அதிகம் லாபம் தரும் கொடி தக்காளி சாகுபடி செய்வது எப்படி.?

Advertisement

தக்காளி சாகுபடி செய்யும் முறை

நமது அன்றாட சமையலுக்கு அடிப்படையாக இருக்கும் ஒன்றை தான் எப்படி சாகுபடி செய்வது என்று காணப்போகிறோம். அது என்னவென்று தெரியுமா.? தக்காளியை சாகுபடி செய்வது எப்படி என்றுதான் காணப்போகிறோம். நமது வீட்டில் அன்றாட சமையலில் தக்காளி தேவையான ஒன்றாகும். வெங்காயம், பச்சைமிளகாய் இவற்றை போலத்தான் சந்தையில் அதிகம் விற்பனையாகக்கூடிய ஒன்றுதான் தக்காளி.

முக்கியமாக சட்னி, குழம்பு மற்றும் சைவம்,அசைவம் என்று எல்லாத்துக்கும் அதிகளவு பயன்படுகிறது.அதனால் இவற்றின் தேவை அதிகம். எனவே விவசாயிகள் தற்போது தனிப்பயிராக பயிரிட்டு அதிக லாபம் பெறலாம். மக்களிடையே  Demand எப்பொழுதும் இருக்கும் தக்காளியை சாகுபடி செய்வதன் மூலம் அதிகம் லாபம் பெற முடியும்.  சரி வாங்க இப்போது தக்காளி சாகுபடி பற்றி காண்போம்

இதையும் படியுங்கள் ⇒ மாடி தோட்டம் தர்பூசணி சாகுபடி

தக்காளி சாகுபடி- பருவகாலம்:

பிப்ரவரி – மார்ச், ஜூன் – ஜூலை, நவம்பர் – டிசம்பர் போன்ற மாதங்கள் தக்காளி சாகுபடிக்கு உகந்த மாதங்களாகும்.

தக்காளி சாகுபடி – நிலத்தின் பராமரிப்பு:

தக்காளி சாகுபடிக்கு வண்டல் மண் நல்ல விளைச்சலை தரும். நிலத்தை தேர்வு செய்தவுடன் நன்றாக உழுவ வேண்டும். அதன்பிறகு நிலத்தின் ஓரத்தில் உள்ள வரப்பை மண்வெட்டியால் நன்றாக வெட்ட வேண்டும். நிலத்தில் கலையில்லாமல் வைக்க வேண்டும்.

தக்காளி சாகுபடி நாற்றளவு:

ஒரு ஏக்கருக்கு பயிரிட 7500 நாற்றுகள் போதுமானது. நாற்றுகள் குறைந்தது 22 நாட்கள் ஆன நாற்றுகள் தான் வாங்க வேண்டும்.

தக்காளி நாற்று நடுவது எப்படி.?

ஒரு செடி நற்றவுடன் அடுத்த செடி நடுவதற்கு 1 ½ அடி இடைவெளி இருக்க வேண்டும் அகலம் 3 ½ அடி இருக்க வேண்டும். இந்த அளவுகளில்தான் நாற்றை நட வேண்டும்.

தக்காளி செடிக்கு உரம்:

தக்காளி செடிக்கு இயற்கை உரமான எருக்களை பயன்படுத்தலாம்.

தக்காளி செடி பராமரிப்பு:

தக்காளி செடி 2 நாட்களில் வளர்ந்துவிடும். அதன்பிறகு 15 நாட்கள் ஆனதும் களை எடுக்க வேண்டும். அதன்பிறகு உரம் தெளிக்க வேண்டும். உரம் தெளித்த பிறகு செடிகளை ஒட்டி மண் அணைக்க வேண்டும். அடுத்து 5 செடிகளுக்கு ஓரிடத்தில் மொத்தமான கம்பை ஊன வேண்டும். எதற்காக கம்பை ஊணுகிறோம் என்றால் கொடி தக்காளி என்பதால் தொங்கிவிடும் அதனாலதான் கம்புகளை ஊணுகிறோம்.

செடி வளர்ந்து 26வது நாட்களில் பூ விடும். அதன்பிறகு 30வது நாட்களில் செடிகளுக்கு மேல கம்புகளை ஒட்டி கயிறு கட்ட வேண்டும். அதன்பிறகு செடியிலுருந்து மேல உள்ள கையிற் வரை மொத்தமான சனலை கட்ட வேண்டும். இப்போ 30வது நாள் கயிறு கட்டிருக்கோம் அதிலிருந்து 20நாட்கள் ஒருதடவை கட்ட வேண்டும். இதுபோல் 3 தடவை கயிறு கட்டினால் போதுமானது.

தக்காளி செடியின் ஆயுட்காலம்:

மண்ணில் விதைக்கக்கூடிய தக்காளி செடியின் ஆயுட்காலம் 4 மாதம்.

தக்காளி சாகுபடி அறுவடை:

தக்காளி வெளியிடங்களுக்கு சென்றால் செங்காயாக இருக்கும்போதும் அதுவே உள்ளூர்களுக்கு என்றால் பழுத்தவுடன் பறிக்கலாம்.

இதுபோன்ற விவசாயம் பற்றிய முழு விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> தெரிந்துகொள்ளுங்கள் 
Advertisement