை வாங்குபவர்களின் எண்ணிக்கை தினந்தோறும் அதிகரித்த வண்ணமாக உள்ளது. அந்த வகையில் இந்தியாவில் ஆன்லைன் ஷாப்பிங்கில் அதிகம் விற்பனை ஆகும் பொருட்களின் பட்டியல்களை இன்று நாம் காணலாம். மேலும் இந்த 10 தயாரிப்புகள் மக்களிடம் அதிகம் வரவேற்ப்புகளை பெற்றுள்ளது என்பதால், இதனுடைய தேவையும் eCommerce விற்பனையில் அதிகமாகவே உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. சரி வாங்க இந்தியாவில் eCommerce விற்பனையில் அதிகம் விற்பனையாகும் 10 தயாரிப்புகள் பற்றிய விவரங்களை இப்பொழுது நாம் பார்க்கலாம்.

1. ஆடைகள் – Apparels:

Most Demanded Products in India Online இந்தியாவில் ஆன்லைன் ஷாப்பிங்கில் அதிகம் விற்பனையாகும் தயரிப்புகளில் ஆடைகளுக்கு மிகப்பெரிய இடம் வகுக்கப்பட்டுள்ளது. ஆடைகளில் ஆண்களுக்கென்று தனி ஆடைகளும், பெண்களுக்கென்று தனி ஆடைகளும் மற்றும் குழந்தைகளுக்கென்று தனி ஆடைகளும் உள்ளது. குறிப்பாக ஆன்லைன் ஷாப்பிங் மூலம் கிடைக்கும் மொத்த வருமானம் கிட்டத்தட்ட 35% ஆடை மற்றும் ஆடை சார்ந்த  பொருள்களில் இருந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

2. மொபைல்ஸ்:

மொபைல் போனும் ஆன்லைன் ஷாப்பிங் ஸ்டோரில் அதிகம் விற்பனை செய்யப்படும் பொருள் ஆகும். நேரடியாக கடைகளில் வாங்கும் அனைத்து வகையான மொபைல் மாடல்களும் ஆன்லைனிலும் அதிகளவு விற்பனை செய்யப்படுகிறது. குறிப்பாக ஜூலை 2022 நிலவரப்படி, இந்தியா முழுவதும் 600 மில்லியன் ஸ்மார்ட்போன்கள் ஆன்லைன் மூலம் விற்பனை செய்யப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

3. புத்தகங்கள்:

Books

Most Demanded Products in India Online நாம் ஒரு புத்தகத்தை நேரடியாக ஒரு புத்தகத்தை வாங்குவதற்கு அதிக நேரம் செலவாகுகிறது. ஆனால் ஆன்லைனில் ஒரு புத்தகத்தை நாம் வாங்குவதற்கு அதிக நேரம் செலவாகாது. நமக்கு பிடித்த புத்தகங்களை மிக எளிதாக ஆர்டர் செய்து கொள்ளலாம். இதன் காரணமாக ஆன்லைன் ஷாப்பிங் ஸ்டோரில் எப்பொழுதும் அதிக  நபர்கள் புத்தங்களை ஆர்டர் செய்து பெற்றுக் கொள்ளலாம். இதனால் ஆன்லைனில் அதிகளவு புத்தகங்களும் விற்பனை செய்யப்படுகிறது.

4. காலணிகள்:

காலணிகளை வாங்குவதற்கு ஆன்லைன் ஷாப்பிங் ஸ்டோர் மிகவும் சிறந்த இடம் என்று சொல்லலாம். ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என்று அனைவருக்கும் தனி தனி ரகங்களில் ஆன்லைனில் விற்பனை செய்யப்படுகிறது. இந்த தயாரிப்பும் ஆன்லைனில் அதிக தேவையுள்ள பொருள் ஆகும்.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇 2022-ஆம் ஆண்டு ஆன்லைனில் அதிகம் விற்பனை செய்யப்பட்ட பொருட்கள் என்னென்ன தெரியுமா?

5. ஜூவல்ஸ்:

பெண்களுக்கு ஜூவல்ஸ் என்பது மிகவும் பிடித்தமான பொருள் என்று அனைவரும் தெரிந்த விஷயம் தான். இருப்பினும் ஜூவல்ஸை நேரடியாக வாங்க செல்லும் போது. அங்கு நாம் எதிர்பார்க்கும் அளவிற்கு இருப்பதில்லை. ஆனால் ஆன்லைன் ஷாப்பிங் ஸ்டோரில் அப்படி இல்லை. பலவகையான டிசைன்களில் விலை மலிவாகவும் விற்பனை செய்யப்படுகிறது. ஆக பெரும்பாலான பெண்கள் ஆன்லைன் மூலம் தான் ஜூவல்ஸை ஆர்டர் செய்கின்றன. ஆக ஜூவல்ஸும் அதிகளவு விற்பனை ஆகி கொண்டிருக்கும் மற்றும் அதிக டிமாண்ட் உள்ள ஒரு தயாரிப்பு பொருள் ஆகும்.

6. அழகு சாதன பொருட்கள்:

Most Demanded Products in India Online பெண்களாக இருந்தாலும் சரி ஆண்களாக இருந்தாலும் சரி பலர் தங்கள் அழகை பராமரிக்க பலவகையான அழகு சாதன பொருட்களை பயன்படுத்துகின்றன. இந்த பொருட்களை வீட்டில் இருந்தபடியே மிக எளிமையாக ஆர்டர் செய்வதற்கு ஆன்லைனில் ஷாப்பிங் ஸ்டோர் மிகவும் சிறந்த இடமாக இருப்பதால். ஆன்லைனில் அதிகளவு விற்பனை ஆகும் தயாரிப்புகளில் அழகு சாதன பொருட்களும் மிக முக்கிய பங்குகளை வகுக்கிறது.

7. Computer Accessories & Software:

இப்பொழுது எல்லாம் கம்ப்யூட்டர் சார்ந்த மென்பொருட்கள் நேரடியாக விற்பனை செய்யப்படும் கடைகளிலேயே அதிகளவு கிடைப்பதில்லை. கம்ப்யூட்டர் சார்ந்த பொருட்களை விற்பனை செய்யும் கடைக்காரர்களே ஆன்லைனில் ஆர்டர் செய்து தான் பல பொருட்களை விற்பனை செய்கின்றன. இதன் காரணமாக பலர் நேரடியாக ஆன்லைனிலேயே கணினி சார்ந்த பொருட்களை ஆர்டர் செய்து கொள்கின்றன. இதனால். ஆன்லைனில் கணினி சார்ந்த பொருள்களுக்கும் ஆன்லைனில் அதிக டிமாண்ட் இருக்கிறது.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
3 மணிநேரம் வேலை செய்தால் போதும் 5,000 ரூபாய் வரை சம்பாதிக்கலாம்..!

8. பொம்மைகள் மற்றும் விளையாட்டு பொருட்கள்:

 

Most Demanded Products in India Online குழந்தைகளுக்கென்று ஆன்லைனில் பல வகையான விளையாட்டு பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறது. கல்வி சார்ந்த விளையாட்டு பொருட்கள், பொம்மைகள், ரிமோட் கண்ட்ரோல் கார்கள் மற்றும் ஹெலிகாப்டர்கள் போன்ற பலவகையான விளையாட்டு பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறது. பெற்றோர்களும் குழந்தைகளின் அறிவு திறனை வளர்க்க பல வகையான கல்வி சார்ந்த விளையாட்டு பொருட்களையும் வாங்கி தருகின்றனர்.  விளையாட்டு பொருட்களும் ஆன்லைனில் அதிக விற்பனை ஆக கூடிய மற்றும் அதிக டிமாண்ட் உள்ள பொருளாக உள்ளது.

9. சமையலறை பாத்திரங்கள்:

Kitchenware

பெண்களுக்கு வீட்டில் எவ்வளவு தான் பாத்திரங்கள் இருந்தாலும் வித விதமான பாத்திரங்கள், காய்கறிகள் கட் செய்யும் கட்லர் இது போன்ற  வசதியான பொருட்களை வாங்க ஆன்லைன் ஷாப்பிங் ஸ்டோரை நாடுகின்றன. ஆக இது போன்ற பொருட்களுக்கு ஆன்லைனில் ஷாப்பிங் ஸ்டோரில் அதிக வரவேற்பு இருக்கிறது.

10. Customised Gifts:Customised Gifts

Most Demanded Products in India Online ஏதாவது ஒரு விஷசமாக இருந்தாலும் சரி, நண்பரின் பிறந்த நாளாக இருந்தாலும் சரி, உறவினரின் திருமண விழாவாக இருந்தாலும் சரி எந்த ஒரு மகிழ்ச்சியான நிகழ்வாக இருந்தாலும் சரி அவர்களுக்கு தனித்துவமான மற்றும் சிறப்பான பரிசுகளை அளிக்க விரும்புகின்றன. இதனால் பலர் ஆன்லைன் ஷாப்பிங் ஸ்டோரை நாடுகின்றன. ஆக கிப்ட் சார்ந்த அதிலும் தனித்துவமான பொருட்களுக்கு ஆன்லைன் ஷாப்பிங் ஸ்டோரில் அதிக வரவேற்பு இருக்கிறது. அதாவது Gifts சார்ந்த பொருள்களுக்கு ஆன்லைனில் அதிக டிமாண்ட் உள்ளது.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
இந்த கடை மட்டும் வச்சிப்பாருங்க வியாபாரம் சும்மா தாறுமாறா போகும்..!

இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில் போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> siru tholil ideas in tamil
Advertisement