Headache Balm Business Plan in Tamil
பொதுவாக அதிகளவு அனைவரின் கையிலும் அல்லது வீட்டில் வேலைக்கு செல்லும் பெண்களிடம் இருப்பது தலைவலி தைலம் தான். தைலம் அனைவருக்கும் உதவும் என்று நினைக்காதீர்கள். ஏனென்றால் சிலருக்கு தைலம் போட்டவுடன் நிற்கும். சிலருக்கு மாத்திரை போட்டால் தான் நிற்கும். அந்தளவிற்கு தலை வலி அதிகமாக உள்ளது.
ஆனால் பெண்களுக்கு ஒரு தலைவலியை அல்லது சளி இருமலுக்கு ஒரு முக்கிய மருந்தாக விளங்குவது இந்த தைலம் தான். இது அதிகளவு கடைகளில் விற்கிறது. ஆனால் அது அனைத்தும் உங்களின் உடலுக்கு ஏற்றுக்கொள்ளுமா என்றால் தெரியாது. ஆகவே வீட்டில் உள்ளவர்களுக்கு தைலம் எப்படி செய்வது அதனை இயற்கையாக தயாரித்து எப்படி கடைகளில் விற்பது என்பதை பற்றி தெரிந்துகொள்வோம் வாங்க..!
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே: https://bit.ly/3Bfc0Gl
தலைவலி தைலம் செய்வது எப்படி..?
தைலம் தயாரிக்க பொருட்கள் அனைத்தும் நாட்டு மருந்துக்கடைகளில் கிடைக்கும். அதனை வாங்கி கொண்டால் நல்லது.
தைலம் செய்ய தேவையான பொருட்கள்:
- பச்சை கற்பூரம்
- ஓம உப்பு
- புதினா உப்பு
- சிரஞ்சி ஊசி
அவ்வளவு தான் எப்படி தயாரிப்பது என்று பார்க்கலாம்.
முதலில் கரு கண்ணாடி பாட்டில் எடுத்துக்கொள்ளவும். அதில் பச்சை கற்பூரம், ஓம உப்பு, புதினா உப்பு மூன்றையும் சேர்த்து மூடி போட்டு மூடி வைக்கவும். அதன் பின் அதனை நன்கு கலந்துவிடவும். கையில் படமால் பாட்டிலை அடைத்து கலந்துவிடவும்.
அதன் பின் பாட்டில் மூடி போட்டு 12 மணி நேரம் அப்படியே வைக்கவும். அது தைலம் போல் உறைந்து வந்துவிடும். அதன் பின் தைலம் அடைக்கும் பாட்டிலை வாங்கி சிரஞ்சி ஊசி மூலம் அந்த தைலத்தை அடைத்து வைக்கலாம்.
இதையும் படித்துப்பாருங்கள்=> ஆண்டு முழுவதும் Demand உள்ள இந்த தொழிலை இன்றே ஆரம்பியுங்கள்..!
எங்கு விற்கலாம்:
பெரிய கடைத்தெருக்களில், அதாவது பெட்டிக்கடை, ஷாப்பிங் மால், கிராமங்களில் விற்கலாம். அதுவும் இயற்கையாக செய்யக்கூடிய தைலம் என்றால் மக்கள் அனைவரும் வாங்குவதற்கு ஆர்வம் செலுத்துவார்கள். அதேபோல் தைலம் பயன்படுத்தும் போது எங்கு வலி உள்ளதோ அங்கு மட்டுமே தேக்கவேண்டும். ஏனென்றால் அது எரிச்சலை ஏற்படுத்தும்.
முதலீடு, லாபம்:
மூல பொருட்கள் வாங்குவதற்கு அதிகளவு தைலம் வேண்டுமென்றால் மொத்தமாக 5000 ரூபாய் தான் தேவைப்படும். இதனை தவிர பாட்டில் ஒரு 2000 ரூபாய்க்கு வாங்கிக் கொள்ளலாம்.
ஒரு பாட்டில் 15 ரூபாய் என்றால் ஒரு கடைகளுக்கு 100 பாட்டில் அனுப்பினால் மொத்தமாக நமக்கு 15,000 ரூபாய் கிடைக்கும். இதனை தவிர நிறைய கடைகளுக்கு சப்ளை செய்தால் உங்களுக்கு ஒரு நாளுக்கு 20,000 வரை லாபம் கிடைக்க வாய்ப்பு உள்ளது.
இதையும் தெரிந்துகொள்ளுங்கள் 👉👉👉 எவ்வளோ நாளைக்கு தான் ஒரே தொழிலை செய்வீங்க கொஞ்சம் Different-ஆ இந்த தொழிலை செய்து பாருங்க..!
இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில் போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | siru tholil ideas in tamil |