வாழைப்பழ கரைசல் | How to Make Banana Peel Water for Plants in Tamil
அனைவருடைய வீட்டிலும் இயற்கையான முறையில் நிறைய பூச்செடிகள், காய்கறி செடிகள் மற்றும் மரக்கன்றுகள் வளர்த்து வருகின்றன. ஆனால் செடிகளை வளர்ப்பது என்பது ஒரு சாத்தியமான செயல் அல்ல. ஏனென்றால் அதனை சரியாக பராமரித்து அதற்கு சரியான அளவில் உரம் மற்றும் தண்ணீர் போன்றவற்றை அளித்தால் மட்டும் நல்ல பலன் கிடைக்கும்.
அதுபோல செடிகள் செழித்து வளரவும் மற்றும் செடியில் நிறைய பூக்கள் மற்றும் காய்கள் காப்பதற்கு கட்டாயமாக பொட்டாசியம், பாஸ்பரஸ் மற்றும் மெக்னீசியம் சத்துக்கள் தேவைப்படும். இந்த மூன்று சத்துக்களில் ஒன்றான பொட்டாசியம் சத்தை தரக்கூடிய வாழைப்பழ கரைசலை வீட்டிலேயே இயற்கையான முறையில் தயாரிப்பது எப்படி என்று தெறிந்துகொள்ள போகிறோம்.
இயற்கை விவசாயத்தின் ஜீவ நாடியான ஜீவாமிர்தம் தயாரிக்கும் முறை !!! |
How to Prepare Valaipala Karaisal:
இயற்கையான முறையில் வாழைப்பழ கரைசல் வீட்டிலேயே தயாரிப்பது எப்படி என்று விரிவாக கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
தேவையான பொருட்கள்:
- கனிந்த வாழைப்பழம்
- நாட்டு சர்க்கரை
வாழைப்பழ கரைசல் தயாரிக்கும் முறை:
ஸ்டேப்- 1
முதலில் கனிந்த வாழைப்பழத்தை எடுத்துக்கொள்ளுங்கள். அதன் பிறகு அந்த வாழைப்பழத்தில் இருக்கும் காம்பினை நீக்கி விடுங்கள்.
ஸ்டேப்- 2
இப்போது காம்பு நீக்கி வைத்துள்ள வாழைப்பழத்தை உங்களுடைய கைகளால் நன்றாக பிசைந்து அப்படியே 5 நிமிடம் வைத்து கொள்ளுங்கள்.
ஸ்டேப்- 3
நீங்கள் வாழைப்பழம் எடுத்துக்கொள்ளும் அளவில் சரியாக பாதி அளவு நாட்டு சர்க்கரை அல்லது வெல்லம் எடுத்துக்கொள்ள வேண்டும்.
5 நிமிடம் கழித்த பிறகு ஒரு பெரிய பாத்திரத்தில் பிசைந்து வைத்துள்ள வாழைப்பழம் மற்றும் நாட்டு சர்க்கரை இரண்டையும் சேர்த்து மீண்டும் நன்றாக கைகளால் பிசைந்து கொள்ளுங்கள்.
ஸ்டேப்- 4
அடுத்ததாக நீங்கள் பிசைந்து வைத்துள்ள வாழைப்பழ கழிவுகளை ஒரு மூடி போட்ட டப்பாவில் பாதி அளவிற்கு சேர்த்து டப்பாவை காற்றுப்புகாத அளவிற்கு மூடி விடுங்கள்.
ஸ்டேப்- 5
தினமும் நீங்கள் கழிவுகளை வைத்துள்ள டப்பாவை குலுக்கி விட வேண்டும். 21 நாட்கள் வரை இதனை போல தொடர்ந்து செய்ய வேண்டும்.
ஆனால் 21 நாட்கள் வருவதற்கு முன்பு டப்பாவை மட்டும் திறக்க கூடாது.
ஸ்டேப்- 6
21 நாட்கள் கழித்த பிறகு ஒரு பெரிய பாத்திரத்தை எடுத்துக்கொண்டு அதில் ஒரு வலையை போட்டு கொள்ளுங்கள். அதன் பிறகு டப்பாவில் இருக்கும் வாழைப்பழ கழிவு தண்ணீரை அதில் ஊற்றி நன்றாக வடிகட்டி விடுங்கள்.
அவ்வளவு தான் வாழைப்பழ கரைசல் தயாராகிவிட்டது.
சரியான முறையில் பஞ்சகாவ்யா தயாரிப்பு..! |
பயன்படுத்தும் முறை:
நீங்கள் தயார் செய்து வைத்துள்ள வாழைப்பழ கரைசலில் 15 மில்லி எடுத்துக்கொண்டு அதனை 1 லிட்டர் தண்ணீரில் கலந்து வீட்டில் இருக்கும் செடிகள் மற்றும் கொடிகளின் மீது தெளித்து விடுங்கள்.
வாரம் 1 முறை இதனை செய்தால் போது செடிகள் அனைத்தும் செழித்து வளர்ந்து நிறைய பூக்கள் மற்றும் காய்கள் காய்க்கும்.
இதுபோன்ற விவசாயம் பற்றிய முழு விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | விவசாயம் |