Sembaruthi Poo Pooka Tips in Tamil
அன்பு நேயர்களே வணக்கம்..! இன்றைய பதிவில் செம்பருத்தி செடி வேகமாக வளரவும் செம்பருத்தி செடியில் அதிகமாக பூக்கள் பூக்கவும் என்ன செய்ய வேண்டும் என்பதை பற்றி தான் தெரிந்து கொள்ள போகிறோம். இதை செம்பருத்தி அல்லது செவ்வரத்தை என்று சொல்வார்கள். இதை சீன ரோஜா என்று சொல்வார்கள். இந்த செம்பருத்தி பூ செடி இல்லாத வீடுகளே இருக்க முடியாது.
இந்த செடியின் பூக்கள் மருத்துவ குணங்களை கொண்டுள்ளது. இதன் இலைகள் முடி வளர்ச்சிக்கு உதவுகிறது. அதுபோல இதன் பூக்களை இறைவனுக்கும் வைத்து வணங்குவார்கள். இவ்வளவு சிறப்பு மிக்க இந்த செம்பருத்தி செடி நன்கு வளர்ந்து பூக்கள் பூக்க என்ன செய்யலாம் என்பதை பார்க்கலாம் வாங்க..!
கருவேப்பிலை செடி வேகமாக வளர என்ன செய்ய வேண்டும்..! |
செம்பருத்தி செடி நன்றாக வளர:
சிலர் வீட்டில் செம்பருத்தி செடி நன்றாக வளர்ந்திருக்கும் ஆனால் பூக்கள் பூக்கவே இல்லை என்று சொல்வார்கள். அதேப்போல சிலர் செம்பருத்தி செடி வைத்தோம் ஆனால் அது வளரவே இல்லை என்று புலம்புவார்கள். அப்படி புலம்புபவர்களுக்கு இந்த பதிவு பயனுள்ளதாக இருக்கும்.
இந்த செடி செம்மண் மற்றும் கரிசல் மண்ணில் நன்றாக வளரக் கூடிய தாவரமாகும். இது ஈரப்பதம் உள்ள இடங்களில் வைத்து வளர்ப்பது நல்லது. அதுபோல செம்பருத்தி செடிக்கு நல்ல காற்றோட்டம் தேவை.
அதனால் செம்மண் எடுத்து கொள்ள வேண்டும். மண்ணில் அரையடி ஆழத்தில் குழியெடுத்து கொள்ள வேண்டும். பிறகு அந்த குழியில் மாட்டு சாணம், மக்கிய உரம் அதுபோல மக்கிய தேங்காய் நார் இவை அனைத்தையும் போட்டு செம்பருத்தி குச்சியை நடவேண்டும்.
பின் மண் போட்டு நன்றாக மூடி தேவையான அளவு தண்ணீர் ஊற்ற வேண்டும். பிறகு 5 அல்லது 7 நாட்களுக்குள் செடி துளிர் விட ஆரம்பிக்கும். அந்த நேரத்தில் 3 நாட்களுக்கு ஒரு முறை தண்ணீர் ஊற்ற வேண்டும்.
பின் 10 நாட்களுக்கு ஒரு முறை மாட்டு சாணத்தை தண்ணீரில் கரைத்து செடிகளுக்கு ஊற்ற வேண்டும்.
இப்படி செய்து வந்தால் செம்பருத்தி செடியில் அதிகமாக கிளைகள் வெடித்து செடி வேகமாக வளரும்.
வீட்டில் செம்பருத்தி செடி வளர்ப்பவர்களா நீங்கள் இந்த பதிவு உங்களுக்கு தான்..! |
செம்பருத்தி பூ பூக்க என்ன செய்ய வேண்டும்:
செம்பருத்தி செடியில் அதிகமாக பூக்கள் பூக்க வாரம் ஒரு முறை உரம் போட வேண்டும்.
- நாம் வேண்டாம் என்று தூக்கி எரியும் வெங்காய தோல் மற்றும் காய்கறி கழிவுகளே போதும். செடியின் அடிப்பகுதியில் இருக்கும் மண்ணை கிளறி விட்டு அதில் இந்த கழிவுகளை போட்டு மறுமுறையும் மண்ணை கிளறி விட வேண்டும்.
- அதுபோல இரவு நேரத்தில் மாட்டு சாணத்தை தண்ணீரில் கலந்து வைத்து மறுநாள் காலையில் இந்த தண்ணீரை செடிக்கு 2 நாட்களுக்கு ஒரு முறை ஊற்ற வேண்டும்.
- செம்பருத்தி செடியில் பூச்சி தாக்குதல் ஏற்படும் என்பதால் சாம்பலை தூவி வரலாம். இதனால் பூச்சி தாக்குதலை தடுக்கலாம்.
இதுபோன்ற முறைகளை பின் பற்றி வந்தால் செம்பருத்தி செடி நன்றாக வளர்ந்து, பூக்களும் அதிகமாக பூக்கும்.
மாடித்தோட்டம் செம்பருத்தி பயிரிடும் முறை மற்றும் அதன் பயன்கள்..! |
முருங்கை மரத்தில் பூ உதிர்வதை கட்டுப்படுத்த என்ன செய்ய வேண்டும்..? |
இது போன்ற விவசாயம் பற்றி மேலும் தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | இயற்கை விவசாயம் |