Rubber Band Making Business in Tamil
இன்றைய காலகட்டத்தில் நம்மில் பலருக்கும் மற்றவர்களிடம் கைகட்டி வேலை பார்ப்பதை விட ஏதாவது ஒரு சுயத்தொழில் ஆரம்பித்து அதற்கு நாம் முதலாளியாக வேண்டும் என்ற ஆசை இருக்கிறது. ஆனால் என்ன சுயத்தொழில் செய்வது என்பது தான் ஒரே குழப்பமாக இருக்கும். அப்படி உங்களுக்கும் ஏதாவது சுயத்தொழில் ஆரம்பித்து முதலாளியாக வேண்டும் ஆனால் என்ன சுயத்தொழில் செய்வது என்பது தான் குழப்பமாக இருக்கிறதா..? அப்படியென்றால் இன்றைய பதிவு உங்களுக்குதான். அதனால் இன்றைய பதிவை முழுதாக படித்து இதில் கூறியுள்ள Rubber Band Making Business உங்களுக்கு ஏற்றதாக இருந்தால் அதனை ஆரம்பித்து வாழ்க்கையில் முன்னேறுங்கள்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே: https://bit.ly/3Bfc0Gl
Rubber Band Business Plan in Tamil:
இன்றைய காலகட்டத்தில் அனைத்து இடங்களிலும் இந்த Rubber Band-ன் அவசியம் அதிகமாகிவிட்டது. பொதுவாக ஒரு சிறிய பொருளை பேக்கிங் செய்யவேண்டும் என்றாலே இந்த Rubber Band-யை தான் பயன்படுத்துகிறோம்.
இதையும் படியுங்கள்=> இந்த 5 தொழில்களில் ஒன்றை தொடங்கி பாருங்க லாபம் கொட்டோ கொட்டுன்னு கொட்டும்
அதனால் நீங்கள் இந்த Rubber Band Making Business-யை தாராளமாக துவங்கலாம். மேலும் இந்த தொழில் அதிக லாபம் கிடைக்கும்.
மூலப்பொருட்கள்:
இந்த Rubber Band Making தொழிலுக்கு மூலப்பொருட்கள் என்று பார்த்தால் கலர் ரப்பர் பொடி மற்றும் Rubber Band Cutting Machine தான்.
இதையும் படியுங்கள்=> காலத்திற்கும் நஷ்டம் ஏற்படாத ஒரே தொழில்
இந்த மெஷினின் விலை அதன் மாடலை பொறுத்து மாறுபடும். இந்த மெஷினின் ஆரம்ப விலை ரூபாய் 55,000 ஆகும். இந்த மெஷினை பயன்படுத்தி 1 மணிநேரத்துக்கு 20 கிலோ ரப்பர் பேண்ட் வரைக்கும் தயாரிக்கலாம்.
இந்த மெஷின் வாங்கும் இடத்திலேயே இதனை எவ்வாறு பயன்படுத்தவேண்டும் என்ற பயிற்சியும் அளிக்கப்படும். மேலும் எந்த அளவுகளில் கலர் ரப்பர் பொடியை சேர்க்க வேண்டும் என்பது பற்றியும் பயிற்சி அளிக்கபடுகிறது.
மேலும் மெஷினுடனே இந்த ரப்பர் பேண்ட் தயாரிக்க தேவையான மற்ற மூலப்பொருட்கள் அனைத்தும் அளிக்கபடுகிறது. அதனால் நீங்கள் எளிதாக ரப்பர் பேண்ட் தயாரித்துவிடலாம்.
இதையும் படியுங்கள்=>இந்த தொழிலை மட்டும் ஆரம்பித்து பாருங்கள் நீங்கள் எதிர்பார்த்ததை விட அதிக லாபத்தை அளிக்கும்..!
விற்பனை செய்யும் முறை:
பொதுவாக கடைகளில் தோராயமாக 1 கிலோ ரப்பர் பேண்ட் ரூபாய் 180 – 200 வரைக்கும் விற்கப்படுகிறது. தோராயமாக ஒரு நாளைக்கு நீங்கள் 200 கிலோ ரப்பர் பேண்ட் தயாரிக்கிறீர்கள் என்றால் ரூபாய் 36,000 – 40,000 வரைக்கும் லாபம் பெறலாம்.
அதனால் இந்த Rubber Band Making தொழில் உங்களுக்கு ஏற்றதாக இருந்தால் இந்த தொழிலை தொடங்கி வாழ்க்கையில் முன்னேறுங்கள்.
இதையும் படியுங்கள்=> முதலீடு 600 மட்டும் போதும் தினமும் 2000 ரூபாய் வரை லாபம் பார்க்கலாம்
இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில் போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | siru tholil ideas in tamil |