How to Grow Ginger plant at Home in Tamil
இஞ்சி சுவையினை சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வர விரும்புவதில்லை. இருப்பினும் அனைத்து உணவுகளிலும் தவறாமல் இடம் பிடிப்பது இஞ்சிகள்தான். இஞ்சியின் மருத்துவ குணங்கள் பற்றி பல பேருக்கு தெரிவதே இல்லை. இஞ்சி சுவை அதனை உண்போருக்கு முகசுழிப்பினை ஏற்படுத்தும். ஆனால் இஞ்சியின் மருத்துவ குணங்கள் ஏராளம் என்பதை நாம் தெரிந்துக்கொள்ள வேண்டும். சாதாரணமா நாம் குடிக்கிற டீ முதல் செரிமானத்திற்கு நாம் குடிக்கின்ற கசாயம் வரை இஞ்சிகளைதான் பயன்படுத்துகின்றோம். காரணம் செரிமான பிரச்சனைகளுக்கு இஞ்சி ஒரு முக்கிய மருந்தாகும்.
செரிமான கோளாறுகள் ஏற்பட்டால் நாம் முதலில் தேடுவது இஞ்சிகளை தான். அந்த அளவிற்க்கு இஞ்சியானது செரிமான கோளாறுகளுக்கு மிக முக்கிய மருந்தாக பயன்பட்டு வருகிறது. இஞ்சிகள் கடைகளில் அதிகம் கிடைக்கின்றன. இருப்பினும் நம் வீட்டிலையே இயற்கையாக வளர்த்து பயன்படுத்திக்கொள்ளலாமே! இப்பதிவில் பார்க்க இருப்பது உங்கள் வீட்டிலையே ஈசியாக இஞ்சி செடிகளை எப்படி வளர்ப்பது என்பது பற்றித்தான்! இப்பதிவை பயன்படுத்தி நீங்களே உங்கள் வீட்டிகளை ஈஸியா இஞ்சி செடிகளை வளர்க்கலாம்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே: https://bit.ly/3Bfc0Gl
இஞ்சி செடி வளர்ப்பது எப்படி:
இஞ்சி வளர்ப்பில் உங்களுக்கு பராமரிப்பு வேலைகள் அதிகம் இருக்காது. நீங்கள் வைத்தால் மட்டும் போது அதுவே வளர்ந்து உங்களுக்கு பலனை கொடுக்கும்.
மாடித்தோட்டம் கீரை விவசாயம் – புளிச்ச கீரை சாகுபடி..!
மாடித்தோட்டம் கீரை விவசாயம் – புளிச்ச கீரை சாகுபடி..!
- மண்கலவை
- சூரிய ஒளி(sunlight)
- தண்ணீர்
இந்த மூன்று விசயங்களை மட்டும் கவனித்தால் போதும் நீங்க ஈஸியா இஞ்சியினை வளர்த்து அறுவடை செய்யலாம்.
மண்கலவை எப்படி தயார் செய்வது?
- தோட்ட மண் – 1 பங்கு
- இயற்கை உரம்(கம்போஸ்ட் உரம்) – 1 பங்கு
- ஆற்று மணல் – 2 பங்கு
- தோட்ட மண், இயற்கை உரம், ஆற்று மணல் இவற்றை ஒன்றாக சேர்த்து நன்கு கலந்துக்கொள்ள வேண்டும்.
- மண்கலவை இறுக்கமாகவும் பிசுபிசுப்பாகவும் இருந்தால் இஞ்சி செடியானது வேரிலையே அழுகிவிடும்.
- அதனால் செடிக்கு நல்ல வடிகால் வசதி இருக்குமாறு மண்கலவையை தயார் செய்துக்கொள்ள வேண்டும்.
- அப்போதுதான் வேர் அனைத்து பக்கங்களிலும் ஊடுருவி இஞ்சி நன்றாக வளரும்.
- நீங்கள் பால்கனி, மாடிகளில் வளர்க்க விரும்பினால் மணலுக்கு பதிலாக கோகோபீட் கூட எடுத்துக்கொள்ளலாம்(மணல் – 1 பங்கு, கோகோபீட் – 1 பங்கு).
செடிக்கு வடிகால் ஓட்டை(drainage hole) முக்கியம்:
- நீங்கள் இஞ்சி செடி வளர்க்க எந்த பாட்- களை(garden pot) எடுத்து கொண்டாலும் அதில் வடிகால் ஓட்டை(drainage hole) இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும்.
- வடிகால் ஓட்டை வழியாக மண் வெளியே வராமல் இருக்க வடிகால் ஓட்டை மீது சிறிது டைல்ஸ் துண்டை வைத்துவிட வேண்டும்.
- இஞ்சி செடி வளர்க்க 6 இன்ச் உயரம் உள்ள பாட்- களே போதுமானது.
- நாம் கலந்து வைத்துள்ள மண்கலவையை பாட்- களில் நிரப்ப வேண்டும்.
- பிறகு எல்லா மண்ணும் நனையும்படி நீரினை ஊற்ற வேண்டும்.
மண்ணில்லாமல் விவசாயம் செய்வது பற்றி உங்களுக்கு தெரியுமா..?
- நீர் ஊற்றிய பின்னர் நீரானது drainage hole – வழியாக வெளிய வருகிறதா என்பதை பார்த்துக்கொள்ள வேண்டும். drainage hole வழியாக நாம் ஊற்றிய நீரானது வெளியே வர வேண்டும்.
- drainage hole மண் அடைத்து நீரானது வெளியே வராமல் இருந்தால் இஞ்சி செடி அழுகிவிடும். எனவே drainage hole வழியாக நாம் ஊற்றும் நீரானது வெளியே வருகிறதா என்பதை கட்டாயம் பார்த்துக்கொள்ள வேண்டும்.
இஞ்சியினை விதைக்கும் முறை :
- இஞ்சியினை விதைக்க கண்பகுதி இருக்குமாறு இஞ்சியினை வெட்டி எடுத்துக்கொள்ள வேண்டும். சிறிய அளவு இஞ்சியினை எடுத்துக்கொண்டாலே போதும்.
- இஞ்சியினை விதைக்கும் முதல் நாளே இஞ்சியினை கண்பகுதி இருக்குமாறு வெட்டி நிழலில் உலர வைத்து எடுத்துக்கொள்ளவேண்டும். மேலும் இஞ்சியானது ஈரபதத்தன்மை இல்லாமல் இருக்க வேண்டும்.
- இஞ்சியினை மண்ணில் கண் பகுதி மேலே தெரியும்படியும் இஞ்சியின் மற்ற பகுதி மண்ணின் உள் இருக்கும் படியும் லேசாக அமுக்கி விட வேண்டும்.
- பிறகு இஞ்சியின் கண் பகுதி வெளியே தெரியும்படி கண் பகுதியை தவிர மற்ற பகுதிகளை மண் வைத்து மூட வேண்டும். ஒரே தொட்டியில் இன்னும் ஒரு இஞ்சியினை கூட விதைக்கலாம்.
சௌசௌ சாகுபடி முறை இயற்கை விவசாயம்..!
இஞ்சி செடி எப்போது வளர தொடங்கும்?
- நீங்கள் செடி விதைத்த நாளில் இருந்து 2 வாரத்தில் இஞ்சி செடியானது வளர தொடங்கும்.
சூரிய ஒளி(sunlight) தேவை:
- இஞ்சிச்செடி வளர சூரிய ஒளி ரொம்ப முக்கியம். எனவே நாள் முழுவதும் சூரியஒளி நன்றாக படும் இடத்தில் இஞ்சிச்செடியினை வைக்க வேண்டும்.
- குறைந்தது நாள் ஒன்றுக்கு 5 – 6 மணிநேரம் வரை சூரிய ஒளிபடும்படி வைப்பது அவசியம்.
தண்ணீர் எவ்வளவு ஊற்ற வேண்டும்?
- இஞ்சி செடிக்கு அதிகமா தண்ணீர் ஊற்றவும் கூடாது அதே சமயம் மண்ணை காய விடவும் கூடாது.
- அதிக நீர் ஊற்றி மண்ணினை சகதியாக்காமல் சரியான ஈரப்பதத்துடன் மண்ணை பாதுகாக்க வேண்டும். அப்போதுதான் இஞ்சி செடி அழுகாமல் செழிப்பாக வளரும்.
இயற்கை விவசாயம் ரோஜா சாகுபடி முறை முழு விளக்கம்..!
உரம் போட வேண்டுமா?
- உரம் போடா தேவையில்லை. விதைக்கும் போது போட்ட இயற்கை உரமே(கம்போஸ்ட் உரம்) போதுமானது.
இஞ்சியை எப்போது அறுவடை செய்யலாம்?
- இஞ்சி செடியின் அறுவடை காலம் 8 முதல் 10 மாத காலங்கள் ஆகும்.
- இஞ்சிசெடியின் இலையானது லேசாக பழுத்து காயும் தருவாயில் இருக்கும் போது நீங்கள் இஞ்சியினை அறுவடை செய்துக்கொள்ளலாம். அப்போதுதான் இஞ்சி முற்றலாக இருக்கும்.
- இளம் இஞ்சிகள் வேண்டும் என்றால் சற்று முன்னரே அறுவடை செய்துக்கொள்ளலாம்.
உங்கள் வீட்டில் நீங்களும் இஞ்சியினை விதைத்து வளர்த்து அறுவடை செய்யுங்கள். நீங்களே செடி விதைத்து 8 மாதம் காத்திருந்து அறுவடை செய்யும் போது எவ்வளவு சந்தோசமாக இருக்கும்.நன்றி 🙏.
இதுபோன்ற விவசாயம் பற்றிய முழு விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | விவசாயம் – பயிர் சாகுபடி, உரங்கள், பூச்சி கொல்லி முழு விளக்கம் |