மாவட்ட நலவாழ்வு சங்கம் வேலைவாய்ப்பு அறிவிப்பு 2022..!

Tenkasi District Jobs 2022

தென்காசி மாவட்ட வேலைவாய்ப்பு 2022 – Tenkasi District Jobs 2022

தென்காசி மாவட்டத்தில் தற்பொழுது புதிய வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது தென்காசி மாவட்ட துணை இயக்குநர் சுகாதாரப்பணிகள் அலுவலகம் மற்றும் ஆரம்பம் சுகாதார நிலையம் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்புப்படி தகவல் தொழில்நுட்ப ஒருங்கிணைப்பாளர், கணக்கு உதவியாளர் மற்றும் வாகன ஓட்டுநர் ஆகிய பணிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்கு மொத்தம் 03 காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. ஆகவே இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் அஞ்சல் மூலம் வரவேற்கப்படுகிறது. எனவே இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் 13.04.2022 அன்று அல்லது அதற்கு முன் அறிவிப்பில் பரிந்துரைக்கப்பட்டுள்ள அஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

மேலும் அறிவிப்பில் பரிந்துரைக்கப்பட்டுள்ள கல்வி தகுதி மற்றும் வயது தகுதியை நிறைவு செய்திருக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் இந்த வேலைவாய்ப்பு காலியிடத்திற்கு நேர்காணல் தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படலாம். இந்த வேலைவாய்ப்பு அறிவிப்புப்பற்றிய முழுமையான விவரங்களை தெரிந்துகொள்ள https://tenkasi.nic.in/ என்ற் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு சென்று பார்வையிடுங்கள்.

தென்காசி மாவட்ட வேலைவாய்ப்பு 2022 – அறிவிப்பு விவரம்:

நிறுவனம்மாவட்ட நலவாழ்வு சங்கம் (தென்காசி மாவட்டம்)
பணிகள்தகவல் தொழில்நுட்ப ஒருங்கிணைப்பாளர், கணக்கு உதவியாளர் மற்றும் வாகன ஓட்டுநர்
பணியிடம்தென்காசி
விண்ணப்பிக்க கடைசி நாள்13.04.2022
அதிகாரப்பூர்வ இனையதளம்https://tenkasi.nic.in/

காலியிடங்கள், சம்பளம் விவரங்கள்:

பணிகள் காலியிடங்கள் எண்ணிக்கை சம்பளம்
தகவல் தொழில்நுட்ப ஒருங்கிணைப்பாளர்1ரூ.21,000/-
கணக்கு உதவியாளர்1ரூ.12,000/-
வாகன ஓட்டுநர்1ரூ.9,000/-

கல்வி தகுதி:

  1. தகவல் தொழில்நுட்ப ஒருங்கிணைப்பாளர் பணிக்கு: M.Sc Computer Science (OR) MCA (OR) B.E. Computer Science படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
  2. கணக்கு உதவியாளர் பணிக்கு: B.Com & Tally Course முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
  3. வாகன ஓட்டுநர் பணிக்கு: 8th தேர்ச்சி பெற்று Heavy Driving License வைத்திருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம்.

வயது தகுதி:

  • 32 வயதிற்குள் இருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம்

தேர்ந்தெடுக்கும் முறை:

  • நேர்காணல் தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கலாம்.

விண்ணப்ப முறை:

  • அஞ்சல் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

அஞ்சல் முகவரி:

செயலாளர் மாவட்ட நலவாழ்வு சங்கம் மற்றும் துணை இயக்குநர் சுகாதாரப்பணிகள், துணை இயக்குநர் சுகாதாரப்பணிகள் அலுவலகம் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக வளாகம் தென்காசி மாவட்டம்.

குறிப்பு:

  • விண்ணப்ப படிவங்கள் தென்காசி மாவட்ட tenkasi.nic.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வேலைவாய்ப்பு பிரிவில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.
  • இந்த விண்ணப்பங்களை நேரிலோ/ விரைவு தபால் (Speed Post) மூலமாகவோ சமர்ப்பிக்கலாம்.
APPLICATION FORMCLICK HERE>>
OFFICIAL NOTIFICATIONDOWNLOAD HERE>>
இதுபோன்ற வேலைவாய்ப்பு செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—>Employment News in Tamil