களைகளை அழிக்கும் இயற்கை களைக்கொல்லி தயாரிப்பது எப்படி? | Iyarkkai Kalaikkolli
வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். இப்பதிவில் களைகளை அளிக்க இயற்கை களைக்கொல்லி வீட்டிலேயே தயார் செய்வது எப்படி.? என்பதை பின்வருமாறு விவரித்துள்ளோம். களைகளை அழிக்க ரசாயன களைக்கொல்லிகளை பயன்படுத்துவதால், மண் மலடாக்குவதுடன், மனிதன் உடலையும் மலடாகிவிடுகிறது. எனவே களைகளை அழிக்கும் இயற்கை களைக்கொல்லி தயாரிப்பது எப்படி? என்று இங்கு நாம் தெரிந்து கொள்வோம் வாங்க..!
இயற்கை பூச்சி விரட்டி மருந்து தயாரிக்கும் முறை மற்றும் பயன்கள்..! |
இயற்கை களைக்கொல்லி தயாரிப்பது எப்படி – தேவையான பொருட்கள்:-
- மாட்டு கோமியம்
- கடுக்காகொட்டை
- எலுமிச்சம்பழம்
கோரை, அருகு போன்ற களைகளை அழிக்க மேலே கூறப்பட்டுள்ள மூன்று பொருட்கள் இருந்தால் போதும், இந்த இயற்கை களைக்கொல்லியை தயார் செய்துவிட முடியும். அதன் செய்முறை விளக்கங்களை பற்றி இங்கு நாம் தெரிந்து கொள்வோம் வாங்க.
சரியான முறையில் பஞ்சகாவ்யா தயாரிப்பு..! |
இயற்கை களைக்கொல்லி தயாரிப்பது எப்படி?
Iyarkai Kalai Kolli in Tamil:
Step: 1
130 லிட்டர் கோமியத்தை, சேகரித்து பிளாஷ்டிக் தொட்டியில் ஊற்றி மழை, வெயில் படாமல் ஒரு மாதம் வைத்திருக்க வேண்டும்.
Step: 2
தொட்டியின் மேல் பகுதியில் சணல் சாக்கினை கொண்டு, மூடி வைக்கவும்.
பின் மூன்று கிலோ கடுங்காய் கொட்டைகளை வாங்கி, அதனை நன்றாக இடித்து கொள்ளவும்.
Step: 3
1 லிட்டர் கோமியம் சேகரித்து 1 மாதம் மேல் ஆகியதும், அவற்றில் இடித்து வைத்துள்ள கடுங்காய் கொட்டைகளை சேர்க்க வேண்டும்.
Step: 4
பின் அத்துடன் 1 எலுமிச்சை பழத்தை பிழிந்து கலக்கவும். எலுமிச்சை பழதோலையும் அந்த கலவையில் போட்டு கலக்கவும். இவற்றை 15 நாட்கள் ஊற விடுங்கள். தினமும் இரண்டு முறை கலக்கி விட வேண்டும்.
காய்கறி கழிவுகளை உரமாக்குவது எப்படி? |
இயற்கை களைக்கொல்லி மருந்து தெளிக்கும் முறை:-
கோரை புல்லை அழிப்பது எப்படி?(Iyarkai Kalai Kolli in Tamil)
இவ்வாறு 15 நாட்கள் ஊற வைத்த கடுக்காய், எலுமிச்சை கலந்த கலவையை துணியில் வடிகட்டி எடுத்து கொள்ளுங்கள்.
Iyarkai Kalai Kolli in Tamil: ஒரு மாதம் ஆனா பழைய கோமியம் 7 லிட்டர் எடுத்து அதில் கலவையை சேர்த்து கலக்கவும். (களைகள் முற்றி இருந்தால் 5 லிட்டர் சிறுநீர்) கைத்தெளிப்பானை எடுத்து கொண்டு அதில் இந்த கலவையை ஊற்றி களைகளின் அனைத்து பகுதியிலும் படும்படி நன்றாக தெளிக்க வேண்டும். தெளித்த ஒரு வாரத்தில் களைகள் கருக ஆரம்பிக்கும்.
குறிப்பு:-
- கடுங்காய் கொட்டைகளை இடிக்கும் போது மூக்கில் துணி கட்டி கொள்ளவும். அதன் துகள்கள் சுவாசக்குழாய்கள் வழியாக சென்றால் காய்ச்சலை உண்டாக்கிவிடும்.
- தெளிப்பிற்கு கைதெளிப்பானை மட்டுமே பயன்படுத்த வேண்டும். தெளிக்கும் பொழுது பயிரின் மேல் படாமல் பார்த்து கொள்ளவேண்டும்.
- தெளிப்பிர்க்கு முதல் நாள் தண்ணீர் பாய்ச்சவேண்டும். தெளித்த பின்பு 5 நாட்களுக்கு தண்ணீர் பாய்ச்ச கூடாது.
இது போன்று தகவல்களை மேலும் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | Pasumai Vivasayam in Tamil |