Start Business With Rs 1000
இன்றைய கால கட்டத்திலும் சிலரது வீட்டில் பெண்களை வெளியில் சென்று வேலை பார்க்க அனுமதிக்கப்படுவதில்லை. அவர்கள் எல்லாரும் மற்ற பெண்கள் வேலைக்கு செல்வதை பார்த்து நம்மால் வேலைக்கு போகமுடியவில்லை என்று கவலைப்படுவார்கள். நாமும் சம்பாதிக்க வேண்டும் என்று நினைப்பார்கள். ஏதவாது சுயதொழில் இருந்தால் வீட்டில் இருந்தபடியே செய்யலாம் என்று நினைப்பார்கள். அந்த வகையில் இன்றைய பதிவில் 1000 ரூபாய் முதலீட்டில் வீட்டில் இருந்தபடியே செய்யும் தொழிலை பற்றி தான் தெரிந்து கொள்ள போகின்றோம்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👇 https://bit.ly/3Bfc0Gl |
Start Business With Rs 1000:
பெண்கள் வீட்டில் இருந்தபடியே என்ன தொழில் செய்வது என்று யோசித்து கொண்டிருப்பவர்கள் இந்த பதிவு பயனுள்ளதாக இருக்கும். ஸ்னாக்ஸ் தொழிலை பற்றி தான் தெரிந்து கொள்ள போகின்றோம்.
இடம்:
இந்த தொழிலுக்கு தனியாக இடம் தேவையில்லை, எப்படி என்று யோசிக்கிறீர்களா.! நீங்கள் இதை தனி கடையாக வைக்க போவதில்லை. அதாவது நீங்கள் வடை, சம்சா, போண்டா போன்றவற்றை வீட்டில் தான் செய்ய போகிறீர்கள். அதை எப்படி விற்பனை செய்வீர்கள், எப்படி வருமானம் வரும் போன்ற கேள்விகளுக்கு பதிலை கீழே காண்போம்.
முதலீடு மற்றும் மூலப்பொருட்கள்:
இந்த தொழில் செய்வதற்கு முதலீடு என்று பார்த்தால் 1000 ரூபாய் தேவைப்படும். மூலப்பொருட்கள் என்று பார்த்தால் வடை, சம்சா, போண்டா போன்றவை செய்வதற்கு என்னென்ன பொருட்கள் தேவைப்படுகிறதோ அவற்றை வாங்கி கொள்ள வேண்டும். வேறு ஏதேனும் ஸ்னாக்ஸ் செய்ய வேண்டும் என்று நினைத்தால் அதற்கு தேவைப்படும் பொருட்களை வாங்கி கொள்ள வேண்டும்.
1000 ரூபாய் வைத்து என்ன தொழில் செய்யலாம் அதனை பற்றி பார்க்கலாம் வாங்க
தயாரிப்பு முறை:
நீங்கள் செய்கின்ற ஸ்னாக்ஸை ருசியாகவும், ஆரோக்கியமானதாகவும் செய்ய வேண்டும். ஏனென்றால் ஸ்னாக்ஸை ருசியை பார்த்து தான் வாங்குவார்கள்.
வருமானம்:
நீங்கள் செய்து வைத்துள்ள ஸ்னாக்ஸை டீ கடையில் கொடுத்து விற்பனை செய்யலாம். ஏனென்றால் நிறைய கடையில் வெறும் டீ மட்டும் தான் போடுவார்கள். அப்படி இருக்கும் போது நீங்கள் ஸ்னாக்ஸ் கொடுத்து விற்பனை செய்தீர்கள் என்றால் அவர்களுக்கும் லாபம் உங்களுக்கும் லாபம். எப்படி என்று யோசிக்கிறீர்களா.!
ஒரு வடை 7 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. அப்படியென்றால் அவர்கள் 2 ரூபாயும், உங்களுக்கும் 5 ரூபாய் தொகையை தருவார்கள். அதுபோல் நீங்கள் செய்து கொடுக்கும் ஸ்னாக்ஸ் அனைத்திற்கும் இந்த மாதிரி தான் குறிப்பிட்ட தொகையை கொடுப்பார்கள். நீங்கள் ஒரு நாளைக்கு 50 வடை, 50 சம்சா, 20 போண்டா விற்பனை செய்கிறீர்கள் என்றால் 750 ரூபாய் சம்பாதிக்கலாம். அது போல் மாதத்திற்கு வீட்டில் இருந்தபடியே 22500 ரூபாய் சம்பாதிக்கலாம்.
அடிதூள் இந்த தொழில்ல மாதம் 30,000 ரூபாய் சம்பாதிக்கலாமா
இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில் போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | siru tholil ideas in tamil |