வெற்றிலை சாகுபடி
வணக்கம் நண்பர்களே இன்று நம் விவசாய பதிவில் வெற்றிலையை எப்படி சாகுபடி செய்வது என்றுதான் தெரிந்துகொள்ளப்போகிறோம். பொதுவாகவே இந்த வெற்றிலையை சாகுபடி செய்வதன் மூலம் விவசாயிகள் அதிக லாபத்தை பெறலாம். வெற்றிலையின் தேவைகள் நாடு முழுவதும் பல விசேஷங்களுக்காகவும், மருத்துவ குணங்களுக்காகவும் இன்னும் நமது நாட்டில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் இவற்றை எப்படி பாதுகாத்து சாகுபடி செய்வது என்று நம் பதிவின் மூலம் தெரிந்துகொள்ளலாம் வாங்க.
வெண்ணிலா சாகுபடி செய்யும் முறை |
வெற்றிலை வளர்க்கும் முறை:
வெற்றிலையானது எல்லாவிதமான சூழ்நிலைகளிலும் வளராது. இவை குளிர்ந்த சூழ்நிலையில் மட்டும்தான் வளரும், வெயில் காலங்களில் இதனுடைய வளர்ச்சிகள் அதிகமாக இருக்காது.
வெற்றிலை நன்றாக வளருவதற்கு கரும்பை மண் மிகவும் ஏற்றது. வெள்ளையாக இருக்கும் வெற்றிலைக்கு தண்ணீர் இருந்தால் மட்டுமே போதுமானது. கருப்பு வெற்றிலை சாகுபடிக்கு உப்பு தண்ணீர் இருந்தாலே போதுமானது. எனவே விவசாயிகளுக்கு கருப்பு வெற்றிலையை சாகுபடி செய்வது மிகவும் சிறந்ததாக இருக்கும்.
வெற்றிலை சாகுபடி செய்யும் முறை:
முதலில் வெற்றிலை கொடியை வளர்ப்பதற்கு முன்பு அகத்தி விதைகளை விதைத்து அதை செடியாக வளர்க்கவேண்டும்.
அடுத்ததாக அந்த செடிகள் அரையடி உயரம் வளர்ந்த பிறகு 60 நாட்கள் கழித்து வெற்றிலை கொடியை பதியம் போட்டு ஒவ்வொரு அகத்திச்செடிக்கும் 1 அடி இடைவெளியில் இயற்கை உரங்களை செழித்து நடவு செய்ய வேண்டும்.
வெற்றிலைக்கு நீர் பாய்ச்சும் முறை:
வெற்றிலை கொடியை பதியம் போட்ட பிறகு அதற்கு ஐந்து நாட்களுக்கு ஒரு முறையாவது தண்ணீர் பாய்ச்ச வேண்டும். அதன்பிறகு 120 நாட்களுக்கு கழித்த பிறகு வெற்றிலையை பறிக்கலாம்.
இந்த வெற்றிலை கொடிகளை 3 ஆண்டுகளுக்கு 30 நாட்களுக்கு ஒரு முறை இந்த வெற்றிலையை பறித்துக்கொள்ளலாம். அதாவது ஒரு ஏக்கரில் ஒரு மாதத்திற்கு ஒரு முறை 1500 கிலோ வெற்றிலையை பறிக்கலாம். வெற்றிலையை பறித்த பிறகு பூச்சி தொல்லைகள் இல்லமால் இருக்க பூச்சி கொல்லிகள் தெளிக்கவேண்டியது மிகவும் அவசியம்.
வெற்றிலையை பாதுகாக்கும் முறை:
வெற்றிலையை கடுமையான வெயில்களில் பாதுகாப்பது மிகவும் அவசியம். கடுமையான வெயிலின் போது வெற்றிலை இலைகள் கருகிவிடும். அதேபோல் காற்று பலமாக அடிக்கும் பொழுதும் வெற்றிலை கொடிகள் சேதமடைவதற்கும் வாய்ப்பு உள்ளது.
எனவே இதுபோன்ற பிரச்சனைகளில் இருந்து தடுப்பதற்கு அந்த வெற்றிலை கொடிகளை அகத்தி மரத்தின் மேல் படரும் படி சுற்றிவிட வேண்டும். அதேபோல் காற்றினாலும், சூரியன் ஒலியினாலும் சேதங்கள் அடையாமல் இருக்க வெற்றிலையை சுற்றி தென்னங்கீற்றால் வேலி அமைப்பது அவசியம்.
வெற்றிலை வளர உரம்:
வெற்றிலை செடிகள் வளர்வதற்கு, அகத்தி மரம் வளர்ந்த பிறகு அதனுடைய கீரைகளை எடுத்து வெற்றிலைக்கு உரமாக செலுத்தலாம். அந்த கீரைகள் மண்ணில் மக்குவதால் இயற்கை உரமாக மாறிவிடுகிறது. மேலும் வெற்றிலை கொடிகள் நடுவில் வாழை, பச்சை மிளகாய் போன்றவற்றையும் சாகுபடி செய்து லாபத்தை பெறலாம்.
வெற்றிலையை விற்பனை செய்யும் முறை:
வெற்றிலையை சாகுபடி செய்து முடித்த பின்பு உங்கள் ஊரில் உள்ள பெட்டி கடைகள், கடைத்தெருவில் இருக்கும் பெரிய கடைகள் மற்றும் வெளியூர்களுக்கும், வெளிமாநிலங்களுக்கு ஏற்றுமதி செய்து, இதன் மூலம் அதிகமான லாபத்தை பெறலாம். மேலும் இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் நீங்களும் இந்த வெற்றிலை சாகுபடியை செய்துபாருங்கள்.
இதுபோன்ற விவசாயம் பற்றிய முழு விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | விவசாயம் |