யாரும் நினைத்து பார்க்க முடியாது அளவிற்கு வருமானம் தரக்கூடிய இந்த தொழிலை சும்மா செஞ்சு பாருங்கள்..!

Advertisement

Small Business But High Income

நாம் எப்போதும் யாரும் செய்யாமல் இருக்கும் தொழிலை தான் செய்ய வேண்டும் என்ற அவசியம் இல்லை. ஏனென்றால் இப்போது மக்கள் அதிகமாக பயன்படுத்தும் பொருள் எதுவென்று நாம் தெரிந்துக்கொண்டு அந்த தொழிலை கூட செய்யலாம். இதன் அடிப்படையில் நாம் பார்க்கும் போது இன்றைய காலத்தில் அதிக டிமாண்ட் உள்ள பொருட்கள் ஏராளமாக உள்ளது. அவற்றில் ஏதாவது ஒன்றை தேர்வு செய்து அதில் மற்றவர்களை விட அதிகமான லாபத்தை பெறுவது எப்படி என்று மட்டும் யோசித்தால் போதும் நீங்கள் தான் அந்த தொழில் ராஜாவாக இருக்க முடியும். அப்படிப்பட்ட ஒரு அருமையான தொழிலை பற்றி தான் இன்றைய வியாபாரம் பதிவில் தெரிந்துக்கொள்ள போகிறோம்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

லாபகரமான தொழில்:

லாபகரமான தொழில்

வருடம் என்பது அதிகரித்து கொண்டே போனாலும் கூட ஒரு சில பொருளுக்கான தேவை என்பது கொஞ்சம் கூட குறையாமல் அப்படியே இருக்கும். அந்த வகையில் பெண்கள் அதிகம் பயன்படுத்து கூடிய ஒரு பொருள் என்றால் அது Hand Bag தான்.

அதுபோல Hand Bag இல்லாமல் பெண்கள் வீட்டை விட்டு வெளியே செல்வதே இல்லை. ஆகையால் இன்று Hand Bag Business பற்றி தான் தெரிந்துக்கொள்ள போகிறோம்.

தேவைப்படும் முதலீடு:

நீங்கள் Hand Bag Business-ஐ தொடங்க வேண்டும் என்றால் அதற்கு முதலில் தோராயமாக 20,000 ரூபாய் முதலீடு இருந்தால் மட்டும் போதும்.

தேவைப்படும் மூலப்பொருள்:

இந்த தொழிலுக்கான மூலப்பொருள் என்று பார்த்தால் அது Hand Bag மட்டும் தான். ஆகையால் நீங்கள் அந்த Hand Bag-ஐ மொத்தமாக Hand Bag தயாரிக்கும் இடம் அல்லது Wholesale முறையில் வாங்கி கொள்ளலாம்.

தேவைப்படும் இடம்:

Hand Bag Business-ஐ தொடங்குவதற்கு ஒரு நடுத்தர அளவில் உள்ள கடை மக்கள் நடமாட்டம் உள்ள இடத்தில் தேவைப்படும். அதனால் கடை வைக்கும் இடத்தை கவனமாக தேர்வு செய்ய வேண்டும்.

இதையும் படியுங்கள்⇒ தலைமுறை தலைமுறையாக நஷ்டம் இல்லாத தொழில் என்றால் அது இதாங்க..!

How to Start Handbag Business:

how to start handbag business in tamil

நீங்கள் Hand Bag வாங்க செல்வதற்கு முன்பாக அதில் நிறைய மாடல், நிறம் மற்றும் அளவு இருப்பதால் அதில் எதை வாங்க வேண்டும் என்பதை முதலில் தேர்வு செய்து கொள்ள வேண்டும். ஏனென்றால் இந்த வியாபாரத்திற்கு அது மிகவும் முக்கியமான ஒன்று.

மேலும் இந்த தொழிலை நீங்கள் இரண்டு விதமாக செய்யலாம்.

  1. நீங்கள் மொத்தமாக Wholesale கடை அல்லது Hand Bag தயாரிக்கும் இடத்தில் வாங்கி கொண்டு பின்பு அதனை மற்ற கடைகளுக்கு நீங்கள் நேராக சென்று ஆர்டர் எடுத்து விற்பனை செய்யலாம்.
  2. இரண்டாவது முறை என்னவென்றால் நீங்களே சொந்தமாக கடை ஆரம்பித்து விற்பனை செய்யலாம்.

ஆகையால் இதையும் நீங்கள் தெளிவாக ஆலோசித்து முடிவு எடுத்துகொள்ள வேண்டும்.

விற்பனை செய்ய வேண்டிய இடம்:

Bag கடை, ஷாப்பிங் மால் மற்றும் ஒரு சில ஜவுளி கடையிலும் கூட Hand Bag விற்கும் ஆகையால் அங்கும் நீங்கள் இந்த Bag-னை விற்பனை செய்யலாம்.

இதையும் படியுங்கள்⇒ எந்த காலத்திலும் இந்த தொழிலுக்கான மவுஸ் குறையாது

வருமானம்:

இதில் வருமானம் என்று பார்த்தால் நீங்கள் விற்பனை செய்யும் முறையை பொறுத்து தான் அமையும். ஏனென்றால் இதில் அளவு மற்றும் மாடல் என்பது ஒன்றுடன் ஒன்று முற்றிலுமாக வேறுபட்டு காணப்படும். ஆனால் லாபம் மற்றும் வருமானம் என்று பார்த்தால் நீங்கள் எதிர்பார்த்ததை விட அதிக அளவு இருக்கும்.

இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில் போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> siru tholil ideas in tamil
Advertisement