ஒரு வாரத்திற்கு 20 ஆயிரம் லாபம்.. மூலப்பொருட்கள் இலவசம்.. முதலீடு இல்லாத தொழில்..

Advertisement

முதலீடு இல்லாத தொழில் | மூலப்பொருள் இலவம்

வணக்கம் மக்களே.. எல்லோருக்குமே சொந்தமாக எதாவது தொழில் தொடங்க வேண்டும் என்று ஆசை இருக்கும்.. அதிலும் சிலருக்கு முதலீடும் இல்லாமல்.. தொழில் தொடங்க வேண்டும் என்று நினைப்பார்கள்.. ஒரு சிலர் இலவசமாக கிடைக்கும் பொருட்களை வைத்து அதன் மூலம் தொழில் தொடங்க வேண்டும் என்று நினைப்பார்கள். அப்படிப்பட்டவர்களுக்கு தான் இந்த பதிவு. அதாவது வீணாக குப்பையில் எறியக்கூடிய பொருளை வைத்து வாரம் நீங்கள் 20 ஆயிரம் வரை சம்பாதிக்கலாம். அது வேறு ஒன்றும் இல்லை கரும்பு சக்கைகளை மொத்தமாக சேமித்து அதனை விற்பனை செய்வதன் மூலம் நல்ல வருமானத்தை பெறமுடியும். அது குறைத்த தகவல்களை கீழ் காணலாம் வாங்க.

No Investment Business Ideas in Tamil

கரும்பு சக்கை பயன்கள்:

சர்க்கரை ஆலைகளில் ஒரு முக்கிய எரிபொருளாக கரும்புச் சக்கை பயன்படுத்தப்படுகிறது.

இது மட்டும் இல்லாமல் இந்த கரும்பு சக்கையை பயன்படுத்தி காகிதக் கூழ், காகிதம், பலகை, பிளேட், டம்ளர், கப் இது போன்ற பல பொருட்கள் தயாரிக்க பயன்படுத்தப்படுகிறது. இந்த பொருட்கள் அனைத்துமே மண் வளத்தை ஒருபோது பாதிக்காது. சுற்றுச்சூழலுக்கும் எந்த ஊரு பாதிப்பும் ஏற்படாது. ஆக நீங்களே கூட கரும்பு சக்கையில் இதுபோன்ற பொருட்களை தயார் செய்து விற்பனை செய்யலாம்.

அல்லது எரிபொருள்கள் அதிகம் பயன்படுத்தும் நிறுவனக்களிடம் கூட இந்த சக்கையை விற்பனை செய்யலாம்.

அல்லது கரும்பு சக்கையை பயன்படுத்தி கைவினை பொருட்களை தயார் செய்பவர்களிடம் கூட விற்பனை செய்யலாம்.

இந்த கரும்பு சக்கையை உங்கள் ஊரை சுற்றில் உள்ள அனைத்து ஜூஸ் கடைகளிலும் சென்று நீங்கள் வாங்கி கொள்ளலாம். இதற்கு நீங்கும் முதலீடு செய்ய வேண்டும் என்ற எந்த இரு அவசியமும் இருக்காது.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👉👉 தினமும் 1000 ரூபாய் முதல் 5000 வரை சம்பாதிக்கலாம்..! லாபம் தரும் தொழில்கள்

வருமானம்:

ஒரு கடையில் 15 கிலோ கரும்பு சக்கையை வாங்குகிறீர்கள் என்று வைத்து கொள்வோம். ஆ ஒரு நாளுக்கு அந்த 50 கடைகளிலும் 15 கிலோ கரும்பு சக்கைகளை சேமித்துவிட்டிகள் என்றால், உங்களிடம் 15X50=750 கிலோ கரும்பு சக்கைகள் இருக்கும். ஆக ஒரு வாரத்தில் நீங்கள் 5.25 டன் கரும்பு சக்கையை சேகரித்து வைத்திருந்தீர்கள் என்றால் ஒரு டன் கரும்பு சக்கையை 4000 ரூபாய்க்கு விற்பனை செய்யலாம். 5 டன் என்றால் ஒரு வாரத்திற்கே உங்களுக்கு 21,000 ரூபாய் வரை வருமானம் கிடைக்கும்.

இந்த தொழிலுக்கு நீங்கள் முதலீடு செய்ய தேவை இல்லை. மூலப்பொருள் கூட இலவசமாக தான் கிடைக்கும். இருப்பினும் கரும்பு சக்கைகளை சேகரித்து வைக்க இடம் மட்டும் தான் தேவைப்படும்.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👉👉 25 நாளில் வருமானம் வரனுமா அப்போ இந்த தொழிலை செய்ங்க..!

இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில் போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> siru tholil ideas in tamil 2022
Advertisement