தினமும் 4,000 ரூபாய் சம்பாதிக்கும் அருமையான தொழில்..!

Advertisement

குறைந்த முதலீடு அதிக லாபம்

சொந்த தொழில் செய்ய வேண்டும் என்று நினைக்கும் ஒவ்வொருவருக்கும் அன்பார்ந்த வணக்கங்கள்..! ஒருவரிடம் சென்று வேலை பார்க்கும் போது திருப்தியாக இருக்காது. இன்னொரு நிறுவனத்திடம் என்ன தான் உழைத்தாலும் அதற்கான அங்கீகாரம் கிடைக்க வருடங்கள் ஆகும். ஆனால் சொந்த தொழிலில் நாம் உழைத்தால் அதற்கான முழு பரிசு மற்றும் லாபம் நமக்கு மட்டும் தான் கிடைக்கும். சொந்தமாக தொழில் செய்ய வேண்டும் நினைப்பவர்களுக்கு இந்த பதிவு பயனுள்ளதாக இருக்கும்.

இதையும் படியுங்கள் ⇒ வீட்டிலிருந்து 3 மணி நேரம்..! அருமையாக சம்பாதிக்க கூடிய தொழில்..!

என்ன தொழில் செய்யலாம்:

என்ன தொழில் செய்வது என்று யோசிக்கிறீர்களா..! சொந்த தொழில் செய்தால் முதலீடு அதிகமாக இருக்குமோ..! முழு நேரம் அதிலே செலவிடனுமா..! என்றாலெல்லாம் நினைக்காதீர்கள். இந்த பதிவில் சொல்ல போவது ஈஸியான தொழில் தான். இந்த தொழிலை நீங்கள் முழு நேரம் செய்ய தேவையில்லை. காலை மற்றும் மாலை நேரங்களில் மட்டும் செய்தாலே போதுமானது.

நீங்கள் தோசை சுடுவதில் வல்லவர் என்றால் இந்த தொழிலை தாராளமாக செய்யலாம். என்ன தோசை தொழிலா என்று நினைக்காதீர்கள்..! நீங்கள் வேற எதுவுமே செய்ய வேண்டாம் தோசையை மட்டும் செய்தாலே போதும். அந்த தோசைக்கு தேவையான தேங்காய் சட்னி, தக்காளி சட்னி, சாம்பார், கொத்தமல்லி சட்னி, புதினா சட்னி, பூண்டு சட்னி போன்றவை இருந்தாலே போதுமானது.

தோசை என்று சொன்னவுடன் மாவு தோசையை மட்டும் நினைத்து கொள்ளாதீர்கள். ஒரே ஒரு தோசையை மட்டும் செய்தால் போதாது. வெங்காய தோசை, முட்டை தோசை, மசாலா தோசை, ரவா தோசை, பொடி தோசை, கோதுமை தோசை, கேரட் தோசை, பிரட் தோசை என்று இன்னும் தோசை வகை நிறையை இருக்கிறது.

இந்த தோசைகள் உங்களுக்கு எடுத்துக்காட்டாக சொல்லப்பட்டிருக்கிறது.  நீங்கள் எந்த இடத்தில் கடை போடுகிறீர்களோ அந்த இடத்தில் உள்ள ஹோட்டலில் அதிகம் என்ன தோசை மக்கள் சாப்பிடுகிறார்கள் என்று தெரிந்துகொள்ள வேண்டும். அதுமட்டுமில்லாமல் அந்த ஹோட்டலில் போடாத தோசைகளையும் நீங்கள் போடலாம்.

தொழில் செய்ய இடம்:

இந்த தொழிலை நீங்கள் தனி கடையாகவும் வைக்கலாம். இல்லையென்றால் தள்ளுவண்டி கடையாகவும் வைக்கலாம். உங்களின் முதலீட்டிற்கு தகுந்தது போல் கடையை  வைத்து கொள்ளலாம்.

வருமானம் எப்படி.?

நீங்கள் தோராயமாக  காலையில் 30 நபர்கள் தோசை சாப்பிடுகிறார்கள் என்றால், ஒரு நபர் 2 தோசை சாப்பிடுகிறார்கள் என்றால் 30 நபர்களும் அது போல் சாப்பிட்டால் மொத்தமாக 60 தோசை விற்கப்படும்.

தோராயமாக ஒரு தோசை 40 ரூபாய் என்றால் 60 தோசை விற்றால் 2,400 ரூபாய் கிடைக்கும். இதே போல் மாலையிலும் விற்றால் ஒரு நாளைக்கு 4,800 ரூபாய் சம்பாதிக்கலாம்.

ஒவ்வொரு தோசையை பொறுத்து விலை மாறுபடும். நீங்கள் ஆரோக்கியமாக உணவை கொடுத்தால் உங்கள் கடைக்கு தான் வாடிக்கையாளர்கள் வருவார்கள்.

இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில் போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> siru tholil ideas in tamil 2022

 

Advertisement