ரூ.10,000/- முதலீட்டில் அருமையான சுயதொழில்..!

ரூ.10,000/- முதலீட்டில் அருமையான சுயதொழில்..! Small Business Ideas in Tamil at Home..! 

Small Business Ideas in Tamil at Home:- புதிதாக தொழில் துவங்கும் அனைத்து நண்பர்களுக்கும் வணக்கம். குறைந்த முதலீட்டில் வீட்டில் இருந்து எந்தமாதிரியான தொழில் செய்யலாம் என்று யோசிக்கும் நபர்களுக்கு இந்த பதிவு. அதாவது வீட்டில் ஒய்வு நேரங்களில் இந்த தொழிலை செய்து வருமானம் பெற முடியும். அதாவது புக் பைண்டிங் பிசினெஸ் தொழில் பற்றித்தாங்க தெரிஞ்சிக்கபோறம். புக் பைண்டிங் என்றால் ட்ரெடிஷனல் மாதிரி கலர் பேப்பர், பசை போன்றவற்றை பயன்படுத்தி புக் பைண்டிங் பண்ற தொழில் இல்லைங்க. இது ட்ரெண்டிங்கில் உள்ள comb binding தொழில். இந்த comb binding தொழில் செய்வதற்கு இயந்திரம் அவசியம் தேவைப்படும். ஆனால், மின்சாரம் தேவையில்லைங்க. எனவே குறைந்த முதலீட்டில் வீட்டிலேயே செய்யக்கூடிய இந்த comb binding தொழில் எப்படி செய்யலாம் என்று இந்த பதிவில் தெளிவாக படித்தறியலாம் வாங்க.

100 ரூபாய் முதலீட்டில் அருமையான சுயதொழில்..!

10000 முதலீட்டில் தொழில் – Small Business Ideas in Tamil at Home

இடம்:-

இது வீட்டிலேயே செய்யக்கூடிய தொழில் என்பதால் ஒரு சிறிய அறை இருந்தால் போதுமானது. கடை பிடிக்கவேண்டும் என்ற அவசியம் இல்லை.

மூலப்பொருட்கள்:-

இந்த தொழில் துவங்க தேவைப்படும் மூலப்பொருட்கள் என்றால் அது Spiral Binding Sheet, A4 Sheet மற்றும் comb binding spines இவை மூன்றும் அவசியம் தேவைப்படும். இதனை தாங்கள் ஆன்லைன் ஷாப்பிங் ஸ்டோரிலும் ஆர்டர் செய்து பெற்றுக்கொள்ளலாம்.

இயந்திரம்:-

comb binding machine

இந்த தொழில் துவங்க comb binding machine அவசியம் தேவை. இந்த இயந்திரம் அனைத்து ஆன்லைன் ஷாப்பிங் ஸ்டோரிலும் மிக குறைந்த விலையில் அதாவது 4,500 ரூபாயில் இருந்து 25,000 ரூபாய் வரை கிடைக்கின்றது. எனவே தங்களுக்கு எந்த விலையில் இயந்திரம் வாங்க வேண்டும், என்று விரும்புகின்றிர்களோ அந்த விலைக்கு ஆர்டர் செய்து இயந்திரத்தை பெற்று கொள்ளலாம்.

இயந்திரத்தை எப்படி இயக்க வேண்டும்:

comb binding book

முதலில் தேவையான A4 Sheet-ஐ எடுத்துக்கொள்ளுங்கள். அதன் பிறகு A4 Sheet-யின் முன் மற்றும் பின் பக்கங்களில் Spiral Binding Sheet-யினை  வைக்க வேண்டும். பின் comb binding machine-யில் இந்த A4 Sheet-ஐ வைத்து துளையிட வேண்டும். அதாவது  A4 Sheet-யின் ஒரு பக்கம் உள்ள ஓரம் முழுவதும் பஞ்சிங் செய்ய வேண்டும்.

இயந்திரத்தின் மற்றொரு பகுதில் comb binding spines-ஐ செட் செய்வதற்கு புஷ் பட்டன் இருக்கும், எனவே அவற்றில் பஞ்சிங் செய்த A4 Sheet-ஐ வைத்து comb binding spines-ஐ செட் செய்து கொள்ளுங்கள். அவ்ளோதான் வேலை முடிந்தது. இவ்வாறு தாங்கள் comb binding செய்து விற்பனை செய்வதன் மூலம் வீட்டில் இருந்தபடியே வருமானம் பார்க்க முடியும்.

இயந்திரத்தின் விலை 15,000/- மாத வருமானம் 1 லட்சம்..!

சந்தை வாய்ப்பு:-

புத்தக கடைகள், பெரிய பெரிய நிறுவங்கள், கல்லூரிகள், பள்ளிகள், பயிற்சி நிலையங்கள் போன்ற நிறுவனங்களுடன் தொடர்பு கொண்டு அவர்களிடம் ஆர்டர் பெற்று தாங்கள் இது போன்று comb binding தயார் செய்து விற்பனை செய்யலாம். இதன் மூலம் எப்பொழுதும் வருமானம் இருந்து கொண்டே இருக்கும்.

அதேபோல் இது போன்று comb binding குறைந்த விலையில் தயார் செய்து விற்பனை செய்கின்றிர்கள் என்று விளம்பரம் செய்யலாம். அதாவது சமூகவலைத்தளங்களில் விளம்பரம் செய்யலாம் இதன் மூலமும் தங்களுக்கு ஆர்டர்கள் கிடைக்க ஆரம்பிக்கும்.

முதலீடு:-

Small Business Ideas in Tamil at Home – முதலீடு பொறுத்தவரை இயந்திரம் வாங்க 6000 தேவைப்படும். மற்றபடி தங்களின் தயாரிப்புக்கு தகுந்தது போல் மூலப்பொருட்களை தேவைப்படும். எனவே மூலப்பொருட்களுக்கென்று தனியாக முதலீடு செய்ய வேண்டியதாக இருக்கும். எனவே இந்த தொழில் துவங்க குறைந்தபட்சம் 10 ஆயிரம் முதலீடு தேவைப்படும்.

 

இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில் (Siru Tholil Ideas in Tamil) போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> siru tholil ideas in tamil