இந்த தொழிலுக்கான லாபத்தை ஒரு முறை யோசித்து பார்த்தால் போதும் இப்போதே இந்த தொழிலை செய்வீங்க..!

Advertisement

Small Business But Big Profit

மனிதர்களாக பிறந்த அனைவருக்கும் நிறைய கடமைகள் மற்றும் அன்றாட தேவைகள் என நிறைய இருக்கும். சிலர் இவற்றை எல்லாம் கருத்தில்கொண்டு ஆரம்ப காலத்தில் யோசித்து ஒரு சுயதொழில் செய்து வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்று நினைப்பார்கள். ஆனால் சிலர் என்ன சுயதொழில் செய்வது என்று இன்னமும் யோசித்து கொண்டே தான் இருக்கிறார்கள். ஏனென்றால் நாம் செய்யும் தொழில் பெரிய அளவில் தான் இருக்க வேண்டும் என்று யோசிப்பதை விட சிறிய அளவிலான தொழிலை கூட செய்து பெரிய அளவில் லாபம் பெறுவது என்று நாம் யாரும் நினைப்பது இல்லை. ஆகவே இன்று உங்களுக்கு பயனளிக்கும் வகையில் சிறிய அளவிலான தொழிலை செய்து பெரிய அளவில் லாபம் பெறுவது என்று தெரிந்துக்கொள்ள போகிறோம்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே: https://bit.ly/3Bfc0Gl

சுயதொழில் என்ன செய்யலாம்:

ஆரம்ப காலத்தில் இருந்து இந்த தொழிலுக்கான டிமாண்ட் என்பது சிறிதளவும் குறையாமல் அதிகரித்து கொண்டே இருக்கிறது. ஆகாயல் இன்று Nannari Sarbath Making Business பற்றி தான் பார்க்கப்போகிறோம்.

இந்த தொழில் பலபேர் செய்து கொண்டிருந்தாலும் கூட அதில் எப்படி அதிகமான லாபம் மற்றும் வருமானம் பெறலாம் என்று தெரிந்துக்கொள்வோம் வாருங்கள்.

தேவையான முதலீடு:

நீங்கள் Nannari Sarbath Making Business செய்ய வேண்டும் என்றால் அதற்கு தோராயமாக 1,000 ரூபாய் முதலீடு தேவைப்படும்.

தேவைப்படும் மூலப்பொருள்:

  1. சர்க்கரை- 600 கிராம் 
  2. சிட்ரிக் ஆசிட்- 5 கிராம் 
  3. நன்னாரி Essence- 15 மில்லி 
  4. Food Color Powder – சிறிதளவு 
  5. தண்ணீர்- 300 மில்லி 
  6. பாட்டில்

இந்த மூலப்பொருட்கள் அனைத்தும் நன்னாரி சர்பத் தயாரிக்கும் இடத்திலேயே மொத்தமாக வாங்கி கொள்ளலாம்.

தேவைப்படும் இடம்:

உங்களுடைய வீட்டில் சிறிய பகுதியில் 10×10 இடம் மட்டும் இருந்தால் போதும். நீங்கள் தாராளமாக இந்த தொழிலை செய்யலாம்.

இதையும் படியுங்கள்⇒ இந்த தொழிலுக்கு இவ்வளவு Profit ஆ.! அப்படி என்ன தொழில் தெரிஞ்சுக்கோங்க

How to Start Business From Home:

 how to start business from home in tamil

நீங்கள் நன்னாரி தொழில் செய்வதற்கு மேலே எடுத்துவைத்துள்ள பொருட்கள் அனைத்தும் 1 லிட்டர் நன்னாரி சர்பத் தயாரிப்பதற்கான மூலப்பொருட்கள் ஆகும்.

இப்போது ஒரு பாத்திரத்தில் 300 மில்லி தண்ணீர் ஊற்றிக்கொண்டு அதில் சர்க்கரை சேர்த்து அடுப்பில் நன்றாக கொதிக்க விடுங்கள். அதன் பிறகு அடுப்பில் இருக்கும் பொருட்களுடன் எடுத்துவைத்துள்ள சிட்ரிக் ஆசிட்டை ஊற்றி நன்றாக கலந்து விடுங்கள்.

அடுத்து அடுப்பில் உள்ள பொருட்கள் அனைத்தும் லேசாக சூடானதும் அதனை ஒரு காட்டன் துணியில் ஊற்றி வடிகட்டி நன்றாக 20 நிமிடம் ஆறவைத்து கொள்ளுங்கள்.

20 நிமிடம் கழித்த பிறகு ஒரு சின்ன பாத்திரத்தில் கலந்து வைத்துள்ள சர்க்கரை பாகு சிறிதளவு, Food Color Powder சிறிதளவு மற்றும் நன்னாரி Essence 15 மில்லி இவை அனைத்தையும் சேர்த்து நன்றாக கலந்து விடுங்கள்.

கடைசியாக சிறிய பாத்திரத்தில் கலந்து வைத்துள்ள நன்னாரி சர்பத்தை பெரிய பாத்திரத்தில் சர்க்கரை பாகு இருப்பதில் ஊற்றி மீண்டும் ஒருமுறை கலந்து கொள்ளுங்கள். அவ்வளவு தான் எளிமையான முறையில் நன்னாரி சர்பத் தயாராகிவிட்டது.

பேக்கிங் செய்தல்:

தயார் செய்துவைத்துள்ள நன்னாரி சர்பத்தை 1/2 லிட்டர் மற்றும் 1 லிட்டர் பாட்டில்களில் பேக்கிங் செய்து கொள்ளுங்கள்.

விற்பனை செய்ய வேண்டிய இடம்:

 சுயதொழில் என்ன செய்யலாம்

பெரிய மற்றும் சிறிய ஜூஸ் கடை, மளிகை கடை, Department ஸ்டோர், Shapping மால், Wholesale கடை ஆகிய இடங்களில் விற்பனை செய்யலாம்.

வருமானம்:

மார்க்கெட்டில் 1/2 லிட்டர் நன்னாரி சர்ப்பத்தின் விலை 90 ரூபாய் என்றும் மற்றும் 1 லிட்டர் நன்னாரி சர்ப்பத்தின் விலை 190 ரூபாய் என்றும் தோராயமாக விற்பனை செய்யப்படுகிறது.

ஒரு நாளைக்கு நீங்கள் 1/2 லிட்டர் நன்னாரி சர்பத்தில் 20-ம் மற்றும் 1 லிட்டர் பாட்டிலில் 20-ம் தோராயமாக விற்பனை செய்தால் 5,600 ரூபாய் வரை வருமானம் பெற முடியும்.

இதையும் படியுங்கள்⇒ எப்போதும் வருமானம் தருகின்ற ஒரே தொழில் இதை மட்டும் தொடங்கி பாருங்கள்..!

இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில் போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> siru tholil ideas in tamil
Advertisement