இயற்கை விவசாயம் மரிக்கொழுந்து சாகுபடி முறை..!

மரிக்கொழுந்து சாகுபடி

இயற்கை விவசாயம் மரிக்கொழுந்து சாகுபடி முறை..!

தவனம் என்றழைக்கப்படும் மரிக்கொழுந்து ஒரு நறுமணத் தாவரமாகும். இச்செடிகள் இவற்றின் மணமுள்ள இலைகளுக்காகவும், அதிலிருந்து தயாரிக்கக் கூடிய நறுமண எண்ணெய்க்காகவும் சாகுபடி செய்யப்படுகிறது. மாலைகளிலும், மலர் செண்டுகளிலும் இதன் இலைகள் அவற்றின் நறுமணத்திற்காக அதிகம் பயன்படுத்தப்படுகிறது. இதன் நறுமண எண்ணெய் அழகு சாதனப் பொருட்களுக்கு நறுமணமூட்டவும், வாசனைத் திரவியங்கள் தயாரிக்கவும் அதிகளவு பயன்படுத்தப்படுகிறது.

செண்டு மல்லி பூ சாகுபடி முறை..!

 

சரி இன்று இயற்கை விவசாயம் பகுதியில் மரிக்கொழுந்து சாகுபடி முறையினை பற்றி தெளிவாக படித்தறிவோம் வாங்க..!

இரகங்கள்:

மரிக்கொழுந்து சாகுபடிப் பொறுத்தவரை சின்னமனூர், பி கே எம்-1 ஆகிய இரகங்கள் சாகுபடிக்கு பயன்படுத்தப்படுகின்றது.

பருவம்:

மரிக்கொழுந்து சாகுபடி பொறுத்தவரை ஜூன், ஜூலை மாதங்களில் மரிக்கொழுந்து சாகுபடி செய்வதற்கு ஏற்ற பருவகாலங்கள் ஆகும்.

நிலம்:

மரிக்கொழுந்து சாகுபடி (Davana Cultivation) பொறுத்தவரை வளம் செறிந்த செம்மண் நிலங்களிலும், நல்ல வடிகால் வசதியுள்ள வண்டல் நிலங்களிலும் நன்கு வளரும். மிதமான மழை, நல்ல சூரிய ஒளி, காலை பனி ஆகியவை நல்ல விளைச்சல் கிடைக்க உதவுகின்றன.

விதையளவு:

மரிக்கொழுந்து சாகுபடி (Davana Cultivation) பொறுத்தவரை விதை மூலம் சாகுபடி செய்யப்படுகின்றது. ஒரு ஏக்கருக்கு 1.50 கிலோ விதைகள் தேவைப்படும். ஓராண்டுக்கு மேலான பழைய விதைகள் முளைப்புத் தன்மையை இழந்து விடுவதால் முந்தின பருவத்து பயிரிலிருந்து எடுக்கப்பட்ட விதைகளை பயன்படுத்த வேண்டும்.

விதை நேர்த்தி:

மரிக்கொழுந்து சாகுபடி பொறுத்தவரை 1 கிலோ விதைக்கு 50 கிராம் சூடோமோனாஸ் கொண்டு விதை நேர்த்தி செய்ய வேண்டும்.

நாற்றங்கால் தயாரித்தல்:

மரிக்கொழுந்து சாகுபடி (Davana Cultivation) பொறுத்தவரை நாற்றங்கால் பாத்திகள் 2 மீட்டர் நீளமும், 1 மீட்டர் அகலமும் உடையதாக அமைக்க வேண்டும்.

ஒரு பாத்திக்கு 5 கிலோ மக்கிய தொழுஉரம், 2 கிலோ வேப்பம் புண்ணாக்கு வீதம் இட்டு மண்ணோடு நன்றாக கலக்க வேண்டும். விதைகளை 10 கிலோ மணலுடன் கலந்து, சுமார் 3 கிராம் விதை 1 சதுர மீட்டர் பரப்பளவில் விழுமாறு தூவி விதைக்க வேண்டும்.

பின்பு விதைகளை மணல் தூவி மூடவேண்டும். பூவாளி கொண்டு ஒரு நாளைக்கு இருமுறை தண்ணீர் தெளிக்க வேண்டும். விதைத்த 3-4 நாட்களில் விதைகள் முளைக்க ஆரம்பிக்கும்.

விதைகளை ஈரத்துணியில் 48 மணி நேரம் ஊறவைத்து, முளைக்கட்டியும் விதைக்கலாம்.

நிலம் தயாரித்தல்:

மரிக்கொழுந்து சாகுபடி (Davana Cultivation) பொறுத்தவரை சாகுபடிக்கு ஏற்ற நிலத்தை இரண்டு அல்லது மூன்று முறை உழுது ஏக்கருக்கு 15 டன் தொழு உரம் இட்டு, சமன் செய்து கொள்ள வேண்டும். பின் 2 x 2 மீட்டர் அளவில் பாத்திகள் அமைத்து கொள்ள வேண்டும்.

விதைக்கும் முறை:

மரிக்கொழுந்து சாகுபடி பொறுத்தவரை விதைத்த 30 நாட்கள் ஆனா நாற்றுகளை செடிக்கு செடி 10 செ.மீ இடைவெளியும். வரிசைக்கு வரிசை 15 செ.மீ இடைவெளியும் இட்டு நடவு செய்ய வேண்டும்.

நீர் மேலாண்மை:

மரிக்கொழுந்து சாகுபடிப் பொறுத்தவரை செடிகளை நட்ட முதல் மாதங்கள் வரை வாரத்திற்கு ஓரு முறை தண்ணீர் பாய்ச்ச வேண்டும். அதன் பிறகு வாரத்திற்கு ஒரு முறை நீர் பாசனம் செய்தால் போதும்.

உரங்கள்:

மரிக்கொழுந்து சாகுபடிப் பொறுத்தவரை ஒரு ஏக்கருக்கு 15 டன் நன்கு மக்கிய தொழுவுரம், 125 கிலோ தழைச்சத்து, 125 கிலோ மணிச்சத்து மற்றும் 75 கிலோ சாம்பல்ச்சத்து ஆகியவற்றை அடியுரமாக இட வேண்டும்.

பின்பு 50 கிலோ தழைச்சத்தினை நடவு செய்த 25 வது நாள் முதல் மேலுரமாகவும், பின்னர் 25 கிலோ தழைச்சத்தினை ஒவ்வொரு முறையும் அறுவடை செய்த பின்னர் மேலுரமாக இடவேண்டும்.

களை நிர்வாகம்:

செடி நட்ட 30 நாட்களுக்கு ஓரு முறை களை எடுக்க வேண்டும். பின்பு தேவைப்படும் போது களை எடுக்க வேண்டும்.

மல்லிகை பூ சாகுபடி முறைகள்..!

பயிர் பாதுகாப்பு:

அழுகல் நோய்:

அழுகல் நோயினை கட்டுப்படுத்த காப்பர் ஆக்ஸிக் குளோரைடு இரண்டு கிராம் மருந்தை ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்து வேரின் அருகில் ஊற்ற வேண்டும்.

சாறு உறிஞ்சும் பூச்சி:

சாறு உறிஞ்சும் பூச்சிகளின் தாக்குதல் தென்பட்டால் அதனை கட்டுப்படுத்த ஒரு லிட்டர் நீரில் 2 மில்லி டைமீத்தோயேட் பூச்சி கொல்லியினை கலந்து மாலை வேளையில் தெளிக்க வேண்டும்.

அறுவடை:

மரிக்கொழுந்து சாகுபடிப் பொறுத்தவரை விதைத்த 5 – 6 மாதங்கள் வரை இப்பயிரை அறுவடை செய்யலாம். விதைத்த 45 நாட்கள் முதல் அறுவடையும், அதன் பிறகு 3040 நாட்களில் தொடர்ந்து மரிக்கொழுந்து சாகுபடியும் செய்யலாம்.

எண்ணெய் உற்பத்திக்கு, செடிகளில் அதிகளவு பூக்கள் வெடிக்கின்ற தருணத்தில் அதாவது பிப்ரவரி மாதத்தில் தரையிலிருந்து 10 செ.மீ உயரத்தில் அறுத்து எடுக்க வேண்டும்.

மரிக்கொழுந்து சாகுபடி மகசூல்:

மரிக்கொழுந்து சாகுபடிப் பொறுத்தவரை ஒரு ஏக்கருக்கு 9,000 முதல் 10,000 கிலோ உலர்ந்த இலைகளும், 10-12 கிலோ வாசனை எண்ணெயும் மகசூலாகக் கிடைக்கும்.

சொட்டு நீர் பாசனம் அமைக்கும் முறை..! முழு விளக்கம்

 

இதுபோன்ற விவசாயம் பற்றிய முழு விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> விவசாயம் – பயிர் சாகுபடி, உரங்கள், பூச்சி கொல்லி முழு விளக்கம்