சத்துணவு அமைப்பாளர் மற்றும் சமையல் உதவியாளர் வேலைவாய்ப்பு 2020..! Tirunelveli Recruitment 2020..!

Tirunelveli jobs 2020

சத்துணவு அமைப்பாளர் மற்றும் சமையல் உதவியாளர் வேலைவாய்ப்பு 2020..! Tirunelveli Recruitment 2020..!

Tirunelveli Jobs: திருநெல்வேலி மாவட்டத்தில் தற்பொழுது புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது திருநெல்வேலி மாவட்டத்தில் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர் பள்ளி சத்துணவு திட்டத்தின் கீழ் பள்ளி சத்துணவு மையங்களில் ஏற்பட்டுள்ள சத்துணவு அமைப்பாளர் மற்றும் சமையல் உதவியாளர் போன்ற பணிகளின் காலியிடங்களை நிரப்ப தற்போது வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. இந்த பணிக்கு மொத்தம் 197 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. எனவே இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் இந்த அறிய வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளவும். தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் அஞ்சல்(Offline) மூலம் தங்களுடைய விண்ணப்பங்களை 03.10.2020 அன்று அல்லது அதற்கு முன் சமர்ப்பிக்கலாம்.

குறிப்பு:-

சத்துணவு அமைப்பாளர், சமையலர் மற்றும் சமையல் உதவியாளர் ஆகிய பணிகளுக்கு தமிழ்நாடு முழுவதும் நடைபெற இருந்த நேர்காணல் தேர்வுகள் கொரோனா நோய்தொற்று காரணமாக தற்பொழுது அரசால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அதன் அறிவிப்பை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்–>NOTICES

 

பல சுவாரசியமான செய்திகளுக்கு எங்கள் YOUTUBE" சேனல SUBSCRIBE" பண்ணுங்க: Pothunalam Youtube

மேலும் விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் பரிந்துரைக்கப்பட்டுள்ள கல்வி தகுதி, வயது தகுதியை நிறைவு செய்திருக்க வேண்டும். இந்த திருநெல்வேலி மாவட்ட வேலைவாய்ப்பு 2020(Tirunelveli district jobs 2020) அறிவிப்புபடி விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம்  தேர்ந்தெடுக்கப்படுவார்கள். மேலும் குடியிருப்பிற்கும் இடையே உள்ள தூரம் 3 கி.மீ சுற்றளவுக்குள் இருக்க வேண்டும். இந்த தேர்வில் வெற்றி பெற்ற விண்ணப்பதாரர்கள் திருநெல்வேலி மாவட்டங்களில் உள்ள பள்ளி சத்துணவு மையங்களில் பணியமர்த்தப்படுவார்கள்.

Tirunelveli Jobs 2020 – அறிவிப்பு விவரம்:

நிறுவனம்புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர் சத்துணவு திட்டம் வேலைவாய்ப்பு
வேலைவாய்ப்பு வகைதமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு 2020 
பணிகள்சத்துணவு அமைப்பாளர் மற்றும் சமையல் உதவியாளர்.
மொத்த காலியிடம்197
பணியிடம்திருநெல்வேலி
மாத சம்பளம்Check advt
அறிவிப்பு வெளியிடப்பட்ட தேதி26.09.2020
விண்ணப்பிக்க கடைசி தேதி03.10.2020
அதிகாரபூர்வ வலைதளம்tirunelveli.nic.in

பணிகள் மற்றும் காலியிடம் விவரம்:

பணிகள் மொத்த காலியிடம் 
சத்துணவு அமைப்பாளர் 40
சமையல் உதவியாளர் 157
மொத்தம் 197

கல்வி தகுதி:

 • கீழ்காணும் பணிகளுக்கு பெண் விண்ணப்பதாரர் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.
 • சத்துணவு அமைப்பாளர் பணிக்கு Gen/ OBC பிரிவினர் 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ST பிரிவினர் 8ஆம் வகுப்பு தேர்ச்சி அல்லது தோல்வி.
 • சமையல் உதவியாளர் பணிக்கு Gen/ OBC பிரிவினர் 5ஆம் வகுப்பு தேர்ச்சி அல்லது தோல்வி, ST பிரிவினர் எழுத, படிக்க தெரிந்திருத்தல் வேண்டும்.
 • கல்வி தகுதி பற்றிய விவரங்களை தெரிந்துக்கொள்ள கீழ் கொடுக்கப்பட்டுள்ள Notificationஐ க்ளிக் செய்து பார்க்கவும்.

வயது தகுதி:

 • Gen/OBC பிரிவை சார்ந்த விண்ணப்பதாரரின் குறைந்தபட்ச வயது 21 ஆண்டுமுதல் அதிகபட்ச வயது 40 ஆண்டுக்குள் இருக்க வேண்டும்.
 • ST பிரிவை சார்ந்த விண்ணப்பதாரரின் குறைந்தபட்ச வயது 18 ஆண்டுமுதல் அதிகபட்ச வயது 40 ஆண்டுக்குள் இருக்க வேண்டும்.
 • மேலும் வயது தளர்வு பற்றிய முழு விவரங்களை தெரிந்துக்கொள்ள Notificationஐ கிளிக் செய்யவும்.

தேர்ந்தெடுக்கும் முறை:

 • நேரடி நியமனம்.

விண்ணப்ப முறை:

 • விண்ணப்பதாரர்கள் விண்ணப்பங்களை அஞ்சல் மூலம் அனுப்பவும். அஞ்சல் முகவரியினை தெரிந்துக்கொள்ள Notificationல் க்ளிக் செய்து பார்க்கவும்.

விண்ணப்ப படிவத்துடன் இணைக்க வேண்டிய சான்றிதழ்கள்:

 • கல்வி தகுதி சான்றிதழ் நகல்
 • வயது தகுதி சான்றிதழ் நகல்
 • சாதி சான்றிதழ் நகல்
 • இருப்பிட சான்றிதழ் நகல்(குடும்ப அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, வருவாய்த்துறை சான்றிதழ், ஆதார் அட்டை இவற்றில் ஏதேனும் ஒன்றனை இணைக்கலாம்).

முன்னுரிமை தகுதிக்கான சான்று விவரம்:

 • விதவை மற்றும் கணவரால் கைவிடப்பட்டவர்களாக இருப்பின் உரிய அலுவலரிடமிருந்து பெறப்பட்ட சான்றிதழ் நகல் இருக்க வேண்டும்.
 • மாற்று திறனாளியாக இருப்பின் அதற்குரிய சான்றிதழ் இருக்க வேண்டும்.
 • கலப்பு திருமணம் புரிந்தவர்களாக இருப்பினும் அதற்கான உரிய சான்று இருத்தல் வேண்டும்.
 • தமிழ் மொழிக்காவலர்/ சுதந்திர போராட்ட வீரர்களின் வாரிசுதாரர்/ தாயகம் திரும்பினோர்/ இலங்கை அகதிகள் போன்றவர்களாக இருப்பின் அதன் சான்றிதழ்.
 • முன்னாள்/இந்நாள் இராணுவத்தில் பணிபுரிந்தவரின் குடும்ப உறுப்பினராக இருந்தால் அதனுடைய சான்றிதழ் நகல் இருத்தல் வேண்டும். (இராணுவ குடும்பத்தில் உள்ள பெண்கள் மட்டுமே விண்ணப்பிக்க இயலும்).

திருநெல்வேலி மாவட்டம் வேலைவாய்ப்பு காலியிடத்திற்கு எப்படி விண்ணப்பிக்க வேண்டும்:

 1. tirunelveli.nic.in என்ற அதிகாரபூர்வ வலைதளத்திற்கு செல்லவும்.
 2. பின் Notices என்பதில் Recruitmentஐ கிளிக் செய்யவும்.
 3. அவற்றில் ‘Filling up of vacancies in School Noon meal Centres-Tirunelveli District’  என்ற வேலைவாய்ப்பு அறிவிப்பு விளம்பரத்தினை தேர்வு செய்யவும்.
 4. அறிவிப்பை கவனமாக படித்து தகுதியை சரிபார்க்கவும்.
 5. தகுதி உள்ள விண்ணப்பதாரர்கள் கடைசி தேதிக்குள் தங்களுடைய விண்ணப்பங்களை சமர்ப்பிக்கவும்.
 6. விண்ணப்ப படிவத்தை தங்களுடைய எதிர்கால பயன்பாட்டிற்கு பிரிண்ட் அவுட் எடுத்து கொள்ளவும்.
OFFICIAL NOTIFICATION & APPLICATION FORM DOWNLOAD HERE>>

பொறுப்புத் துறப்பு:

மேல் கொடுக்கப்பட்டுள்ள அனைத்து தகவல்களையும் திருநெல்வேலி மாவட்டம் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர் சத்துணவு திட்டம் அறிவித்துள்ள அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு சென்று அவற்றில் அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பை படித்து சரிபார்த்து கொள்ளவும்..!Outdated Vacancy 

திருநெல்வேலி பேரூராட்சி உதவி இயக்குனர் அலுவலகம் வேலைவாய்ப்பு 2020 (Tirunelveli Recruitment 2020)..!

திருநெல்வேலி மாவட்டத்தில், பேரூராட்சி உதவி இயக்குனர் அலுவலகத்தில் தற்பொழுது புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. இந்த புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பானது அலுவலக உதவியாளர், துப்புரவு பணியாளர், பேருந்து நிலைய இரவு காவலர், பொருத்துனர் நிலை || மற்றும் மின் வினைஞர் நிலை ||, ஓட்டுநர், மேல்நிலை நீர்த்தேக்க இயக்குபவர், மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி காவலர் பணிகளுக்கு மொத்தம் 64 காலிப்பணியிடங்கள் உள்ளது. எனவே தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் இந்த அறியவாய்ப்பை பயன்படுத்தி கொள்ளவும். இந்த பேரூராட்சி உதவி இயக்குனர் அலுவலக வேலைவாய்ப்பு காலியிடத்திற்கு அஞ்சல்(ஆஃப்லைன்) மூலம் 15.08.2020 அன்றுக்குள் தங்களுடைய விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும்.

மேலும் விண்ணப்பதாரர்கள் அறிவிப்பில் பரிந்துரைக்கபட்டுள்ள கல்வி தகுதி மற்றும் வயது தகுதி நிறைவு செய்திருக்க வேண்டும். மேலும் விண்ணப்பதாரர்கள் இந்த திருநெல்வேலி மாவட்ட வேலைவாய்ப்பு 2020 காலியிடத்திற்கு நேர்காணல்(Interview) மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இந்த தேர்வில் வெற்றி பெற்ற விண்ணப்பதாரர்கள் திருநெல்வேலி மாவட்ட பேரூராட்சி உதவி இயக்குனர் அலுவலகத்தில் மேல் கூறப்பட்டுள்ள பணிகளில் பணியமர்த்தப்படுவார்கள்.

சரி இங்கு திருநெல்வேலி பேரூராட்சி உதவி இயக்குனர் அலுவலகம்  வேலைவாய்ப்பு 2020 (Tirunelveli District Jobs 2020) அறிவிப்பு விவரங்களை படித்தறிவோம் வாங்க..!

Tirunelveli Jobs 2020 – அறிவிப்பு விவரம்:

நிறுவனம்திருநெல்வேலி பேரூராட்சி உதவி இயக்குனர் அலுவலகம்
வேலைவாய்ப்பு வகைதமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு 2020
பணிகள்அலுவலக உதவியாளர், துப்புரவு பணியாளர், பேருந்து நிலைய இரவு காவலர், பொருத்துனர் நிலை || மற்றும் மின் வினைஞர் நிலை ||, ஓட்டுநர், மேல்நிலை நீர்த்தேக்க இயக்குபவர், மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி காவலர் மற்றும் பல பணிகள்.
மொத்த காலியிடங்கள்64
பணியிடம்திருநெல்வேலி
விண்ணப்பிக்க கடைசி தேதி15.08.2020
அதிகாரப்பூர்வ இணையதளம்www.townpanchayat.in

பணிகள் மற்றும் மாத சம்பள விவரம்:

பணிகள் மொத்த காலியிடம் மாத சம்பளம் 
Office Assistant02ரூ. 15,700-50,000/-
Sanitary Worker50
Pump Operator01
Watchman01
Driver03ரூ.19,500-62,000/-
Fitter02
Pump Mechanic01ரூ.15,700-50,000/-
Depot Night watchman01
Bus station collector01
Wireman01ரூ.19,500-62,000/-
Pipe Opener01ரூ. 15,700-50,000/-

 கல்வி தகுதி:-

 • அலுவலக பணியாளர்: 8 ஆம் வகுப்பு தேர்ச்சி மற்றும் மிதிவண்டி ஓட்ட தெரிந்திருத்தல் வேண்டும்.
 • துப்புரவு பணியாளர் மற்றும் பேருந்து நிலைய இரவு காவலர் பணிக்கு தமிழில் எழுத படித்திருத்தல் வேண்டும்.
 • ஓட்டுநர் பணிக்கு 8 ஆம் வகுப்பு தேர்ச்சி மற்றும் கனரக ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும்.
 • பொருத்துனர் நிலை மற்றும் மின்வினைஞர் நிலை || பணிக்கு 10 ஆம் வகுப்பு தேர்ச்சியுடன் சம்மந்தப்பட்ட பிரிவில் ITI தேர்ச்சி இருக்க வேண்டும்.
 • பம்ப் மெக்கானிக் பணிக்கு 8 ஆம் வகுப்பு தேர்ச்சியுடன் சம்மந்தப்பட்ட பிரிவில் ITI தேர்ச்சி இருக்க வேண்டும்.
 • கல்வி தகுதி பற்றிய மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள கீழ் கொடுக்கப்பட்டுள்ள OFFICIAL NOTIFICATION கிளிக் செய்து பார்க்கவும்.

வயது தகுதி:-

 • விண்ணப்பதாரர்களின் குறைந்தபட்ச வயது 18 ஆண்டுகளும், விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயது வரம்பு 30 ஆண்டுகளுக்குள் இருக்க வேண்டும்.
 • வயது தளர்வு பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள கீழ் கொடுக்கப்பட்டுள்ள OFFICIAL NOTIFICATION கிளிக் செய்து பார்க்கவும்.

தேர்ந்தெடுக்கும் முறை:

 • நேர்காணல் தேர்வு.

 விண்ணப்ப முறை:-

 • அஞ்சல்(ஆஃப்லைன்).

அஞ்சல் முகவரி:

 • அஞ்சல் முகவரி பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு சென்று பார்வையிடவும்.

திருநெல்வேலி மாவட்ட பேரூராட்சி உதவி இயக்குனர் அலுவலக வேலைவாய்ப்பு 2020 (Tirunelveli district jobs 2020) காலியிடத்திற்கு எப்படி விண்ணப்பிக்க வேண்டும்?

 • townpanchayat.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு செல்ல வேண்டும்.
 • அவற்றில் தற்போது அறிவித்துள்ள திருநெல்வேலி மாவட்ட வேலைவாய்ப்பு 2020 (Tirunelveli district jobs 2020) அறிவிப்பு விவரங்களை கிளிக் செய்ய வேண்டும்.
 • பின்பு விளம்பரத்தை கவனமாக படித்து தகுதியை சரிபார்க்கவும்.
 • தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் சம்மந்தப்பட்ட அலுவலகங்களில் நேரில் சென்று விண்ணப்ப படிவத்தை பெற்று கொள்ளவும்.
 • பின்பு விண்ணப்ப படிவத்தில் தேவையான ஆவணங்கள் மற்றும் சான்றிதழ்களை இணைத்து விண்ணப்ப படிவத்தை கடைசி தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.
OFFICIAL NOTIFICATION & APPLICATION FORM Download here>>  

பொறுப்புத் துறப்பு:

மேல் கொடுக்கப்பட்டுள்ள அனைத்து தகவல்களையும் திருநெல்வேலி மாவட்டம்  பேரூராட்சி உதவி இயக்குனர் அறிவித்துள்ள அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு சென்று அவற்றில் அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பை படித்து சரிபார்த்து கொள்ளவும்..!

இது போன்ற வேலைவாய்ப்பு செய்திகளை மேலும் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —>Employment news in tamil