How to Grow Garlic Plant at Home in Tamil
வெட்ஜ் முதல் நான்வெட்ஜ் என அனைத்து சமையலுக்கும் நாம் பூண்டினை கட்டாயம் பயன்படுத்துகின்றோம். முக்கியமாக நான்வெட்ஜ் உணவுகளில் பூண்டு இல்லை என்றால் எப்படி? அந்த அளவிற்கு பூண்டானது சமையலில் முக்கிய இடத்தினை பெற்றுள்ளது. பூண்டு இல்லாமல் சமைக்கும் நான்வெட்ஜ் உணவுகள் நன்றாகவா இருக்கும்? பூண்டுகள் சமையலுக்கு மட்டுமன்று பல உடல் பிரச்சனைகளுக்கு மருந்தாகவும் பயன்பட்டு வருகிறது. அத்தகைய பூண்டுகளை நாம் கடைகளில் தான் வாங்குகின்றோம். இனி நீங்களும் உங்கள் வீட்டில் பூண்டு வளர்க்கலாம்.
பூண்டு வளர்ப்பது மிக மிக சுலபமான முறையாகும். உங்கள் வீட்டில் நீங்களும் பூண்டினை வளர்த்து அறுவடை செய்யலாம். நீங்கள் விதைத்து அறுவடை செய்த ஆரோக்கியமான பூண்டினையே உங்கள் சமையலுக்கும் பயன்படுத்தலாம். நாம் இப்பதிவில் பார்க்க இருப்பது வீட்டில் பூண்டு செடி வளர்க்கும் முறைகளை பற்றித்தான்!!!
பூண்டு செடிக்கு மண் கலவை எப்படி தயார் செய்வது?
மண் – 2 பங்கு
- இயற்கை உரம்(மண்புழு உரம் அல்லது கிட்சன் வேஸ்ட் ) – 1 பங்கு
- இந்த இரண்டையும் நன்கு கலந்து எடுத்துக்கொள்ள வேண்டும்.
👉ஈஸியா இனி உங்கள் வீட்டிலையே இஞ்சிச்செடி வளர்க்கலாம்!
விதைக்க ஆரோக்கியமான பூண்டுகளை தேர்ந்தெடுங்கள்:
- நீங்கள் விதைக்க தேர்ந்தெடுக்கும் பூண்டானது பாதிப்பு இல்லாமல் ஆரோக்கியமாக இருக்க வேண்டும்.
- பெரிய பூண்டில் இருந்து பூண்டு பற்களை தனித்தனியாக எடுத்துக்கொள்ள வேண்டும். பூண்டு பற்கள் பெரிய அளவில் இருக்க வேண்டும். ரொம்ப சின்ன அளவிலான பூண்டு பற்களை எடுக்க வேண்டாம்.
பூண்டினை விதைக்கும் முறை :
- பூண்டின் பின் பகுதியானது வேர் பகுதி. வால் போன்ற நுனி பகுதியானது இலை பகுதியாகும்.
- நீங்கள் விதைக்கும் போது பூண்டின் பின் பகுதி அடியில் இருக்கும்படியும், அடி பகுதி மேலே இருக்கும்படியும் மண்ணிலே விதைக்க வேண்டும்.
- 2 இன்ச் ஆழ குழியில்தான் பூண்டினை விதைக்க வேண்டும். நுனி பகுதி லேசாக தெரியும்படி மண் கொண்டு பூண்டினை மூட வேண்டும். ஒவ்வொரு பூண்டுக்கும் இடையில் 4 இன்ச் அளவு இடைவெளி விட்டுத்தான் விதைக்க வேண்டும். அப்போதுதான் பூண்டானது பெரிய அளவில் செழிப்பாக வளரும்.
மண் மற்றும் சூரிய ஒளி:
- தளர்வானதாக இருக்கும் மண் வகைகளை தேர்ந்தெடுக்க வேண்டும். அந்த மண்ணை 10-12 இன்ச் அகலத்தில் வைத்து பூண்டு செடிகளை ஊன்ற வேண்டும். இதனுடன் உரத்தினையும் கலந்துகொள்ள வேண்டும். பூண்டு செடியின் கூர்மையான முனைகள் மேல்நோக்கி இருக்குமாறு பார்த்து நட வேண்டும்.
- பூண்டு செடி நன்றாக வளர அதற்கு சூரிய ஒளி மிகவும் அவசியம். குறைந்தபட்சம் 6 மணிநேரம் வரையாவது பூண்டு சூரிய ஒளியில் இருக்க வேண்டும். சூரிய ஒளி படும் இடத்தில் பூண்டு செடிகளை வைக்க மறக்காதீர்கள்.
- அதேபோல் வெப்பநிலையும் 60 முதல் 80 டிகிரி பாரன்ஹீட் வரையில் இருக்க வேண்டும்.
உரம்:
- ஒரு மாதத்திற்கு இரண்டு முறை பூண்டு செடிக்கு உரம் போட வேண்டும். கரிம உரங்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும். தாவரப் பொருட்கள், விலங்குகளின் கழிவுகள், கழிவுநீர், உணவுக் கழிவுகள் போன்றவற்றையே உரமாக அளிக்க வேண்டும்.
பூண்டு செடிக்கு தண்ணீர் எவ்வளவு ஊற்ற வேண்டும்:
- பூண்டினை விதைத்த நாளில் இருந்து அது வளர தொடங்கும் முன் வரை நீரினை தெளித்து தான் விட வேண்டும். அல்லது நீரினை ஸ்பிரே கூட செய்யலாம். தினசரி தண்ணீர் விட வேண்டும்.
- செடி வளர தொடங்கிய பின்னர் தான் நீரினை ஸ்பிரே செய்யாமல் ஊற்றிவிட்டு வேண்டும். நீரானது தேங்கும் அளவிற்க்கு தண்ணீர் ஊற்றக்கூடாது. ஊற்றும் நீரானது வடிந்து போய்விட வேண்டும்.
- பூண்டு செடியினை வெயில் மற்றும் நிழல் படும் பகுதியில் வைத்தாலே போதுமானது.
செடி எப்போது வளர ஆரம்பிக்கும்?
- பூண்டானது விதைத்து மூன்று அல்லது ஐந்து நாள் கழித்து முளைக்க ஆரம்பிக்கும்.
- ஒரு வாரத்திற்கு பின் பூண்டு செடியானது இலை விட தொடங்கும்.
- 15 நாளுக்கு பின் பூண்டு செடியானது நெல் பயிர் செடி போன்று இலைகள் விட்டு வளர தொடங்கும்.
👉கருவேப்பிலை செடி வேகமாக வளர என்ன செய்ய வேண்டும்..!
அறுவடை காலம் :
- 100 நாள்களுக்கு பிறகு பூண்டின் இலையானது மஞ்சள் நிறமாக மாற தொடங்கும் அப்போது நீங்கள் பூண்டினை அறுவடை செய்துக்கொள்ளலாம்.
இதுபோன்ற இயற்கை விவசாயம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | இயற்கை விவசாயம் |