How To Grow Curry Plant Fast From in Tamil
அன்பு நண்பர்களுக்கு வணக்கம்..! இன்றைய பதிவில் கருவேப்பிலை செடி வேகமாக வளர என்ன செய்ய வேண்டும் என்பதை பற்றி தான் தெரிந்து கொள்ள போகிறோம். கருவேப்பிலை வைத்து சமைக்காத உணவுகளே கிடையாது. அந்த காலத்தில் ஒரு பிள்ளை இருக்கும் வீட்டில் கருவேப்பிலை மரம் வளர்க்க வேண்டும் என்று சொல்வார்கள்.
இன்றைய காலகட்டத்தில் நாம் கருவேப்பிலையை கடையில் காசு கொடுத்து வாங்குகிறோம். சிலர் கருவேப்பிலை செடி வீட்டில் வைத்து வளர்த்தோம். ஆனால் அது வளரவே இல்லை என்று புலம்புவார்கள். அப்படி புலம்புபவர்களுக்கு இந்த பதிவு பயனுள்ளதாக இருக்கும். வாங்க நண்பர்களே இந்த பதிவின் மூலம் கருவேப்பிலை செடி எப்படி வளர்ப்பது என்பதை தெரிந்து கொள்வோம்..!
முருங்கை மரத்தில் பூ உதிர்வதை கட்டுப்படுத்த என்ன செய்ய வேண்டும்..? |
கருவேப்பிலை செடி வளர்ப்பது எப்படி..?
கருவேப்பிலை இந்தியாவை பூர்வீகமாக கொண்ட தாவரமாகும். இதை வெப்ப மண்டல தாவரம் என்று கூறலாம்.
கருவேப்பிலை வெப்ப மண்டல தாவரம் என்பதால் இதை நீர் வடிய கூடிய மண்ணில் பயிரிடலாம். அதேபோல செம்மண்ணில் கருவேப்பிலை நன்றாக வளரும்.
அதுபோல இதை விதைகளாகவும் அல்லது செடிகளாகவும் பயிரிடலாம். இதை விதைப்பதற்கு முன் குழியில் எரு மற்றும் மக்கிய உரம் இவற்றை கலந்து போட வேண்டும்.பின் அதன் மேல் கருவேப்பிலை செடியையோ அல்லது விதையையோ விதைக்க வேண்டும்.
இப்படி செய்வதால் கருவேப்பிலை விரைவாக துளிர் விடும். அதுபோல தினமும் கருவேப்பிலை செடியில் காய்கறி கழிவுகளை போடலாம். இது நல்ல உரமாக செடி வளர்வதற்கு உதவும்.
செடி நன்றாக வளர்வதற்கு காலை மாலை என 2 வேலையும் போதுமான அளவு தண்ணீர் ஊற்ற வேண்டும்.
கருவேப்பிலை நன்மைகள் |
கருவேப்பிலை செடி வேகமாக வளர:
- கருவேப்பிலை செடி ஓரளவு வளர்ந்த பின் 15 நாட்களுக்கு ஒருமுறை உரம் போடுவது நல்லது.
- கருவேப்பிலை செடி வேகமாக வளர்வதற்கு மண்புழு உரத்தை போடலாம். அதுபோல செடிக்கு மக்கும் உரத்தையும் போடலாம்.
- இந்த உரத்தை போடும் போது செடியின் மேல் இருக்கும் மண்ணை கிளறி விட்டு உரத்தை வைக்க வேண்டும். பிறகு மறுபடியும் மண்ணை கிளறி விட்டு தண்ணீர் ஊற்ற வேண்டும்.
- நாம் தூக்கி எரியும் வெங்காயத் தோலை இந்த செடிக்கு உரமாக பயன்படுத்தலாம்.
- வேப்பங்கொட்டை புண்ணாக்கை தண்ணீரில் கலந்து வாரத்திற்கு 2 முறை செடிக்கு தெளிக்கலாம்.
- சாம்பல் அல்லது கரித்துண்டு இவற்றை தூளாக செய்து செடியின் ஓரங்களில் உரமாக போடலாம்.
- கருவேப்பிலை செடியை தண்ணீர் தேங்கி நிற்கும் இடங்களில் வளர்க்க கூடாது.
இதுபோல செய்து வந்தால் கருவேப்பிலை செடி வேகமாக வளரும். இலைகளும் நன்கு செழிப்பாக இருக்கும்.
கறிவேப்பிலையை சமையலில் சேர்ப்பதற்கு முன்பு இதை தெரிந்துகொள்ளுங்கள் |
இது போன்ற விவசாயம் பற்றி மேலும் தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | இயற்கை விவசாயம் |