வீட்டு தோட்டத்தில் பசுமையான வெந்தய கீரை வளர்க்கலாம்

Advertisement

வெந்தய கீரை வளர்ப்பு

நமது வீட்டிற்கு தேவையானதை நாமே தயாரிப்பது சிறந்தது. உயர்ந்து வரும் விலைவாசி காரணமாக நமக்கு தேவையான காய்கள் மற்றும் கீரைகளை வீட்டில் வளர்த்தால் நம்மால் பசுமையான காய்களை சுவைக்க முடியும். அதைபோல் விலைவாசியையும் கட்டுப்படுத்த முடியும். அந்த வகையில் சில தாவரங்கள் நமது வீட்டு தோட்டதிலே எளிமையாக வளர்க்கலாம்.

அந்தவகையில் இன்று வெந்தய கீரையை நமது வீட்டிலே எப்படி பயிர் செய்வது அதன் வளர்ச்சியை அதிகரிப்பது  என்று  இந்த பதிவில் முழுமையாக பார்க்கலாம் வாருங்கள்..

வீட்டிலேயே வெந்தய கீரை வளர்ப்பது எப்படி.?

மேத்தி’ என்றும் அழைக்கப்படும் வெந்தயம் பருப்பு வகை குடும்பத்தைச் சேர்ந்தது. இந்த தாவரத்தின் விதைகள் மற்றும் இலைகள் இரண்டும் உண்ணக்கூடியவை. விதைகள் மசாலாப் பொருளாகவும், உலர்ந்த இலைகள் மூலிகையாகவும், புதிய இலைகள் கீரைவகை உணவாகவும் பயன்படுத்தப்படுகின்றது.

இந்த வெந்தயக்கீரை சமையல், மசாலா பொருட்கள், அழகுசாதன பொருட்கள், சோப்புகள் மற்றும் மருந்துகல் தயாரிக்க என பல்வேறு வகைகளில் பயன்படுத்தப்படுகிறது.

வெந்தய விதைகள் மூட்டு வலியை நீக்குதல், இரத்த சர்க்கரை அளவைக் குறைத்தல் மற்றும் முடி வளர்ச்சியை அதிகரிக்க என சிறந்த மருத்துவ குணங்கள் நிறைந்ததாக காணப்படுகிறது.

செம்பருத்தி செடியில் 7 நாட்களில் பூக்கள் தாறுமாறாக பூக்க இத Try பண்ணி பாருங்க…..

☑ வெந்தயம்கீரை தாவரம், மண்ணில் நைட்ரஜனின் அளவை சரிசெய்ய உதவுகிறது.

☑ வெந்தய செடியை வளர்க்க, பகுதியளவு சூரிய ஒளி படும் இடத்தைத் தேர்ந்தெடுக்க வேண்டும். அதாவது 4 முதல் 5 மணி நேர சூரிய ஒளிப்படும் இடமாக தேர்தெடுக்க வேண்டும்.

☑ ஒரு இடத்தில் நடுவு செய்தல் அதனின் முதிர்ச்சியடையும் காலம் வரை ஒரே இடத்தில் இருப்பது சிறந்தது. அதனால் வெந்தய செடிகளை கொள்கலன்களில் நடவு செய்யலாம்.

☑ வெந்தய செடிகள் வெதுவெதுப்பான மண்ணில் செழித்து வளரக்கூடியது. எனவே தென்னிந்தியாவில் ஆண்டு முழுவதும் பயிர் செய்யலாம். ஆனால் வடஇந்தியாவில் மார்ச் – ஏப்ரல் முதல் அக்டோபர் முதல் நவம்பர் வரை பயிர் செய்வது சிறந்தது.

7 நாட்களிலே பூக்காத ரோஜா செடியும் துளிர்விட்டு பூக்கள் பூக்க இதை மட்டும் செய்யுங்க..!

☑ வெந்தய செடிகளை நடவு செய்வதற்கு முன்னால் அந்த வெந்தய விதைகளை, அறை வெப்பநிலையில் தண்ணீர் நிரப்பப்பட்ட ஒரு பாத்திரத்தில் விதைகளை ஒரே இரவு ஊற வைக்கவும் மறுநாள் நடவு செய்வதற்கு தண்ணீரை வடிகட்டிய பின்னர் அதனை நடலாம்.

☑ நீங்கள் தேர்தெடுத்த இடத்தில் விதைகளை மண்ணில் சமமாக தூவி, 1/4 அங்குல மண்ணில் விதைகளை மூடவும்.

☑ மண் சமமாக ஈரமாக இருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள், செடிக்கு அதிகமாக தண்ணீர் விடாதீர்கள், தண்ணீர் தேங்கியுள்ள மண் செடியின் வளர்ச்சியை தடுக்கும்.

☑ நடவு செய்த 3 முதல் 4 வாரங்களில் செடி அறுவடைக்கு தயாராகிவிடும்.

இது போன்ற விவசாயம் பற்றி மேலும் தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> இயற்கை விவசாயம் 

 

Advertisement