லாபம் தரும் டிஷ்யூ பேப்பர் தயாரிப்பு தொழில்..!

tissue paper making machine

Tissue Paper Making Business Idea..!

புதிதாக தொழில் துவங்குபவர்களுக்கு ஒரு அருமையான தொழில் வாய்ப்பு, அதாவது இன்றைய பொதுநலம் பதிவில் டிஷ்யூ பேப்பர் தயாரிப்பு தொழில் பற்றி தெரிந்து தெரிந்துகொள்ளலாம். இந்த தயாரிப்பு தொழில் பொறுத்தவரை அதிகம் போட்டி இல்லாத தொழில் என்று சொல்லலாம். டிஷ்யூ பேப்பரை பொறுத்தவரை
பயன்படுத்திவிட்டு தூக்கி எறியும் பொருட்களில் டிஷ்யூ பேப்பருக்குத் தனி இடமுண்டு. அதாவது கை துடைக்க, முகம் துடைக்க என பல வகைகளில் இந்த டிஷ்யூ பேப்பர் பயன்படுகிறது. இப்போது கைக்குட்டை பதிலாக டிஷ்யூ பேப்பரை அதிகளவு பயன்படுத்துகின்றன. அதிலும் பலர் இப்பொழுது தங்கள் பைகளில் டிஷ்யூ பேப்பரை வைக்க ஆரம்பித்துவிட்டார்கள். இது தவிர, இந்தத் தொழிலில் ஈடுபட்டுள்ளவர்கள் எண்ணிக்கையும் குறைவு. எனவே, புதிதாக தொழில் துவங்க வேண்டும் என்று நினைப்பவர்கள் இந்த டிஷ்யூ பேப்பர் தயாரிப்பு தொழிலை தயக்கம் இல்லாமல் துவங்கலாம்.

சரி இந்த டிஷ்யூ பேப்பர் தயாரிப்பு தொழில் (tissue paper making Business Idea) பற்றிய சில விவரங்களை இந்த பதிவில் நாம் படித்தறியலாம்.

லாபம் தரும் டிஷ்யூ பேப்பர் தயாரிப்பு தொழில்..! Tissue Paper Making Business Idea..!

இடம்:-

இந்த டிஷ்யூ பேப்பர் தயாரிப்பு தொழில் துவங்க 10-க்கு 10 அளவு கொண்ட ஒரு சிறிய அறை இருந்தால் போதும்.

பல சுவாரசியமான செய்திகளுக்கு எங்கள் YOUTUBE" சேனல SUBSCRIBE" பண்ணுங்க: Pothunalam Youtube

இயந்திரம்:-

tissue paper making machineடிஷ்யூ பேப்பர் தயார் செய்வதற்கு மேல் படத்தில் காட்டப்பட்டுள்ள Tissue Paper Making machine அவசியம் தேவை. இந்த இயந்திரன் விலை குறைந்தபட்சம் ரூபாய் 4 லட்சத்தில் இருந்து விற்கப்படுகிறது. இந்த மிஷினை தாங்கள் ஆன்லைன் ஷாப்பிங் ஸ்டோரில் கூட ஆர்டர் செய்து பெற்று கொள்ளலாம்.

தேவைப்படும் மூலப்பொருட்கள்:-

தேவைப்படும் மூலப்பொருட்கள் என்று பார்த்தால் Jumbo Roll Paper என்ற மூலப்பொருள்தான் டிஷ்யூ பேப்பர் தயார் செய்வதற்கு பயன்படுத்துகின்றனர். இதனை தாங்கள் ஆன்லைனில் ஆர்டர் செய்து பெற்று கொள்ளலாம். Jumbo Roll Paper தரத்திற்கு ஏற்றது போல் ஒரு கிலோ ரூபாய் 50 முதல் 70 ரூபாய் வரை விற்கப்படுகிறது. இதனை தாங்கள் மொத்தமாக வாங்கிக்கொள்ளலாம்.

டிஷ்யூ பேப்பரின் வகை:-

டிஷ்யூ பேப்பர் தயாரிப்பு தொழில் பொறுத்தவரை நான்கு வகையான டிஷ்யூ பேப்பர் தயார் செய்யப்படுகிறது. அதாவது சமையல் அறைக்கு மற்றும் கேட்டரிங் பயன்படுத்தும் டிஷ்யூ பேப்பர், பேசியல் செய்வதற்கு பயன்படுத்தும் டிஷ்யூ பேப்பர், ஹேண்ட் கர்ச்சீப் ஆக பயன்படுத்தும் டிஷ்யூ பேப்பர் மற்றும் Toilet roll paper என்று நான்கு வகையான டிஷ்யூ பேப்பர் உற்பத்தி செய்யப்படுகிறது.

முதலீடு:-

இந்த தயாரிப்பு தொழில் பொறுத்தவரை இடம் வாடகை, இயந்திரம், மூலப்பொருட்கள், மின்சாரம் செலவு மற்றும் இதர செலவுகள் என்று குறைந்தபட்சம் முதலீடாக ரூபாய் 6 லட்சம் தேவைப்படும்.

அரசு வழங்கு மானியம்:-

பாரதப் பிரதமரின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம் மாநில அரசின் ‘நீட்ஸ்’ திட்டம் அல்லது பொது மானியத் திட்டம் என ஏதாவது ஒன்றில் இயந்திரம் வாங்கும் தொகைக்கு மானியம் பெற வாய்ப்பு உண்டு. இந்தத் தொழிலுக்கு நடைமுறை மூலதனமாக ஒரு மாதத்துக்கு ரூ.2.50 லட்சம் தேவைப்படும். இதற்கு தனியாக வங்கிக் கடன் கிடைக்கும்.

புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டுத் திட்டம்..!

 

சந்தைவாய்ப்பு:-

இன்றைக்கு அதிகம் பயன்படும் பொருட்களில் ஒன்றாக டிஷ்யூ பேப்பர் உள்ளது என்பதால். அதனை சின்ன ஹோட்டல் முதல் அனைத்திற்கும் பயன்படுத்துகின்றன, எனவே மார்க்கெட்டிங் செய்வதற்கு நாம் அதிகம் அலைய வேண்டிய அவசியம் இருக்காது. எனவே சிறிய மல்லிகை கடை முதல் பெரிய ஷாப்பிங் ஸ்டோரில் நேரடியாக சென்று தாங்கள் தயார் செய்த டிஷ்யூ பேப்பரை விற்பனை செய்யலாம்.

விற்பனை விவரம்:-

பேப்பர் ரோல் உற்பத்திக்குப்பிறகு பாக்கெட் என்கிற கணக்கில் கணக்கிடப்படும். இதன்படி 1 கிலோ பேப்பர் ரோலில் உற்பத்திக்குப்பின் 12 பாக்கெட்டுகள் டிஷ்யூ பேப்பர் கிடைக்கும். ஒரு பாக்கெட்டை தரத்திற்கு தகுந்தது போல் ரூபாய் 50 முதல் 150 வரை ரூபாய் வரை விற்கலாம். இதன் மூலம் மாதம் 60 ஆயிரம் வரை வருமானம் பார்க்கலாம்.

தேவைப்படும் ஆவணங்கள் – Tissue Paper Business Registration:-

  1. R.O.C
  2. Trade License
  3. Uam
  4. No Objection Certificate
  5. Sales tax
  6. Factory license
  7. I.e code registration

 

இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில் (Siru Tholil Ideas in Tamil) போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —>siru tholil ideas in tamil 2020