தருமபுரி மாவட்ட சத்துணவு அமைப்பாளர் வேலைவாய்ப்பு 2020..! Dharmapuri job vacancy..!

Dharmapuri job vacancy

தருமபுரி மாவட்ட சத்துணவு அமைப்பாளர் வேலைவாய்ப்பு 2020..! Dharmapuri job vacancy..!

தருமபுரி மாவட்டத்தில் உள்ள ஊராட்சி ஒன்றியங்கள் மற்றும் நகராட்சிக்குட்பட்ட பள்ளி சத்துணவு மையங்களில் ஏற்பட்டுள்ள அமைப்பாளர், சமையலர் மற்றும் சமையல் உதவியாளர் காலியிடங்களுக்கு நேரடி நியமனம் மூலம் நிரப்பிட விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இந்த சத்துணவு அமைப்பாளர் வேலைவாய்ப்பு 2020 அறிவிப்பு படி மேல் கூறப்பட்டுள்ள பணிகளுக்கு மொத்தம் 259 காலியிடங்கள் நிரப்பிட உள்ளது. எனவே தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் 05.10.2020 அன்றுக்குள் தங்களுடைய விண்ணப்பங்களை அறிவிப்பில் பரிந்துரைக்கப்பட்டுள்ள அஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

குறிப்பு:-

சத்துணவு அமைப்பாளர், சமையலர் மற்றும் சமையல் உதவியாளர் ஆகிய பணிகளுக்கு தமிழ்நாடு முழுவதும் நடைபெற இருந்த நேர்காணல் தேர்வுகள் கொரோனா நோய்தொற்று காரணமாக தற்பொழுது அரசால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அதன் அறிவிப்பை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்–>NOTICES

 

பல சுவாரசியமான செய்திகளுக்கு எங்கள் YOUTUBE" சேனல SUBSCRIBE" பண்ணுங்க: Pothunalam Youtube

மேலும் கீழ் பரிந்துரைக்கப்பட்டுள்ள கல்வி தகுதி மற்றும் வயது தகுதியை நிறைவு செய்திருக்க வேண்டும். அதேபோல் விண்ணப்பதாரர்கள் குடியிருப்பிற்கும் பள்ளிக்கும் இடையே உள்ள தூரம் 3 கி.மீ சுற்றளவுக்குள் இருக்க வேண்டும்.  இந்த சத்துணவு அமைப்பாளர் வேலைவாய்ப்பு 2020 அறிவிப்பு படி விண்ணப்பதாரர்கள் நேர்காணல் தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். எனவே தகுதி பெற்ற விண்ணப்பதாரர்கள் இந்த நேர்முக தேர்வுக்கு அழைப்பு கடிதம் அனுப்பப்படும். மேலும் முழுமையான விவரங்களை தெரிந்து கொள்ள அதிகாரப்பூர்வ இணையதளத்தை பார்வையிடுங்கள்.

தருமபுரி மாவட்ட சத்துணவு அமைப்பாளர் வேலைவாய்ப்பு 2020 அறிவிப்பு விவரங்கள்:-

நிறுவனம்:புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர் சத்துணவு திட்ட பள்ளி சத்துணவு மையம், தருமபுரி
வேலைவாய்ப்பு வகைதமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு 2020
பணிகள்சத்துணவு அமைப்பாளர், சமையலர் மற்றும் சமையல் உதவியாளர்
மொத்த காலியிடங்கள்259
விண்ணப்பிக்க ஆரம்ப தேதி28.09.2020
விண்ணப்பிக்க கடைசி தேதி05.10.2020
அதிகாரப்பூர்வ இணையதளம்www.dharmapuri.nic.in
பணியிடம்தருமபுரி 

காலியிடங்கள் மற்றும் மாத சம்பளம் விவரங்கள்:-

பணிகள் காலியிடங்கள் எண்ணிக்கை சம்பளம் 
சத்துணவு அமைப்பாளர்74Rs.7,700 – Rs.24,200
சமையலர்118Rs.4,100 – Rs.12,500
சமையல் உதவியாளர்67Rs.3,000 – Rs.9,000
மொத்த காலியிடங்கள் 259

கல்வி தகுதி:-

 • சத்துணவு அமைப்பாளர் பணிக்கு: 10th pass (Gen/ OBC) and 8th Pass/ Fail (ST).
 • சமையலர் பணிக்கு: 8th Pass/ Fail (Gen/ OBC) and தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்கவேண்டும் (ST).
 • சமையல் உதவியாளர் பணிக்கு: 5th Pass/ Fail (Gen/ OBC) and தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்கவேண்டும் (ST).
 • கல்வி தகுதி பற்றிய மேலும் விவரங்களை தெரிந்துக்கொள்ள OFFICIAL NOTIFICATIONஐ DOWNLOAD செய்து பார்க்கவும்.

வயது தகுதி:-

 • Gen/ OBC பிரிவினருக்கு குறைந்தபட்ச வயது 21 ஆண்டுகள் முதல் அதிகபட்ச வயது 40 ஆண்டுக்குள் இருக்க வேண்டும்.
 • ST பிரிவினருக்கு குறைந்தபட்ச வயது 18 ஆண்டுகள் முதல் அதிகபட்ச வயது 40 ஆண்டுக்குள் இருக்க வேண்டும்.
 • வயது தகுதி பற்றிய மேலும் விவரங்களை தெரிந்துக்கொள்ள OFFICIAL NOTIFICATIONDOWNLOAD செய்து பார்க்கவும்.

தேர்ந்தெடுக்கும் முறை:-

 • சத்துணவு அமைப்பாளர் வேலைவாய்ப்பு 2020 காலியிடத்திற்கு விண்ணப்பதாரர்கள் நேரடி நியமனம் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

விண்ணப்ப முறை:-

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை தொடர்புடைய ஊராட்சி ஒன்றியங்கள் / நகராட்சி அலுவலங்களில் மட்டுமே சமர்ப்பிக்க வேண்டும்.

தருமபுரி மாவட்ட சத்துணவு அமைப்பாளர் வேலைவாய்ப்பு 2020 காலியிடத்திற்கு எப்படி விண்ணப்பிக்க வேண்டும்?

 1. www.dharmapuri.nic.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு செல்லுங்கள்.
 2. அவற்றில் தற்பொழுது அறிவிக்கப்பட்டுள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பை தேர்வு செய்யவும்.
 3. பின் அறிவிப்பை கவனமாக படித்து தகுதியை சரிபார்க்கவும்.
 4. தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்ப படிவத்தை டவுன்லோட் செய்யவும்.
 5. பின் விண்ணப்பபடிவத்தை சரியாக பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களின் நகல்களை இணைத்து சம்மந்தப்பட்ட அலுவலகத்திற்கு தங்களுடைய விண்ணப்பங்களை அனுப்பி வைக்க வேண்டும்.
NOTIFICATION & APPLICATION FORM DOWNLOAD HERE>>

 

பொறுப்புத் துறப்பு:

மேல் கொடுக்கப்பட்டுள்ள அனைத்து தகவல்களையும் சம்மந்தப்பட்ட அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு சென்று அங்கு அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பை படித்து சரிபார்த்து கொள்ளவும்..!OUTDATED VACANCIES

Dharmapuri District Cooperative Bank Recruitment 2020..! தருமபுரி மாவட்ட கூட்டுறவு வங்கி வேலைவாய்ப்பு 2020..! Dharmapuri Jobs ..!

கூட்டுறவு வங்கி வேலை வாய்ப்பு 2020:- தருமபுரி மாவட்டத்தில், கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் கட்டுப்பாட்டில் செயல்படும் தருமபுரி மத்திய கூட்டுறவு வங்கியில் (kooturavu vangi velai vaippu 2020) காலியாக உள்ள உதவியாளர், பணிகளை நிரப்புவதற்கு தற்பொழுது புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்று வெளியாகி உள்ளது. எனவே இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் ஆன்லைன் மூலம் வரவேற்கப்படுகிறது. இந்த உதவியாளர் பணிக்கு மொத்தம் 119 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. எனவே தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் 01.04.2020 விண்ணப்பிக்க கடைசி தேதி நீட்டிக்கப்பட்டுள்ளது அதாவது 20.04.2020 அன்றுவரை விண்ணப்பிக்கலாம்.

மேலும் விண்ணப்பதாரர்கள் அறிவிப்பில் பரிந்துரைக்கப்பட்டுள்ள கல்வி தகுதி மற்றும் வயது தகுதியை நிறைவு செய்திருக்க வேண்டும். தருமபுரி மாவட்ட கூட்டுறவு வங்கி வேலைவாய்ப்பு 2020 அறிவிப்பு படி விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இந்த இரண்டு தேர்வு முறையிலும் வெற்றி பெற்ற விண்ணப்பதாரர்கள் தருமபுரி மாவட்ட கூட்டுறவு வங்கிகளில் பணியமர்த்தப்படுவார்கள்.  இந்த எழுத்து தேர்வானது 23.05.2020 & 24.05.2020 ஆகிய தேதிகளில் நடைபெறும்.

சரி இங்கு தருமபுரி மாவட்ட கூட்டுறவு வங்கி வேலைவாய்ப்பு அறிவித்துள்ள (Dharmapuri Central Cooperative Bank Recruitment 2020) அறிவிப்பு விவரங்களை படித்தறிவோம் வாங்க.

Dharmapuri Central Cooperative Bank Recruitment 2020

நிறுவனம்:தருமபுரி மாவட்ட கூட்டுறவு வங்கி.
வேலைவாய்ப்பு வகை:தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு 2020
பணி:உதவியாளர்
மொத்த காலியிடங்கள்:119
பணியிடம்:தருமபுரி
அதிகாரப்பூர்வ இணையதளம்:www.drbdharmapuri.net
அறிவிப்பு வெளியிடப்பட்ட தேதி:11.03.2020
விண்ணப்பிக்க கடைசி தேதி:01.04.2020 விண்ணப்பிக்க கடைசி தேதி நீட்டிக்கப்பட்டுள்ளது அதாவது 20.04.2020 அன்று வரை விண்ணப்பிக்கலாம்
எழுத்து தேர்வு நடைபெறும் தேதி:23.05.2020 & 24.05.2020

Dharmapuri Central Cooperative Bank Recruitment 2020 – தருமபுரி கூட்டுறவு துறை வேலைவாய்ப்பு 2020 – கல்வி தகுதி:

 • விண்ணப்பதாரர்கள் ஏதேனும் பட்டபடிப்புடன், கூட்டுறவு பயிற்சி முடித்திருக்க வேண்டும்.
 • கல்வி தகுதி பற்றிய மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள கீழ் கொடுக்கப்பட்டுள்ள NOTIFICATIONDownload செய்து பார்க்கவும்.

Dharmapuri Central Cooperative Bank Recruitment 2020 – தருமபுரி கூட்டுறவு துறை வேலைவாய்ப்பு 2020 – வயது தகுதி:-

 • விண்ணப்பதாரர்களின் குறைந்தபட்ச வயது 18 ஆண்டுகள் முதல் விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயது 30 ஆண்டுகளுக்குள் இருக்க வேண்டும்.
 • வயது தளர்வு பற்றிய மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள கீழ் கொடுக்கப்பட்டுள்ள NOTIFICATIONDownload செய்து பார்க்கவும்.

Dharmapuri Central Cooperative Bank Recruitment 2020 – தருமபுரி கூட்டுறவு துறை வேலைவாய்ப்பு 2020 – தேர்ந்தெடுக்கும் முறை:

 • எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

Dharmapuri Central Cooperative Bank Recruitment 2020 – தருமபுரி கூட்டுறவு துறை வேலைவாய்ப்பு 2020 – விண்ணப்ப முறை:

 • ஆன்லைன்.

Dharmapuri Central Cooperative Bank Recruitment 2020 – தருமபுரி கூட்டுறவு துறை வேலைவாய்ப்பு 2020 – விண்ணப்ப கட்டணம்:-

 • SC/ ST/ PWD/ Widow போன்ற விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்ப கட்டணம் இல்லை.
 • மற்ற அனைத்து விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்ப கட்டணம் ரூ.250/-

தருமபுரி கூட்டுறவு துறை வேலைவாய்ப்பு 2020 / Dharmapuri Central Cooperative Bank Recruitment 2020 – விண்ணப்ப கட்டணம் செலுத்தும் முறை:-

 • ஆன்லைன்.
 • ஆஃப்லைன்.

தருமபுரி மாவட்ட கூட்டுறவு வங்கி வேலைவாய்ப்பு 2020 காலியிடத்திற்கு எப்படி விண்ணப்பிக்க வேண்டும்?

 1. www.drbdharmapuri.net என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு செல்லவும்.
 2. அவற்றில் “Latest Notification” என்பதில் “Assistant – Dharmapuri Cooperative Town Bank” and “Assistant – Dharmapuri District Central Cooperative Bank” என்ற அறிவிப்பு விளம்பரங்களை தேர்வு செய்யவும்.
 3. பின் அறிவிப்பை கவனமாக படித்து தகுதியை சரி பார்க்கவும்.
 4. தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலம் 20.04.2020 அன்றுக்குள் தங்களுடைய விண்ணப்பங்களை சமர்ப்பிக்கவும்.
 5. இறுதியாக தங்கள் எதிர்கால பயன்பாட்டிற்கு தங்களுடைய விண்ணப்ப படிவத்தை ஒரு print out எடுத்து கொள்ளவும்.
DATE EXTENSION NOTICECLICK HERE>>

 

APPLY ONLINE REGISTRATION LINKCLICK HERE>>
NOTIFICATION 1DOWNLOAD HERE>>
NOTIFICATION 2DOWNLOAD HERE>>

 

பொறுப்புத் துறப்பு:

மேல் கொடுக்கப்பட்டுள்ள அனைத்து தகவல்களையும் தருமபுரி மாவட்ட கூட்டுறவு வங்கி அறிவித்துள்ள அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு சென்று அவற்றில் அறிவித்துள்ள வேலைவாய்ப்பு (Dharmapuri Central Cooperative Bank Recruitment 2020) அறிவிப்பை படித்து சரிபார்த்து கொள்ளவும்..!

இது போன்ற வேலைவாய்ப்பு செய்திகளை உடன்குடன் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—>Employment News Tamil