மாதம் 70000 வீட்டில் இருந்தபடியே சம்பாதிக்கலாம் இந்த தொழிலை தொடங்கினால்..!

Advertisement

மாதம் 70 ஆயிரம் சம்பாதிக்கலாம் இந்த தொழிலை தொடங்கினால்..! SBI ATM Franchise Business Ideas In Tamil..!

SBI ATM Franchise Business Ideas In Tamil – புதிதாக தொழில் தொடங்க விரும்பும் ஆண், பெண் இருவருக்கும் அன்பு வணக்கம்.. இன்று நாம் ஒரு அருமையான தொழில் வாய்ப்பை பற்றி தான் தெரிந்து கொள்ள போகிறோம். அதாவது SBI வங்கியின் ATM மூலமாக நீங்கள் மாதம் மாதம் 70 ஆயிரம் முதல் 1.50 லட்சம் வரை சம்பாதிக்கலாம். அதுவும் வீட்டில் இருந்தபடியே. இந்த தொழில் வேறு ஒன்று இல்லை SBI ATM Franchise தொழில் தான். இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான SBI வங்கி வீட்டில் இருந்தப் படியே பணம்  சம்பாதிக்கும் தொழில் வாய்ப்பை வழங்குகிறது. சரி இந்த தொழில் தொடங்க என்ன தேவைப்படும், எப்படி இந்த தொழிலை ஆரம்பிப்பது, எவ்வளவு முதலீடு செய்யவேண்டியதாக இருக்கும் போன்ற தகவல்களை இப்பொழுது நாம் படித்தறியலாம் வாங்க.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

விண்ணப்பிக்க தேவையான ஆவணங்கள் – SBI ATM Franchise Business Ideas In Tamil:

இந்த தொழிலை நீங்கள் உடனேயே ஆரம்பித்துவிட முடியாது. முதலில் நீங்கள் SBI வங்கி கான்ட்ராக்ட்-டம் கொடுத்து வைத்துள்ளனர் ஆக அவர்கள் மூலமாக தான் நீங்கள் இந்த SBI ATM Franchise தொழிலுக்கு விண்ணப்பிக்க வேண்டும். அவர்கள் யார் என்றால் Tata Indicash, Muthoot ATM, India One ATM ஆகியவர்கள் SBI ATM Franchise-ஐ வழங்குகிறார்கள். ஆக அவர்களை நாடி இந்த தொழிலை தொடங்கலாம். அதற்கு என்னென்ன ஆவணங்கள் தேவைப்படும் என்று கீழ் பார்க்கலாம்.

  • பான் கார்டு
  • ஆதார் கார்டு அல்லது வாக்காளர் அடையாள அட்டை
  • மின் கட்டண ரசீது
  • ரேஷன் கார்டு மற்றும் பாஸ்போர்ட்
  • 5பாஸ்போர்ட் அளவு புகைபடங்கள் 4
  • ஜிஎஸ்டி எண்
  • வருமான சான்றிதழ்
  • KYC Update செய்ய வேண்டியதாக இருக்கும்
  • NOC சான்றிதழ் தேவைப்படும்

மேல் கூறப்பட்டுள்ள அனைத்து ஆவணங்களும் இந்த SBI ATM Franchise தொழிலுக்கு விண்ணப்பிக்க தேவைப்படும் ஆவணங்கள் ஆகும்.

இடம்:

நீங்கள் SBI வங்கியின் ATM இயந்திரத்தை அமைக்க வேண்டும் என்றால் 50 சதுர அடி முதல் 80 சதுர அடி இடம் இருக்க வேண்டும். அந்த இடத்தில் கட்டப்படும் கட்டிடமானது உறுதியான கான்கீரிட் ஆக இருத்தல் வேண்டும். மேலும் 100 மீட்டருக்குள் வேறு எந்த ATM-மும் இருக்க கூடாது.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
ஒரு மாதத்திற்கு லட்ச கணக்கில் சம்பாதிக்க இந்த ஒரு தொழில் போதும்..!

விதிமுறைகள்:SBI ATM Franchise

இவ்வாறு ATM அமைக்கும்போது கண்டிப்பாக ஒரு நாளைக்கு 300 Transactions நடக்கும் என்று நீங்கள் உத்தரவாதம் அளிக்க வேண்டும். ஆக நீங்கள் வைக்க கூடிய ATM மக்கள் அதிகம் உள்ள இடத்தில் தான் வைக்க வேண்டும்.

நீங்கள் வைக்க கூடிய அந்த ATM-ற்கு ஒரு நாளுக்கு 1K வாட்ஸ் மின்சாரம் கண்டிப்பாக இருக்க வேண்டும். அதற்கு கீழ் இருக்க கூடாது. மேலும் 24 மணி நேரம் அந்த ATM-ற்கு மின்சாரம் வழங்கப்பட வேண்டும்.

மேலும் நீங்கள் அமைக்க இருக்கும் ATM இயந்திரத்திற்கு CCTV கேமரா கண்டிப்பாக பொறுத்த வேண்டும். அதேபோல் AC, செக்கூரிட்டி வைத்திருக்க வேண்டும்.

இந்த தொழிலை தொடங்க நீங்கள் குறைந்தபட்சம் நீங்கள் 5 வருடம் Agreement போட வேண்டியதாக இருக்கும்.

முதலீடு:

இந்த SBI ATM Franchise தொடங்குவதற்கு உங்களுக்கு எவ்வளவு முதலீடு தேவைப்படும் என்றால் குறைந்தபட்சம் 2 லட்சம் முதல் 5 லட்சம் ரூபாய் வரை முதலீடாக தேவைப்படும். இவற்றில் 2 லட்சம் ரூபாய் உங்களுக்கு திருமப கிடைத்துவிடும்.

வருமானம்:

ஒரு Transactions -க்கு 8 ரூபாய் உங்களுக்கு கமிஷன் வழங்கப்படும். மற்ற Transactions-ஆன Mini Statement, Balance Enquiry, Password Change, Other Activities இவைகளை Non Cash Transactions என்பார்கள் இதற்கு 2 ரூபாய் கமிஷன் வழங்கபடுகிறது. ஒரு நாளுக்கு 300 Transactions நடந்தால் உங்களுக்கு ஒரு மாதத்திற்கு 70 ஆயிரம் வருமானம் கிடைக்கும்.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
இன்றும் சரி வருங்காலத்திலும் சரி கைநிறைய சம்பாதிக்கலாம்..! அப்படி ஒரு மவுஸ் இந்த தொழிலுக்கு இருக்கு..!

இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில் போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> siru tholil ideas in tamil
Advertisement