கிராமத்தில் என்ன தொழில் செய்யலாம் – Village Business Ideas in Tamil
நண்பர்களுக்கு வணக்கம்.. தினமும் புது புது தொழில் வாய்ப்புகளை பற்றி பதிவு செய்து வருகிறோம். அந்த வகையில் இன்றைய பதிவில் கிராமத்தில் இருக்கக்கூடிய நபர்கள் எது மாதிரியான தொழில் செய்யலாம் என்பதை பற்றி தான் பார்க்கப்போகிறோம். பொதுவாக கிராமங்களில் பெரும்பாலும் அனைத்து அத்தியாவசிய விஷயங்களும் இருக்கும் என்று கண்டிப்பாக நாம் எதிர்பார்க்க முடியாது. ஆகவே உணங்கள் கிராமத்தில் எது மாதிரியான பொருட்களை வாங்க மக்கள் அதிக தூரம் செல்கின்றனர் என்பதை முதலில் தெரிந்து கொள்ளுங்கள். அதன்பிறகு அவற்றை நீங்களே வாங்கி விற்பனை செய்வதன் மூலம். நல்ல வருமானம் பெறமுடியும். சரி வாங்க கிராமத்தில் என்ன தொழில் செய்யலாம் என்பதை பற்றி இப்பொழுது நாம் பார்க்கலாம் வாங்க.
Small Business Ideas in Tamilnadu Villages in Tamil:
பல சரக்கு கடை:
Village Business Ideas in Tamil – பொதுவாக கிராமங்களில் அன்றாட உபயோகப் பொருட்களை வாங்கும் கடை இல்லாததால் சிறு விஷயங்களுக்காக நகரத்திற்கு செல்பவர்கள் ஏராளம். ஆகவே நீங்கள் உங்கள் கிராமத்தில் ஒரு பல சரக்கு கடை வைத்தீர்கள் என்றால் நல்ல வருமானம் பெற முடியும். ஆறாம் காலத்தில் உங்கள் வீட்டின் வாசலிலேயே சிறிய கடை வைத்து ரூ.10,000 முதல் 20,000 வரை முதலீடு இந்தத் தொழிலைத் தொடங்கலாம். இதன் மூலம் நல்ல வருமானம் பார்க்க முடியும். அதன் பிறகு உங்கள் கடையை நீங்களே டெவெலப் செய்துகொள்வீர்கள்.
உரம் மற்றும் விதை கடை:
கிராமத்தில் உரம் விதைத் தொழிலைத் தொடங்குவது ஒரு நல்ல தொழில் யோசனையாகும். விவசாயங்கள் உரம் மற்றும் விதைகளை உங்களிடமே வாங்கி கொள்வார்கள். உரம் மற்றும் விதைக் கடையைத் திறப்பதன் மூலம், நீங்கள் கிராமத்தில் வசிக்கும் விவசாயிகளின் நேரத்தையும் மற்றும் பணத்தையும் மிச்சப்படுத்தலாம். உரங்கள் மற்றும் விதைகள் நகரத்தில் உங்களுக்கு எளிதாகக் கிடைக்கும். மாதம் ஒருமுறை அல்லது இரண்டு முறை நகரத்திருக்குச் சென்று தேவையான அனைத்துப் பொருட்களை வாங்கினால் போதும். இதன் மூலமும் நல்ல வருமானம் செய்யலாம்.
Work From Home – சூப்பரான பிசினஸ் ஐடியா..!
கால்நடை வளர்ப்பு:
ஆடு, மாடு, நாட்டு கோழி, எருமை போன்றவற்றை வளருது அதன் மூலம் நல்ல வருமானம் பெறமுடியும். உங்கள் முதலீடு இந்த விலங்குகளுக்குஉணவளிப்பதற்கு மட்டுமே பயன்படும். குறிப்பிட்ட நாட்களுக்குப் பிறகு அவற்றை நல்ல பணத்திற்கு விற்கலாம்.
மீன், இறால், நண்டு வளர்ப்பு:
அசைவ பிரியர்களுக்கு மிகவும் பிடித்த உணவுகளாக மீன், இறால், நண்டு இந்த மூன்றுமே விளங்குகிறது. ஆகவே நீங்கள் இவற்றில் ஏதேனும் ஒன்றை வளர்த்து விற்பதன் மூலம் நல்ல வருமானம் பெற முடியும்.
துணிக்கடை வியாபாரம்:
பெரும்பாலும் கிராமத்தில் உள்ள மக்கள் ஏதாவது விஷத்திற்கு துணி எடுக்க வேண்டும என்றால் நகரத்திற்கு தான் செல்வார்கள். ஆகவே உங்கள் ஊரில் நீங்கள் சிறிய துணி கடை வைத்து வியாபரம் செய்தீர்கள் என்றால் நல்ல லாபம் பார்க்க முடியும். சிறிய அளவில் இந்தத் தொழிலைத் தொடங்கிய பிறகு, காலப்போக்கில் அதையும் வளர்க்கலாம். உங்கள் கிராமத்தில் எந்த மாதிரியான ஆடைகளை மக்கள் விரும்பி அணிய விரும்புகிறார்களோ, அதே மாதிரியான ஆடைகளை விற்பனைக்கு கொண்டு வர வேண்டும். இதனுடன், நீங்கள் தையல் வேலைகளையும் செய்யலாம், இது உங்கள் வருமானத்தை அதிகரிக்கும். குழந்தைகள் ஆடைகள் முதல் முதியோர் ஆடைகள் வரை அனைத்து வகையான ஆடைகளையும் விற்பனை செய்யலாம்.
இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில் போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Siru Tholil Ideas in Tamil |