வாழை மரம் அதிகமாக காய்க்க இந்த உரங்களை மட்டும் போடுங்கள்.!

Advertisement

Homemade Banana Tree Fertilizer in Tamil

வணக்கம் நண்பர்களே. நம் பொதுநலம் பதிவில் பல பயனுள்ள தகவல்களை அறிந்து வருகிறோம். அந்த வகையில் இப்பதிவில் வாழைமரத்தில் அதிக மகசூல் பெற என்னென்ன செய்ய வேண்டும் என்பதை பார்க்கலாம். வாழை எந்தவொரு நோய்களும் தாக்காமல் நன்றாக வளர இந்த மூன்று உரங்களையும் கட்டாயமாக இடுதல் வேண்டும். வாழை மரத்தின் வளர்ச்சிக்கு உரங்கள் மிகவும் முக்கியமான ஒன்று. இதன் அனைத்து பகுதிகளும் நமக்கு வருமானத்தை தரக்கூடியது. எனவே, வாழை மரத்தை முறையாக பராமரிப்பதன் மூலம் அதிக மகசூல் பெறலாம்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

 

செடி முருங்கைக்கு இந்த ஒரு கரைசலை கொடுங்கள்.. தாறுமாறாக காய்கள் காய்க்கும்

Natural Fertilizer For Banana Plants in Tamil:

 வாழை அதிக மகசூல் பெற

வாழை மரத்திற்கு தழைச்சத்து, மணிச்சத்து மற்றும் சாம்பல் சத்து ஆகிய மூன்றும் மிகவும் முக்கியம். இந்த மூன்று சத்துக்களையும் சரியான ளவில் சரியான காலகட்டத்தில் இடுதல் வேண்டும்.

தழைச்சத்து உரங்கள்:

வாழை மரத்திற்கு தழைச்சத்தை கொடுப்பதன் மூலம் வாழை மரம் நன்றாக காய்க்க தொடங்கும். எனவே, நம் முன்னோர்கள் வாழை மரத்திற்கு தழைச்சத்து நிறைந்த உளுந்தினை உரமாக கொடுத்து வந்தனர்.

ஆனால், தழைச்சத்தினை யூரியா என்ற பெயரில் கடைகளில் வாங்கி உரமாக கொடுக்கிறோம். மேலும், தழைச்சத்திற்கு மீன் அமிலம் மற்றும் மாட்டு கோமியம், ஆட்டு எருது, கடலை பிண்ணாக்கு கரைசல் போன்றவற்றில் அதிக தழைச்சத்து உள்ளது. எனவே, இதனை வாழை மரத்திற்கு உரமாக கொடுப்பதன் மூலம் அதிக மகசூல் பெறலாம்.

தென்னை மரத்தின் குரும்பை மற்றும் பூக்கள் கொட்டுவதை தடுக்க இதை செய்யுங்க போதும்

மணிச்சத்து உரங்கள்:

தாவரத்திலன் மகசூலை அதிகப்படுத்தி தருவதில் முக்கிய பங்கு வகிப்பது மணிச்சத்து உரங்கள் தான். எனவே, இயற்கையான மணிச்சத்து அடங்கிய எள்ளுப்புண்ணாக்கு கரைசலை உரமாக கொடுக்கலாம் அல்லது செயற்கையாக சூப்பர் பாஸ்பேட் உரத்தினை கொடுக்கலாம்.

சாம்பல் சத்து:

வாழை மரத்தின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க சாம்பல் சத்து மிகவும் முக்கியமான ஒன்றாக இருக்கிறது. எனவே, வாழைமரத்திற்கு சாம்பல் கரைசலை உறங்க கொடுக்கலாம் அல்லது பொட்டாசியம் உரத்தினை கொடுக்கலாம்.

இந்த மூன்று சத்துக்களையும் வாழை மரத்திற்கு கொடுப்பதன் மூலம் அதிக மகசூலை பெறலாம்.

இது போன்ற விவசாயம் பற்றி மேலும் தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> இயற்கை விவசாயம் 

 

Advertisement