உங்களுடைய பெயரை வைத்து விற்பனை செய்தால் வாரம் 10,000 ரூபாய் சம்பாரிக்கலாம்

Advertisement

லாபம் தரும் சிறந்த தொழில் 

என்னுடைய அன்பு நண்பர்களுக்கு அழகான ஒரு ஹாய் எவ்வளவு தான் நாம் சம்பாரித்தாலும் நமக்கு செலவுகள் அதிகம் ஆகிறது. ஏனென்றால்  நாம் வாழ்வது கணினி உலகம் ஆகவே நம் வாழ்வு மாறிக்கொண்டுதான் போகுமே தவிர எப்போதும் கீழ் இறங்காது அதனால் நாம் வரவுகளை அதிகப்படுத்தி கொண்டே இருக்கவேண்டும் தவிர எப்போதும் குறைய கூடாது. ஆகவே நாம் வாழ்வதற்கு ஒரு தொழிலை மட்டும் நம்பி எப்போதும் இருக்க கூடாது. இது இல்லையென்றாலும் இது இருக்கிறது என்று எப்போதும் நம்பிக்கையூட்டும் வகையில் வாழவேண்டும். வாங்க இப்போது வீட்டில் free யாக இருக்கும் நேரத்தில் இந்த தொழிலை செய்து பாருங்கள்..!

Small Investment High Profit Business Ideas in Tamil:

branding and package அது என்ன தொழில் என்று அனைவரும் கேட்கலாம். இன்னொருவருடைய பொருட்களை உங்களுடைய பெயரை போட்டு அதனை பாக்கெட் செய்து விற்பனை செய்ய வேண்டும் இல்லையென்றால் செய்து கொடுக்கலாம். அதனை அவர்கள் விற்பனை செய்வார்கள். இதில் நீங்கள் முதல் உள்ளதை தேர்வு செய்து உற்பத்தி செய்பவர்களிடமிருந்து பொருட்களை வாங்கி அதனை உங்களுடைய பெயரை போட்டு பாக்கெட் செய்து  விற்பனை செய்யலாம்.

அப்படி இல்லையென்றால் பொருட்களை வாங்கி அதனை பாக்கெட் செய்து மறுமுறை அதை அவர்களிடம் கொடுத்தால் இதன் மூலம் உங்களுக்கு லாபம் கிடைக்கும்.

நான் உங்களுக்கு சொல்வது நீங்கள் வேறு தொழில் செய்தால் இரண்டாவதாக உள்ள முறையை பயன்படுத்திக்கொள்ளலாம். அப்படி இல்லை நான் இந்த தொழிலை செய்யவேண்டும் என்றால் முதலில் சொன்ன மாதிரி பாக்கெட் செய்து நீங்களே கடைகளுக்கு விற்பனை செய்யலாம் இதன் மூலம் மாதம் தோறும் நல்ல வருமானம் கிடைக்கும்.

இந்த தொழிலை செய்வதற்கு முதலீடு தேவை இல்லை..! வருமானம் லட்சத்தில் கிடைக்கும்..!

எடுத்துக்காட்டாக: 

ஒருவர் மஞ்சள் தூள் உற்பத்தி செய்கிறார் என்றால் அவர்களிடம் மொத்தமாக மஞ்சள் தூள்களை  வாங்கி  உங்கள் பெயர் கொண்ட பாக்கெட் செய்து அந்த மஞ்சள் தூள், சீலிங் மெஷின் இந்த மூன்று பொருட்கள் மட்டுமே. ஆகவே குறைந்த முதலீட்டில் நல்ல லாபம் பெற முடியும்.

இதனுடைய சிறப்பு என்னவென்றால். இது முற்றிலும் வீட்டில் இருந்து கூட  செய்யலாம்.

அதேபோல் மஞ்சள் தூள் மட்டும் செய்யவேண்டும் என்ற கட்டாயம் அல்ல அனைத்து மளிகை பொருட்களையும் செய்து தரலாம்.

அதேபோல் கடைகளுக்கும் இதுபோல் நிறைய பொருட்களை செய்து கொடுக்க உங்களிடம் ஆர்டெர் எடுப்பார்கள். அவர்களுக்கு இதேபோல் அவர்களுடைய  பெயர்களை கொண்டு. செய்து கொடுக்கலாம்.

என்ன நண்பர்களே இந்த பதிவு உங்களுக்கு உதவி அளிக்கும் என்ற நம்பிக்கையில் வேறு ஒரு தொழிலை பற்றிய பதிவுடன் உங்களை பார்க்கிறேன் நன்றி..🙏

இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில் போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> siru tholil ideas in tamil 2022
Advertisement