Mustard Oil Making Business in Tamil
இன்றைய காலகட்டத்தில் அனைவருக்குமே பணத்தேவை என்பது அதிகரித்து கொண்டே வருகின்றது. அதனால் அதனை பூர்த்தி செய்வதற்காக அனைவருமே ஏதாவது ஒரு வேலைக்கு செல்கின்றோம். ஆனால் ஏதாவது ஒரு வேலை செய்தால் மட்டும் இன்றைய சூழலில் உள்ள பணத்தேவையை பூர்த்தி செய்வது மிகவும் கஷ்டமாக இருக்கும். எனவே அனைவரும் ஏதாவது ஒரு சுயதொழிலை கற்று கொண்டு அதனை தொடங்குவது நல்லது. அதனால் தான் உங்களுக்கு உதவும் வகையில் நமது பதிவின் மூலம் தினமும் ஒரு அருமையான மற்றும் மிகவும் எளிமையான சுயதொழில் பற்றி அறிந்து கொண்டு வருகின்றோம். அந்த வரிசையில் இன்றைய பதிவில் கடுகு எண்ணெய் தயாரிக்கும் தொழில் பற்றி தான் விரிவாக காண இருக்கின்றோம். அதனால் இந்த பதிவை முழுதாக படித்து இதில் கூறியுள்ள கடுகு எண்ணெய் தயாரிக்கும் தொழில் உங்களுக்கு ஏற்றதாக இருந்தால் அதனை தொடங்கி வாழ்க்கையில் முன்னேறுங்கள்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl
Mustard Oil Making Business Plan in Tamil:
இன்றைய சூழலில் பல அழகு சாதன பொருட்கள் தயாரிக்க மற்றும் பல வகையான உணவுப் பொருட்களில் முக்கியமான மூலப்பொருட்களில் இந்த கடுகு எண்ணெய் பயன்படுகின்றது.
எனவே நீங்கள் இந்த கடுகு எண்ணெய் தயாரிக்கும் தொழிலை தொடங்கினீர்கள் என்றால் அதிக லாபம் கிடைப்பது உறுதி. அதனால் உடனடியாக நீங்கள் இந்த தொழிலை தொடங்கி வாழ்க்கையில் முன்னேறுங்கள்.
தேவையான முதலீடு மற்றும் மூலப்பொருட்கள்:
இந்த கடுகு எண்ணெய் தயாரிக்கும் தொழிலுக்கு தேவையான முக்கியமான மூலப்பொருட்கள் என்று பார்த்தால் நல்ல நிலையில் உள்ள கடுகு, Oil Extraction Machine மற்றும் Packing Machine ஆகியவை தேவைப்படும்.
இந்த Packing Machine-ன் விலை அதன் மாடலை பொறுத்து மாறுபடும். இதன் ஆரம்ப விலை ரூபாய் 1,000 ஆகும். அதே போல் Oil Extraction Machine-ன் விலை அதன் மாடலை பொறுத்து மாறுபடும்.
இதையும் தெரிந்துக்கொள்ளுங்கள்=> உங்களின் கையில் காசு இல்லை என்றாலும் இந்த தொழிலை தொடங்கி நல்ல லாபம் பார்க்கலாம்
தேவையான ஆவணங்கள் மற்றும் இடவசதி:
மேலும் நீங்கள் தயாரித்து வைத்துள்ள கடுகு எண்ணெயை Online மூலமாக விற்பனை செய்ய போகின்றீர்கள் என்றால் அதற்கு GST Registration கண்டிப்பாக பெற்றிருக்க வேண்டும்.
இந்த தொழில் ஒரு உணவுப்பொருள் தயாரிக்கும் தொழில் என்பதால் இதனை தொடங்குவதற்கு FSSAI ஆவணம் கண்டிப்பாக பெற்றிருக்க வேண்டும். இந்த தொழில் செய்வதற்கு உங்கள் வீட்டில் நல்ல தூய்மையான 10 X 10 இடம் இருந்தால் மட்டுமே போதும்.
தயாரிக்கும் முறை:
முதலில் நாம் வாங்கி வைத்துள்ள கடுகினை நன்கு சுத்தம் செய்து விட்டு நன்கு காய வைத்து கொள்ளுங்கள். பின்னர் அதனை Oil Extraction Machine-ல் அதற்கென்று ஒதுக்கப்பட்டுள்ள இடத்தில் சேர்த்து மெஷினை On செய்தீர்கள் என்றால் அதுவே எண்ணெயை தயாரித்து தந்து விடும்.
பிறகு அதனை Packing Machine-யை பயன்படுத்தி பேக்கிங் செய்து கொள்ளுங்கள்.
இதையும் தெரிந்துக் கொள்ளுங்கள்=> அதிக Demand உள்ள இந்த பொருளை தயாரித்து விற்பனை செய்தால்..! நல்ல லாபம் கிடைக்கும்
வருமான மற்றும் விற்பனை செய்யும் முறை:
நாம் தயாரித்து பேக்கிங் செய்து வைத்துள்ள எண்ணெயை, எண்ணெய் கடைகள், மளிகை கடைகள், சூப்பர் மார்கெட்டுகள் மற்றும் அழகு சாதன பொருட்கள் தயாரிக்கும் இடங்களுக்கெல்லாம் நீங்களே நேரடியாக சென்றும் விற்பனை செய்யலாம்.
அப்படி இல்லையென்றால் Online மூலமாகவும் விற்பனை செய்யலாம். தோராயமாக 1 லிட்டர் கடுகு எண்ணெயின் விலை கடைகளில் 200 ரூபாய் – 250 ரூபாய் என்றால், தோராயமாக நீங்கள் ஒரு நாளைக்கு நீங்கள் 20 லிட்டர் கடுகு எண்ணெயினை விற்பனை செய்கிறீர்கள் என்றால் 4,000 ரூபாய் முதல் 5,000 ரூபாய் வரை சம்பாதிக்கலாம்.
தோராயமாக ஒரு மாதத்திற்கு 1,20,000 ரூபாய் – 1,50,000 ரூபாய் வரை சம்பாதிக்கலாம். எனவே இந்த கடுகு எண்ணெய் தயாரிக்கும் தொழில் உங்களுக்கு ஏற்றதாக இருந்தால் இதனை தொடங்கி வாழ்க்கையில் முன்னேறுங்கள்.
இதையும் தெரிந்துக் கொள்ளுங்கள்=> காய வைத்தால் மட்டும் போதும் மாதம் லட்சக்கணக்கில் சம்பாதிக்கலாம்
இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில் போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | siru tholil ideas in tamil |