வீட்டில் இருந்தே தொழில் செய்ய வேண்டுமா..? அப்போ கைநிறைய லாபத்தை அள்ளித்தரும் அருமையான தொழில் இது தான்..!

Tomato Powder Making Business in Tamil

இன்றைய நிலையில் பலரும் படித்து முடித்துவிட்டு வேலை தேடிக் கொண்டிருக்கிறார்கள். அதுபோல பெண்கள் மற்றும் வீட்டில் இருந்து சொந்தமாக தொழில் செய்ய வேண்டும் என்று பலரும் நினைக்கின்றார்கள். ஆனால் சொந்தமாக தொழில் தொடங்க வேண்டும் என்று நினைத்தால் மட்டும் போதாது. அதற்கான முயற்சிகளையும் நாம் செய்ய வேண்டும். அதனால் உங்களுக்கு உதவும் வகையில் தினமும் இந்த பதிவின் வாயிலாக சிறந்த வணிக யோசனைகளை பதிவிட்டு வருகின்றோம். அந்த வகையில் இன்றைய பதிவும் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். அதனால் இந்த பதிவை முழுமையாக படித்து பயன்பெறுங்கள்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

முதலீடு:

How to start tomato powder making business at home

இந்த தொழில் செய்வதற்கு 5000 ரூபாய் வரை முதலீடு தேவைப்படும். 5000 முதலீட்டில் என்ன தொழில் செய்ய போகிறோம் என்று யோசிப்பீர்கள். அது வேறவொன்றும் இல்லை. தக்காளி பவுடர் தயார் செய்து அதனை விற்பனை செய்யும் தொழிலை பற்றி தான் கூறுகின்றோம்.

இந்த தக்காளி பவுடர் மார்க்கெட்டில் அதிகளவில் விற்பனை செய்யப்படுகிறது. தக்காளி பல ஆரோக்கிய நன்மைகளை கொண்டுள்ளது. மேலும் தக்காளி பவுடர் அழகு சாதனப் பொருட்களிலும் பயன்படுத்தப்படுகிறது. அதனால் இந்த தொழிலை வீட்டிலேயே தொடங்கி நல்ல லாபத்தை பெறலாம்.

வீட்டில் இருக்கும் இல்லத்தரசிகளுக்கு கைநிறைய லாபம் தரும் அருமையான தொழில்..!

மூலப்பொருட்கள்:

இந்த தொழில் தொடங்குவதற்கு தக்காளி தான் மூலப்பொருளாக இருக்கிறது. அதனால் சந்தையில் இருந்து தக்காளி வாங்கி கொள்ள வேண்டும். பின் பவுடர் பேக்கிங் செய்ய தேவையான கவர்கள் வாங்கி கொள்ள வேண்டும்.

Tomato Powder Making Business in Tamil: 

tomato powder

முதலில் சந்தையில் இருந்து பவுடர் தயாரிக்க தேவையான அளவு தக்காளி வாங்கி கொள்ள வேண்டும்.

பின் அதை சுத்தமாக கழுவி கொள்ளவும். பின் அதை சிறிய சிறிய துண்டுகளாக நறுக்கி கொள்ள வேண்டும். பின் நாம் நறுக்கி வைத்துள்ள தக்காளியை 3 அல்லது 4 நாட்கள் வெயிலில் காயவைக்க வேண்டும்.

தக்காளி நன்றாக காய்ந்ததும் அதை மிக்சி ஜாரில் போட்டு தூளாக அரைத்து கொள்ள வேண்டும்.

யாருமே சொல்லிருக்க மாட்டாங்க இந்த தொழிலை தொடங்க சொல்லி அப்படி என்ன தொழில் தெரியுமா அது..!

விற்பனை செய்யும் முறை:

இந்த பவுடரை கண்கவரும் பேக்கிங் கவர்களில் கிராம் அல்லது கிலோ கணக்கில் வைத்து பேக் செய்ய வேண்டும். அப்போது தான் மக்கள் இதை வாங்க முன் வருவார்கள். அதுபோல இது ஆரோக்கியமான முறையில் தயார் செய்யும் பொருள் என்பதால் இதை மக்கள் கட்டாயம் வாங்குவார்கள்.

அதுபோல இந்த கவரின் மேல் உங்கள் முகவரிகளை அச்சிட வேண்டும். அப்போது தான் மக்கள் உங்களை தொடர்பு கொள்ள வசதியாக இருக்கும்.

பின் இந்த தக்காளி பவுடரை உங்கள் பகுதியில் இருக்கும் சூப்பர் மார்க்கெட், பெரிய மால், அழகு நிலையங்கள் மற்றும் பெட்டிக் கடையில் போன்ற இடங்களில் விற்பனை செய்ய வேண்டும். அதுபோல தக்காளி பவுடர் உணவு பொருட்களில் சேர்ப்பதால் இதற்கு FSSAI உரிமம் பெற வேண்டும்.

நீங்கள் உங்களுக்கென்று ஒரு வலைத்தளம் ஆரம்பித்து இந்த தக்காளி பவுடரை ஆன்லைனில் விற்பனை செய்யலாம். 500 கிராம் தக்காளி பவுடர் ஆன்லைனில் 350 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதனால் வீட்டில் இருந்தபடியே இந்த தொழிலை செய்து நல்ல வருமானத்தை பெறுங்கள்.

இதையும் படியுங்கள்⇒லட்சக்கணக்கில் சம்பாதிக்க இந்த தொழில் ஒன்று போதும்…! காலத்திற்கும் நிலைத்து நிற்கும்..!

இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில் போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> siru tholil ideas in tamil