சீசன் தொழில் செய்து நல்ல லாபம் அடையலாம் 20000 முதலீட்டில் 50000 வரை லாபம் பார்க்க முடியும்

Advertisement

லாபம் தரும் தொழில்கள்

அனைத்து அன்பும் பண்பும் பாசமும் நேசமும் கொண்ட நல்லுறவுகளுக்கும் வணக்கம்..! பொதுவாக சில தொழில்களை செய்தால் என்ன லாபம் கிடைக்கும் என்று யோசனை இருக்கும். சீசன் தொழில்கள் என்று சில தொழில்கள் உள்ளது. அதனை செய்து லாபம் அடைந்திருக்குகிறீர்களா? இது போன்ற சீசன் தொழில் செய்வதனால் நல்ல லாபம் பார்க்க முடியும். அது என்னென்ன தொழில்கள் என்று இந்த பதிவின் வாயிலாக தெரிந்துகொள்ளலாம். அதில் உங்களுக்கு ஏற்ற தொழிலை செய்து லாபத்தை அடைந்துவிடுங்கள்.

துணிக்கடை தொழில்:

துணி கடை என்பது எப்போதும் லாபம் கிடைக்கும். ஆனால் அந்த அளவிற்கு அந்த கடைகளை பற்றி எதுவும் எனக்கு தெரியாது என்பதனால் சில விதமாக துணிகளை மட்டும் மொத்தமாக வாங்கி வந்து சின்னதாக கடையை வைத்து அதில் தொழில் செய்யலாம். உதாரணமாக சொல்லப்போனால் நைட்டி, பூனம் புடவை, இதுபோன்ற துணிகளை வாங்கி வந்து விற்பனை செய்யலாம்.

இந்த தொழிலை வீட்டிலிருந்தும் செய்யலாம் இல்லையென்றால் கடை வைத்தும் செய்யலாம். இதற்கு முதலீடு உங்கள் கடை வைக்கும் இடத்தை பொறுத்து முதலீடு செய்ய வேண்டியதாக இருக்கும். கூட்டம் அதிகம் கூடும் இடமாக இருந்தால் 20,000 ரூபாய்க்கு மேல் முதலீடு செய்யலாம்.

பலகார கடைகள்:

நாம் இருப்பது முன் இருந்த காலம் அல்ல இது வேற காலம். யாரும் தீபாவளிக்கு வீட்டில் பலகாரம் செய்து சாமி கும்பிடுவது இல்லை. அனைவருமே கடைகளில் தான் வாங்கி சாமி கும்பிடுவார்கள். அதற்கு காரணம் வீட்டில் அனைவருமே வேலைக்கு செல்வது தான். பலகாரம் செய்ய நேரம் இல்லாத காரணத்தினால் கடையில் வாங்கி கொள்வார்கள்.

அதனை நமக்கு சாதகமாக அதில் சுவை தரம் இருக்குமா என்று கேட்டால் தெரியாது. நாமும் புதியதாக கடையை ஆரம்பிக்கலாம். அதில் சில நாட்களில் தீபாவளி வர போகிறது ஆக தீபாவளிக்கு வாங்கும் அனைத்து பலகாரங்களையும் செய்து விற்பனை செய்யலாம்.

உதாரணமாக: முறுக்கு, அதிரசம், லட்டு, தேங்காய் பாறை போன்ற பலகாரங்களை தவிர நிறைய பலகாரங்கள் உள்ளது அதையும் செய்து விற்பனை செய்யலாம். இதிலும் உங்களால் நல்ல லாபம் பார்க்க முடியும்.

வேட்டி கடை:

தீபாவளி என்றால் முதலில் குழந்தைகள் கேட்பது வேட்டி தான். ஆனால் இது அனைத்து ஊர்களிலும் தினமும் இருக்குமா என்று கேட்டால் கிடையாது எப்போதும் இருக்க வாய்ப்புகள் குறைவு. அதனால் தீபாவளி வந்து விட்டால் நீங்கள் வேட்டி கடையை ஆரம்பித்து விடுங்கள். இதில் முதலீடு போட்டால் எப்போதும் வேண்டுமாலும் லாபம் அடைய முடியும். இதில் போட்ட காசு எப்போது வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளலாம்.

வேட்டி என்பது வீனா போக வாய்ப்புகள் குறைவு. இதில் மழையில் நனைந்தாலும் அதனை வெயிலில் காய வைத்து விற்பனை செய்ய முடியும். இது விரைவில் கேட்டு போக வாய்ப்புகள் குறைவு. இந்த தொழில் எவ்வளவு வேண்டுமானாலும் முதலீடு செய்யலாம்.

பழக்கடை தொழில்: 

இந்த பொருட்களை மக்கள் அனைவருக்கும் எப்போதும் விரும்பி சாப்பிடக்கூடிய ஒன்றாகும். இருந்தாலும் நாம் பொங்கல், தீபாவளி, ஆடிப்பெருக்கு, ஆயுத பூஜை, போன்ற நாட்களில் ஆரம்பித்தால் நல்ல லாபம் கிடைக்கும். வாழைதாரு, கரும்பு போன்றவற்றை வாங்கி வந்து விற்பனை செய்தால் நல்ல லாபம் கிடைக்கும். அதனால் இந்த தொழில் உங்களுக்கு எந்த தொழில் செய்தால் நல்லதோ அதனை மட்டும் செய்து நல்ல லாபத்தை அடைந்திடுங்கள்.

தீபாவளிக்கு இந்த பிஸ்னஸ் மட்டும் செய்யுங்கள் வருமானம் சும்மா தாறுமாறா இருக்கும்

இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில் போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> siru tholil ideas in tamil 2022
Advertisement