வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

படிக்கும் போதே இந்த தொழிலை செய்தால் கை நிறைய சம்பாதிக்கலாம்

Updated On: April 15, 2026 3:42 PM
Follow Us:
Part-Time Business Ideas Without Investment in tamil
---Advertisement---
Advertisement

Part-Time Business Ideas Without Investment

இன்றைய கால கட்டத்தில் சுயதொழில் செய்ய வேண்டும் என்று நினைக்கின்றனர். ஏனென்றால் நிறுவனத்திடம் சென்று வேலை பார்த்தால் அதற்கேற்ற ஊதியமும் கிடைப்பதில்லை. அதுமட்டுமில்லாமல் நேரம், விதிமுறைகள் போன்றவற்றை கடைபிடிக்க வேண்டியிருக்கும். அதுவே சுயதொழில் செய்தால் விதிமுறைகள் பின்பற்ற வேண்டியதில்லை. நாமே முதலாளியாக இருக்கலாம். அந்த வகையில் இன்றைய பதிவில் காலேஜ் படிக்கும் மாணவர்களாக இருந்தாலும் சரி, காலேஜ் படித்து முடித்து விட்டு வீட்டில் இருப்பவர்களுக்காக  சிறந்த தொழிலை பார்ப்போம் வாங்க..

Part-Time Business Ideas Without Investment:

இந்த தொழில் படித்து முடித்து விட்டு வீட்டில் இருப்பவர்களுக்கும் சரி, படித்து கொண்டிருப்பவர்களுக்கும் பார்ட் டைம் தொழிலாக இருக்கும். இன்றைய கால கட்டத்தில் காலேஜ் படிக்கும் மாணவர்கள் பார்ட் டைம் தொழிலாக வெளியில் சென்று தான் வேலை பார்க்கிறார்கள். அதில் வாங்கும் சம்பளமும் போதிய அளவில் இருக்காது. அதனால் இந்த பதிவில் கூறியிருக்கும் தொழிலை செய்தால் வீட்டில் இருந்தபடியே இந்த தொழிலை செய்யலாம். அது என்ன தொழில் என்று யோசிக்கிறீர்களா.! கல்வி கற்பிக்கும் தொழில் தாங்க.. இப்போதெல்லாம் பள்ளியில் படிக்கும் மாணவர்கள் அனைவரும் டியூஷன் செல்கிறார்கள். காரணம் பெற்றோர்கள் இருவருமே வேலைக்கு செல்கிறார்கள். இதனால் பிள்ளைகளுக்கு கல்வி சொல்லி கொடுக்க நேரம் இருப்பதில்லை. அதனாலேயே டியூஷன் சேர்த்து விடுகிறார்கள். அதனால் இந்த தொழிலை நீங்கள் தாராளமாக செய்யலாம். இந்த தொழில் பற்றிய முழு தகவலை தெரிந்து கொள்வோம் வாங்க..

காலையில் 2 மணி நேரத்தில் தினமும் 2,000 ரூபாய் சம்பாதிக்க கூடிய அருமையான தொழில்.. 

இடம்:

Part-Time Business Ideas Without Investment in tamil

இந்த தொழில் செய்வதற்கு தனியாக இடம் தேவையில்லை.உங்கள் வீட்டிலேயே 10 மாணவர்கள் உட்கார்கின்ற அளவிற்கு இடம் இருந்தால் போதுமானது. மாணவர்கள் எண்ணிக்கையானது அதிகமாகும் போது இதனைதனியாக ஒரு இடத்தில் வைக்கலாம்.

முதலீடு மற்றும் மூலப்பொருட்கள்:

இந்த தொழிலுக்கு முதலீடு தேவையில்லை. மூலப்பொருட்கள் என்று பார்த்தால் கரும்பலகை, சாக்பீஸ், டஸ்ட்டர், Fan போன்றவை தேவைப்படும். இதனை வாங்குவதற்கு 1000 ரூபாய் தேவைப்படும். FAN இருந்தால் வாங்க தேவையில்லை, இல்லையென்றால் அதனை வாங்குவதற்கு 1500 ரூபாய் தேவைப்படும். இதனை வாங்குவதற்கு ஒரு முறை முதலீடு செய்தால் போதுமானது.

விளம்பரம்:

இந்த தொழிலுக்கு உங்கள் ஊரிலே பிள்ளைகள் அதிகமாக இல்லை, அல்லது அதிகமான பிள்ளைகள் வர வேண்டும் என்று நினைத்தால் நீங்கள் விளம்பரப்படுத்துவது அவசியமானது. அதற்கு நீங்கள் இன்ஸ்டாகிராம், வாட்சப் போன்ற சமூக வலைத்தளங்களில் நீங்கள் எந்த வகுப்பிற்கு டியூஷன் எடுக்க போகிறீர்கள் என்பதை பதிவிட வேண்டும். தன பிறகு நேரம், பீஸ் போன்றவற்றை பதிவிடுவதன் மூலம் விருப்பட்டவர்கள் உங்களை காண்டாக்ட் செய்வார்கள். இதன் மூலம் மாணவர்கள் அதிகமாக கிடைப்பார்கள்.

வருமானம்:

நீங்கள் எடுக்கும் பாடத்தை பொறுத்தும், வகுப்பை பொருத்தும் வருமானம் கிடைக்கும்.தோராயமாக ஒரு மாதத்திற்கு உங்கள் டியூஷனில் 10 மாணவர்கள் படிக்கிறார்கள் என்றால் ஒரு மாணவனுக்கு 500 ரூபாய்  என்றால் 10 நபர்கள் கற்கிறார்கள் என்றால்  5000 ரூபாய் வருமானம்  கிடைக்கும். இந்த வருமானம் ஆனது நீங்கள் இருக்கும் ஏரியாவை பொறுத்து மாறுபடும்.

இப்படி ஒரு தொழிலா.  வீட்டிலிருந்தே 50000 ரூபாய் வரைக்கும் சம்பாதிக்கலாமா.  இது தெரியாம போச்சே.,

இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில் போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> siru tholil ideas in tamil
Advertisement

anitha

நான் அனிதா பொதுநலம் வலைதளத்தில் Content Writer ஆக பணியாற்றுகிறேன். எனக்கு தொழில்நுட்பம், ஆரோக்கியம், Lifestyle, Schemes போன்றவற்றில் ஆர்வம் அதிகம் இருப்பதால் உங்களுக்கு தகவல்களை சுவாரசியமாக பதிவிடுகிறேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

தொடர்புடையவை

Reselling Business Ideas in Tamil

ரீசெல்லிங் பிசினஸ் இப்படி செய்தால் நல்ல லாபத்தை பெறலாம் | Reselling Business Ideas in Tamil

ஆயிரம் ரூபாய் முதலீட்டில் அதிரடி லாபம் தரக்கூடிய இந்த தொழிலை நீங்கள் தொடங்கினால் நிச்சயம் வெற்றி தான்..!

Glitter Powder Manufacturing Business in Tamil

யாரும் தொடங்காத இந்த புதுமையான தொழிலை நீங்கள் தொடங்கினால் நல்ல லாபம் கிடைக்கும்..!

Vadagam Business in Tamil

வெறும் 100 ரூபாய் இருந்தா போதும் வாரம் 10,000 ரூபாய் சம்பாதிக்கலாம்..! இந்த தொழிலை செய்தால்..!

best business ideas in india

இந்த தொழில் செய்தால் நீங்கள் யாரையும் தேடி போக தேவையில்லை..! உங்களை தேடி வருவாங்க..!

லாபத்தை அள்ளி கொடுக்கும் 9 தொழில் வாய்ப்புகள்..!

smart work business ideas in tamil

தினமும் 1 மணி நேரம் வேலை செய்தால் போதும் 1,500 ரூபாய் சம்பாதிக்கலாம்..!

தயாரிப்பு விலை 1.50 ரூபாய், விற்பனை விலை 15 ரூபாய் , ஒரு கிலோவுக்கு 2000 ரூபாய் லாபம் தரும் தொழில்..!

Photo Studio Business Ideas in Tamil

என்றும் அழியாத இந்த தொழிலை இன்றே தொடங்குங்கள்..!