திருப்பூர் மாவட்ட வேலைவாய்ப்பு அறிவிப்பு 2021 | Tiruppur District Jobs 2021

Tiruppur Jobs 2021

Outdated Vacancy 

திருப்பூர் மாவட்ட வேலைவாய்ப்பு அறிவிப்பு 2021 | Tiruppur District Jobs 2021

Tiruppur Jobs 2021: திருப்பூர் மாநகராட்சி (Tiruppur Corporation) தற்காலிகமாக வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. திருப்பூர் மாநகராட்சி கொரோனா நோய் தடுப்பு பணிகளை மேற்கொள்வதற்கு தற்காலிமாக மருத்துவர்கள் (Medical Officers) / செவிலியர்கள் (Staff Nurse) / ஆய்வக நுட்பனர்கள் (Lab Technician) / சுகாதார ஆய்வாளர்கள் (Health Inspector) / தகவல் உள்ளீட்டாளர்கள் (Data Entry operator) பணிக்காக அறிவித்துள்ளது. இந்த பணிக்கு மொத்தம் 50 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்பிற்கு பணிபுரிய விரும்பும் விண்ணப்பதாரர்கள் அவர்களுடைய கல்வி தகுதி அசல் சான்றிதழுடன் 21.05.2021 மற்றும் 22.05.2021 (காலை 10:00 AM மணி முதல் மாலை 05:00 PM) வரை நடைபெறும் நேர்காணலில் கலந்துக்கொள்ளவும்.

மேலும் விண்ணப்பதாரர்கள் அறிவிப்பில் பரிந்துரைக்கப்பட்டுள்ள கல்வி தகுதி மற்றும் இதர தகுதிகளை நிறைவு செய்திருக்க வேண்டும். மேலும் இந்த வேலைவாய்ப்பு அறிவிப்பானது ஒப்பந்தம் அடிப்படையில் 6 மாத கால (Six Month) பணிக்காக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணியில் சேருவதற்கான சுய விருப்பு ஒப்புதல் கடிதம் அளிக்க வேண்டும்.

பல சுவாரசியமான செய்திகளுக்கு எங்கள் Telegram" சேனல Join" பண்ணுங்க: Pothunalam Telegram

திருப்பூர் மாவட்ட வேலைவாய்ப்பு – அறிவிப்பு விவரம்:

நிறுவனம்  திருப்பூர் மாநகராட்சி (Tiruppur Corporation)
பணிகள் மருத்துவர்கள் (Medical Officers) / செவிலியர்கள் (Staff Nurse) / ஆய்வக நுட்பனர்கள் (Lab Technician) / சுகாதார ஆய்வாளர்கள் (Health Inspector) / தகவல் உள்ளீட்டாளர்கள் (Data Entry operator)
மொத்த காலியிடம் 50
பணியிடம் திருப்பூர் 
கடைசி தேதி 21.05.2021 & 22.05.2021 (10:00 AM to 05:00 PM)

பணிகள், மொத்த காலியிடம் மற்றும் மாத சம்பளம் விவரம்:

பணிகள் காலியிடம் மாத சம்பளம் 
மருத்துவர்கள் (Medical Officers)10ரூ. 60,000/-
செவிலியர்கள் (Staff Nurse)10ரூ. 12,000/-
ஆய்வக நுட்பனர்கள் (Lab Technician)10ரூ. 15,000/-
சுகாதார ஆய்வாளர்கள் (Health Inspector)10ரூ. 20,000/-
தகவல் உள்ளீட்டாளர்கள் (Data Entry operator)10ரூ. 10,000/-
மொத்த காலியிடம்        50
கல்வி தகுதி:
  • மருத்துவர்கள் (Medical Officers) பணிக்கு MBBS பட்டம் மற்றும் TNMC பதிவு செய்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
  • செவிலியர்கள் (Staff Nurse) பணிக்கு அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்லூரிகளில் DGNM பட்டம் மற்றும் செவிலியர் கவுன்சலில் பதிவு செய்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
  • ஆய்வக நுட்பனர்கள் (Lab Technician) பணிக்கு அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் DMLT / BSC Lab Technician பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
  • சுகாதார ஆய்வாளர்கள் (Health Inspector) பணிக்கு அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் சுகாதார ஆய்வாளர் பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
  • தகவல் உள்ளீட்டாளர்கள் (Data Entry operator) பணிக்கு தமிழ், ஆங்கிலம், Excel, MS Office கணிணியில் பயிற்சி பெற்றிருக்க வேண்டும்.

தேர்ந்தெடுக்கும் முறை:

  • நேர்காணல் 

நேர்காணல் முகவரி:

உறுப்பினர் செயலர் / மாநகர நல அலுவலர் 
திருப்பூர் மாநகர நல சங்கம், பொது சுகாதாரத்துறை, திருப்பூர் மாநகராட்சி, மங்கலம் ரோடு, திருப்பூர் – 641604

OFFICIAL NOTIFICATION DOWNLOAD HERE>>

 

பொறுப்புத் துறப்பு:

மேல் கொடுக்கப்பட்டுள்ள அனைத்து தகவல்களையும் திருப்பூர் மாநகராட்சி அறிவித்துள்ள அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு சென்று  அவற்றில் அறிவித்துள்ள வேலைவாய்ப்பு (Tiruppur Jobs) அறிவிப்பை படித்து சரிபார்த்து கொள்ளவும்..!

இது போன்ற வேலைவாய்ப்பு செய்திகளை உடன்குடன் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—>Today Employment News in tamil 2021