Maligai Saman Wholesale Business
இன்றைய கால கட்டத்தில் பணத்தை சேமிப்பதை விட சம்பாதிப்பதே பெரிய கஷ்டமாக இருக்கிறது. போட்டி நிறைந்த இவ்வுலகில் என்ன தொழில் செய்வது என்று தெரியாமல் இருக்கின்றனர். சில நபர்களிடம் யோசனைகள் இருக்கும், ஆனால் அதற்கான முதலீடு இருக்காது. எல்லாருக்கும் உதவும் வகையில் நம் பதிவில் நிறைய வகையான தொழில் யோசனைகளை பதிவிட்டு வருகிறோம். அந்த வகையில் இன்றைய பதிவில் மளிகை கடை தொழிலை பற்றி தெரிந்து கொள்வோம் வாங்க..
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👉 https://bit.ly/3Bfc0Gl |
Wholesale Maligai Kadai:
மளிகை கடை தொழில் என்பது என்றுமே அழிவில்லாத தொழில். அனைவரும் வீட்டிலேயும் டீ, காபி முதல் குழம்பு கூட்டு செய்வது வரைக்கும் தேவையானது மளிகை பொருட்கள் தான். மளிகை பொருட்கள் இல்லாமல் எந்த உணவு செய்ய முடியாது. அதனால் இந்த தொழிலுக்கு எப்பொழுதுமே Demand றிற்கும். அதனால் இந்த தொழில் whole sale முறையில் செய்வது எப்படி என்று தெரிந்து கொள்வோம் வாங்க..
பெண்கள் வீட்டில் இருந்தபடியே தினமும் 2 மணிநேரம் வேலை செய்தாலே 5,000 ரூபாய் வரை சம்பாதிக்கலாம்
இடம்:
இந்த தொழிலுக்கு முக்கியமாக தேவைப்படுவது இடம் தான். இந்த இடத்தை நல்ல மெயினாக உள்ள இடமாக பார்த்து வாங்க வேண்டும். அப்போது தான் வியாபாரம் நன்றாக ஆகும். ஒரு ஊருக்கு 10 மளிகை கடைகள் இருக்கும், ஆனால் மொத்த மளிகை கடை இருப்பது அரிதான விஷயம். அதனால் இந்த தொழிலை நீங்கள் ஆரம்பித்தால் விற்பனை மற்றும் லாபம் இரண்டுமே பார்க்கலாம்.
முதலீடு மற்றும் மூலப்பொருட்கள்:
இந்த தொழிலுக்கு முதலீடு என்று பார்த்தால் 50,000 ரூபாய் மளிகை பொருட்களை வாங்குவதற்கு மட்டும் தேவைப்படும். சொந்த கடையாக இருந்தால் எந்த பிரச்சனையும் இல்லை. அதுவே வாடகை கடையாக இருந்தால் அதற்கு தனியாக வாடகை கொடுக்க வேண்டியிருக்கும்.
நீங்கள் மூலப்பொருள்களை மொத்தமாக கிடைக்க கூடிய இடத்தில் வாங்கினால் விலை மலிவாகவும் இருக்கும், லாபமும் கிடைக்கும். நீங்கள் வாங்கிய விலையிலிருந்து குறிப்பிட்ட தொகையை லாபம் வைத்து விற்கலாம்.
வீட்டில் இருந்தபடியே தினமும் ஆயிரக்கணக்கில் சம்பாதிக்கலாம்
வருமானம்:
இந்த தொழிலுக்கு வருமானம் என்று பார்த்தால் 2 லட்சம் சம்பாதிக்கலாம். இதனை விட அதிகமாகவும் சம்பாதிக்கலாம், குறைவாகவும் சம்பாதிக்கலாம் அவை விற்பனையை பொறுத்து மாறுபடுகிறது.
இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில் போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | siru tholil ideas in tamil |