தக்காளி செடி செழிப்பாக வளர்ந்து பெரிய காய்கள் காய்த்து குலுங்க டிப்ஸ்..!

Advertisement

Thakkali Chedi Valarpathu Eppadi Tamil

பொதுவாக சைவமாக இருந்தாலும் சரி அசைவமா இருந்தாலும் சரி கண்டிப்பாக தக்காளி, வெங்காயம் மற்றும் கறிவேப்பிலை, கொத்தமல்லி பயன்படுத்தாமல் இருப்பதே இல்லை. அப்படி பார்த்தால் இத்தகைய காய்கறிகள் விலை அதிகமாக இருந்தாலும் சரி குறைவாக இருந்தாலும் சரி ஒருபோதும் நாம் பயன்படுத்தாமல் இருப்பது இல்லை. ஏனென்றால் இவற்றை எல்லாம் அத்தியாவசமான ஒன்றாக இருக்கிறது. இவ்வாறு பார்த்தால் சிலர் அத்தியாவசமாக தேவைப்படும் பொருட்களை கடைகளில் வாங்குவதை விட வீட்டிலேயே வளர்த்து வரலாம் என்று தான் யோசிப்பார்த்தால்.

இதன் படி பார்க்கையில் பெரும்பாலான வீடுகளில் தக்காளி செடி, பச்சை மிளகாய் செடி மற்றும் கறிவேப்பிலை என இவை அனைத்துமே வளர்க்கப்படுகிறது. ஆனால் இவ்வாறு செடிகளை வளர்ப்பது நல்ல முறையாக இருந்தாலும் கூட சரியான பராமரிப்பு இல்லை என்றால் அதிக மகசூல் பெற இயலாது. ஆகையால் ஒவ்வொரு செடிக்கும் பராமரிப்பு என்பது முக்கியம். அதனால் இன்றைய விவசாயம் பதிவில் தக்காளி செடி செழிப்பாக வளர்ந்து அதிக காய்கள் காய்க்கும்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

தக்காளி செடி வளர்ப்பு முறை:

  • கீரை வகை
  • வெல்லம்

இப்போது ஏதேனும் ஒரு கீரை வகைகள் அல்லது களைச்செடிகள் என இவற்றில் ஏதாவது ஒன்றை நீங்கள் முதலில் எடுத்துக்கொள்ள வேண்டும். அதன் பிறகு ஒரு பாட்டிலில் இந்த கீரையினை சேர்த்து விட்டு அதற்கு சம அளவு வெல்லம் சேர்த்து 5 நிமிடம் வரை பிசைந்து கொள்ளுங்கள்.

அதன் பிறகு அத்தகைய பாட்டிலை மூடி அப்படியே வெயில் வராது இடத்தில் வைத்து விடுங்கள். பின்பு 7 நாட்கள் கழித்து அந்த பாட்டிலை திறந்து விடுங்கள்.

கடைசியாக இந்த பாட்டிலின் உள்ளே தயாராகி இருக்கும் கரைசலை வடிகட்டி தனியாக வைத்து கொள்ளுங்கள்.

செடிகளுக்கு உரம் கொடுக்கும் முறை:

தக்காளி செடி வளர்ப்பு முறை

அடுத்தபடியாக 1 லிட்டர் தண்ணீருக்கு 5 மில்லி நீங்கள் தயார் செய்து வைத்துள்ள கரைசலை சேர்த்து நன்றாக கலந்து தக்காளி செடிகளின் இலைகள் மீது தெளித்து விடுங்கள்.

இவ்வாறு நீங்கள் காலை அல்லது மாலை நேரங்களில் சூரிய ஒளி செடிகளின் மீது படாத போது ஊற்ற வேண்டும். இந்த கரைசலை மட்டும் நீங்கள் கொடுத்தால் போதும் தக்காளி செடி வேகமாக வளர்ந்து அதிக காய்கள் வைக்க ஆரம்பிக்கும்.

ஜாதி மல்லி வருடம் முழுவதும் பூத்து குலுங்க வெங்காயம் ஒன்று போதும்

இதுபோன்ற விவசாயம் பற்றிய முழு விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> இயற்கை விவசாயம்
Advertisement