இந்த ஆண்டே இந்த தொழிலை செய்து முதலாளியாக மாறுங்கள்..!

Future Business Ideas

புதிதாக தொழில் தொடங்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு இந்த பதிவு பயனுள்ளதாக இருக்கும். என்ன தொழில் செய்வது, எப்படி செய்வது என்று பல யோசனைகள் இருக்கும். உங்கள் யோசனைக்கெல்லாம் பதில் சொல்லும் விதமாக இந்த பதிவு இருக்கும். இந்த தொழிலை இந்தியாவில் இதுவரை யாரும் செய்யவில்லை.  அதனால் இந்த தொழிலை நீங்கள் தாராளமாக செய்யலாம். வாங்க அது என்ன தொழில், முதலீடு, மூலப்பொருள் போன்றவற்றை தெரிந்து கொள்வோம்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே: https://bit.ly/3Bfc0Gl

Tyre Recycling Business:

Tyre Recycling Business

இந்த டயர் மறுசுழற்சி தொழில் இந்தியாவில் வளர்ந்து வரும் தொழிலாக இருக்கிறது. கழிவு டயர்களை மறுசுழற்சி செய்வதன் மூலம் கேஸ், ஆயில், ஸ்டீல், கார்பன் போன்ற பொருட்களை தயாரிக்கலாம். வாங்க இந்த தொழிலுக்கு மூலப்பொருட்கள், முதலீடு, விற்பனை போன்றவற்றை தெரிந்து கொள்வோம்.

மூலப்பொருட்கள்:

இந்த தொழிலுக்கு பழைய டயர்கள், 4 சக்கர வாகனம், 2 சக்கர வாகனம் போன்றவை தேவைப்படும். பழைய டயர்களை பட்டறைகள், பஞ்சர் கடைகள் போன்றவற்றில் இருந்து வாங்கி கொள்ளலாம்.

இதையும் படியுங்கள் ⇒ விளம்பரம் செய்தால் மட்டும் போதும்..! பணத்தை வீட்டிலிருந்து சம்பாதிக்கலாம்..!

இடம்:

இந்த தொழிலுக்கு 3000 சதுர அடி முதல் 4000 சதுர அடி வரை இடம் இருக்க வேண்டும்.

முதலீடு:

சிறிய அளவிலான டயர் மறுசுழற்சி தொழிலை தொடங்க 18 லட்சம் முதல் 20 லட்சம் வரை தேவைப்படும். இதில் ரிங் கட்டிங் மெஷின், ஸ்ட்ரிப் கட்டிங் மெஷின், ஸ்டீல் பிரிப்பான் போன்ற மிஷினரிகளுக்கு மட்டும் 10 முதல் 12 லட்சம் ரூபாய் வரை செலவாகும். இந்த தொழிலை செய்வதற்கு மொத்தமாக 30 லட்சம் தேவைப்படும்.

தயாரிக்கும் முறை:

recycling business

இயந்திரத்தில் டயர்களை சேர்த்து எரிக்க வேண்டும். அப்படி அவற்றை எரிக்கும் போது அதிலிருந்து கிடைக்கும் பொருட்களை கேஸ், ஆயில், ஸ்டீல், கார்பன் என்று தனி தனியாக பிரித்து விற்பனை செய்யலாம்.

வருமானம்:

ஒரு நாளிற்கு 4000 லிட்டர் Fuel Oil உற்பத்தி செய்யலாம். ஒரு மாதத்திற்கு 1,04,000 லிட்டர் Fuel Oil ஆயில் தயார் செய்ய முடியும்.

ஒரு லிட்டர் Fuel Oil 40 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு மாதத்திற்கு  41,60,000/- வருமானம் கிடைக்கும்.

Black Carbon Powder ஒரு நாளிற்கு 3,000 கிலோ கிடைக்கும் ஒரு மாதத்திற்கு 78,000/- கிலோ கார்பன் கிடைக்கும்.

ஒரு கிலோ கார்பனை 8 ரூபாய்க்கு விற்பனை செய்யலாம். ஒரு மாதத்திற்கு 6,24,000/- ரூபாய் வருமானம் கிடைக்கும்.

Steel ஒரு நாளுக்கு 1,800 கிலோ கிடைக்கும். ஒரு மாதத்திற்கு  36,000 கிலோ ஸ்டீல் கிடைக்கும். ஒரு கிலோ ஸ்டீல் 20 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.  ஒரு மாதத்திற்கு 7,20,000 ரூபாய் வருமானம் கிடைக்கும்.

உங்கள் தயாரிப்புகளை டீலருக்கு பதிலாக நேரடியாக நீங்களே நிறுவனத்திற்கு விற்றால் அதிக லாபத்தை பெறலாம். ஒரு டயர் மறு சுழற்சி செய்வதனால் 20 % வரை லாபம் கிடைக்கும்.

இதையும் படியுங்கள் ⇒ வருங்காலத்தில் இந்த தொழிலுக்கு தான் அதிக Demand இருக்க போகிறது..!

இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில் போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்  —> siru tholil ideas in tamil

 

SHARE